சனி, 3 அக்டோபர், 2026

வீழ்ந்து கிடப்பது

நிழல் தந்த மரம் ஒன்றை கெட்டித்தனமாய் வெட்டி வீழ்த்தினான் குருடன் யார் சொல்லும் கேட்கவில்லை செவிடன் நாளை மூச்சுவிட முக்குவான் "மஹாதெனமுத்தா" மூடன் வீழ்ந்து கிடப்பது பசுமை தந்த மரம் மட்டுமல்ல பறவைக்கூடுகள் மட்டுமல்ல பகுத்தறிவும்தான்


Share/Save/Bookmark

ஞாயிறு, 20 செப்டம்பர், 2026

மலரவன்

ஒரு கையில் பேனா மறுகையில் துப்பாக்கி இரண்டிலுமே நீ சுமந்திருந்தது ஈழவிடுதலையை ! வார்த்தைகளால் நீ கோத்த கவிதைகள் யாவும் வெற்றுப் பாடல்கள் அல்ல காடுகளின் மடியில் கண்ணீரும் செந்நீரும் சிந்திய எம் மண்ணின் சாட்சியங்கள்! நீ எழுதிய 'போர் உலா' இன்னும் உலா வருகிறது விடுதலைப் பாதையின் கரடுமுரடான சுவடுகளை காலத்தின் நெஞ்சில் செதுக்கியபடி! இருபது வயதிலேயேஉன் ஆயுள் உதிர்ந்து போயிருக்கலாம் ஆனால் உன் பேனா சிந்திய மை மரணத்தை வென்று இன்றும் எரிகிறது எங்கள் விடியலின் தீபமாய்! மலரவன் என்ற பெயரோடு மண்ணில் வாழ்ந்த நீ மரணித்த பின்னும் மாசற்ற மாவீர வாசம்!


Share/Save/Bookmark

திங்கள், 15 ஜூன், 2026

எழுத்தாளர் சு.ராஜசெல்வி

படத்திற்கான கவிதைப்போட்டியில் சு.ராஜசெல்வியின் சுமார் 280 கவிதைகள் ஈழநாதத்தில் (வெள்ளிநாதம் ) பிரசுரமாகியிருக்கிறது . அதில் 40 கவிதைகள் பரிசுக்குரியதாகவும் மிகுதி பாராட்டுக்குரிய கவிதைகளாகவும் பிரசுரமாகின. சு.ராஜசெல்வி, ரா.சுஜந்தன் , எஸ் ஆர் எஸ் , சு.செல்வி, எஸ்.ஆர்.செல்வி, எஸ்.ராஜி ஆகிய பெயர்களில் இவர் எழுதியிருக்கிறார்.இப்போட்டிகளில் பலதடவைகள் ஒன்றுக்கு மேற்பட்ட கவிதைகள் பிரசுரமாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. இவரது சிலகவிதைகள் வானொலியில் ஒலிபரப்பாயிருக்கிறது.இவர் நிகழ்வுகளிலும் கவிதை வாசித்திருக்கிறார். முகநூலுக்கூடான அகில உலக ரீதியான போட்டிகளில் கவிதைகளுக்காக, புகைப்படங்களுக்காக, சிறுகதைகளுக்காக ஐம்பதிற்கும் மேற்பட்ட வெற்றியாளர் சான்றிதழ்கள் பெற்றிருக்கிறார். இவரது முப்பது விஞ்ஞானக்கட்டுரைகள் போர்க்காலத்தில் கிளிநொச்சியில் வெளியான "விழி " மருத்துவ இதழ்களில் பிரசுரமாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. இவர் எழுதிய "கைவிளக்கு" என்ற சிறுவர் நூல் 2010 ஆம் ஆண்டு வெளியாகியிருந்தது. கொரோனா காலத்தையொட்டி "ஜீவநதி" இதழ் அகில உலக ரீதியாக நடாத்திய கவிதை போட்டியில் தெரிவான கவிதைகளின் கவிதைத்தொகுதியிலும் இவரது கவிதை இடம்பெற்றிருக்கிறது. " தடாகம்" அமைப்பு 2018 ஆம் ஆண் டு உலகம் தழுவிய ரீதியில் 2018 ஆம் ஆண்டு நடாத்திய கவிதைப்போட்டியில் மூன்றாம் இடத்தை பெற்று "கவின்கலை" பட்டத்தையும் பெற்றார். பாடசாலை வாத்திய அணியில் melodica வாத்தியத்தை வாசிப்பவராக இருந்திருக்கிறார்.1998 ஆம் ஆண்டு கிளிநொச்சி புனித திரேசா பெண்கள் கல்லூரியின் "வளர்பிறை" கையெழுத்துச் சஞ்சிகை வடகிழக்கு மாகாணத்தில் பாடசாலை சஞ்சிகைகளுக்கான பிரிவில் இரண்டாம் இடத்தை பெற்றது, இவர் அச்சஞ்சிகையின் ஆசிரிய ஆலோசகருக்கான சான்றிதழை கல்வித்திணைக்களத்திடமிருந்து பெற்றார்.இவர் ஒளிப்படங்கள் எடுப்பதிலும் ஆர்வமுள்ளவர். svartsol12.blogspot.com என்ற வலையிணையத்தில் நோர்வேஜிய மொழியிலும் கட்டுரைகளை எழுதியிருக்கிறார். தாய்நாட்டை விட்டு புலம்பெயர்ந்த பின் தமிழ்பாடசாலையொன்றின் ஆசிரியர்களில் ஒருவராக கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிவருகிறார்.


Share/Save/Bookmark

ஞாயிறு, 14 ஜூன், 2026

துடைத்துவிடும் கைகள் இன்று இல்லை

கண்ணீர் விடுகையில் துடைத்துவிடும் கைகள் இன்று இல்லை என்பது கண்களுக்கு தெரிவதில்லை


Share/Save/Bookmark

ஒப்பாரி தான் வேறொன்றுமில்லை

விடுதலை வேண்டிய மக்களை கொன்று குவிக்கும் குண்டுகளின் சத்தம் உலக மனச்சாட்சி செத்ததிற்கான ஒப்பாரி தான் வேறொன்றுமில்லை


Share/Save/Bookmark

சனி, 13 ஜூன், 2026

எழுதாத என்கவிதை மாவீரர்களிடம் இருக்கிறது

எழுதி முடிக்கப்படவில்லை என் கவிதை - அதை நீ மட்டுமல்ல நானும் அறிவேன் இடைநடுவில் எழுந்துபோதல் என் முடிவல்ல நிரந்தரமில்லாதது யாவும்தான் மகளே! எழுதாத என்கவிதை மாவீரர்களிடம் இருக்கிறது


Share/Save/Bookmark

சனி, 6 ஜூன், 2026

பிள்ளை பசித்து அழ

அப்பு ஆச்சி ஆசையோடு நட்ட தென்னைகள் சந்ததி பசிபோக்க தம் சத்தினை புதைத்த நிலம் சிக்கியிருக்கிறது சிங்கள ஆக்கிரமிப்புக்குள் பிள்ளை பசித்து அழ இளனியை கூட அவரிடம் விலைகொடுத்து வாங்குகிறோம்


Share/Save/Bookmark
Bookmark and Share