வியாழன், 7 மார்ச், 2019

அப்பா

அப்பா குறைந்தளவுதான் கதைக்கிறார். ஆனாலும் அப்பாவின் ஒற்றைச்சொல்கூட மனதுக்கு மிகவும் ஆறுதலாக இருக்கிறது. பதினைந்துவருடங்களாக அப்பாவையோ அம்மாவையோ நேரில்பார்க்கமுடியவில்லை. முதுமையில் தனிமை எவ்வளவு கொடியது.  அம்மா தன் இயலாமையிலும் அப்பாவை நன்கு கவனிக்கிறார். அப்பா அம்மா என்னை மன்னித்துவிடுங்கள்.  அப்பா 58 வருடங்கள் மருத்துவராய் கடமை செய்தார் (1958 -2015). அதில் 26 வருடங்களுக்கு மேல் வன்னியில் போர்ச்சூழலில் மருத்துவராய் கடமை செய்தார். தன் வாழ்நாளில்  அவர் செய்த நன்மைகளுக்காக நிச்சயமாக திருப்தியான மனநிலையில் இருப்பார். ஆனாலும் தமிழர்களின் எதிர்காலம் பற்றிய கவலையில் உறைந்திருப்பார். இப்போதெல்லாம் அப்பா அம்மாவைப்பற்றிய கவலைகளுடன் என் தனிமை கழிந்துவிடுகிறது.Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக