இயக்கத்தில் விரல் விட்டு எண்ணக்கூடிய அதிவிசேட பயிற்சி முகாம்கள் நடாத்தப்பட்டன. அப்பயிற்சிகளில் ஒரு பயிற்சிபெறுனராகவும் சமகாலத்தில்அம்முகாம்களின் மருத்துவப்பொறுப்பாளனாகவும் வாழ்ந்தகாலங்கள் கடினமானவையாகவும் இயக்கவளர்ச்சிற்கு இன்றியமையாததாகவும் உணர்கிறேன். காலை ஐந்து மணிக்கு துயில் எழுந்தால் இரவு பன்னீரெண்டுக்குப்பின்தான் நித்திரைக்கு செல்வேன். பயிற்சியாளர்களை தேர்வு செய்யும் ஆரம்ப பரிசோதனையில் இருந்து அவர்களது உணவு பட்டியலை தயாரித்து எனது கடமைகள் நீண்டவை. எனது கடமைகளை ஒழுங்காக செய்ததாய் உணர்கிறேன். அதனால்த்தான் என்னவோ தரையில் நடந்த நான்கு அதிவிசேட பயிற்சி முகாம்களுக்கும் நான் தெரிவு செய்யப்பட்டேன். நான்கிலும் பங்குபற்றியவன் இயக்கத்திலேயே நான் மட்டும்தான். இன்று ஒவ்வொரு முகங்களாய் வந்து வந்து போகிறது. நினைவுகள் கொடுமையானவை.
இன்று ஒவ்வொரு முகங்களாய் வந்து வந்து போகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக