கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 7 மே, 2011

யார் செய்தது குற்றம் ?

விடுதலைப் புலிகள் 
மக்களை பாதுகாக்கவே 
பல தடவைகள் 
பகிரங்கமாய் 
யுத்த நிறுத்தம் கேட்டிருந்தனர் 
மறுத்தது சிங்கள அரசு 
மக்கள் செறிபகுதியினுள் 
அதீத செல்,பீரங்கி,விமான தாக்குதலுடன் 
ஊடுருவின சிங்கள படைகள் 

யார் செய்தது குற்றம்?

அரசு 4 இலட்சம் மக்கள் இருக்க
70,000 ஆயிரம் மக்களே
உள் இருப்பதாய் கொடும் பொய் சொன்னது
3 இலச்சம் மக்களை 
மூடிய தேசத்தில் படுகொலை செய்வதே 
அரசின் திட்டமாக இருந்தது 
மிகக் குறைந்த உணவு,மருந்து வழங்கலை
வேண்டா வெறுப்பாய்ச் செய்தது 
விடுதலைப்புலிகள் 
தமது உணவை பகிர்ந்து கொடுத்தனர் 
அவசிய சத்திரசிகிச்சை மருந்துகளைக் கொடுத்தனர் 
பட்டினியில் வாடிய மக்களுக்கு 
இறுதிவரை கஞ்சி ஊற்றினர் 
காயமடைந்தவரை 
மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் 
இடம்பெயர இடம்பெயர 
அரச,வங்கி,மருத்துவமனைகளை 
இடம்மாற்ற 
தம்மாலான அனைத்து 
உதவிகளையும் செய்தனர் 
மருத்துவசேவை  வழங்குதலில்
வி.பு.மருத்துவபிரிவினரே 
உச்ச பங்கு வகித்தனர் 
விடுதலைப்புலிகளின் அறிவுறுத்தல்,உதவி உடன் 
மக்கள் பதுங்ககழி அமைத்தனர் 
பல ஆயிரம் உயிர்கள் காப்பாற்றப்பட்டன  
வைகாசி 15 ஆம் திகதிவரை
வி.புலிகளின் நிர்வாகம் இயங்கிற்று 
மக்கள் சேவைக்காக மட்டும்
சில நூறு போராளிகள் வீரச்சாவு எய்தினர்  

யார் செய்தது குற்றம் ?

வி.பு.  மக்களின் விடுதலைக்காக
தூய மனதுடன் 
இறுதிவரை இயங்கினர் 
நடைமுறையில் 
சில தவறுகள் இருக்கலாம்-ஆனால்
சிங்களம் தவறுகளை 
மிகப் பெரிதாக உலகிற்கு காட்டிற்று 

வி.பு 
மக்கள் இராணுவலைக்குள்
செல்வதை விரும்பி இருக்கவில்லை 
அது ஏன்?
மக்களின் இன்றைய துயர் பதில் சொல்லும்    

தயவு செய்து 
விடுதலைப்புலிகளை ,
வி.பு தலைவனை 
நடுநிலையாக /சுயாதீனமாக 
ஆய்வு செய்யுங்கள் 
விடுதலைப் பற்றை புரிந்து
இன விடுதலைக்காக உழையுங்கள் 

                                                                   -சுருதி-


  


Share/Save/Bookmark

புதன், 4 ஆகஸ்ட், 2010

முத்துக்குமார் பிறந்தமண் அடங்கிப்போகாது.

"வன்னி "
ஒருபோதும்
இவ்வளவு துயரை சுமந்ததில்லை
எல்லையில்லாத் துயர்.-இன்று
அடிமைகளின் ஆன்மா தவிக்கும்
சுடலைப் பூமி.  அம்மா---------



Share/Save/Bookmark

சனி, 5 ஜூன், 2010

தமிழ் திரையுலகிற்கு நன்றி.

பூவரசம்/கிழுவை
இலை கிடைத்திருந்தாலும்
அமிர்தமாய் இருந்திருக்கும்
பச்சை எதுவும் இல்லை
நல்ல காலம்
ஆடு மாடுகளும் இல்லாதது.
அன்று
எங்களது வாழ்வு அப்படி இருந்தது.



Share/Save/Bookmark

சனி, 29 மே, 2010

எழுதா விதிக்கு அழுதா தீருமோ ?

குற்றமறியா திசநாயகத்திட்கு
நீதிமன்று இருபது வருடசிறை
மகிந்தவால் ஒரே நாளில்
கருணை விடுதலை
நீதியின் விலை என்ன?



Share/Save/Bookmark

சனி, 3 ஏப்ரல், 2010

ஓ நாளைமறுதினம் உயிர்த்த ஞாயிறு

 எங்கள் கண்ணீரில்
கை,கால்,முகம் எல்லாம்
கழுவுகிறார் சிங்களர்.

ஒன்றுமில்லாது
ஒதுங்கிக் கிடப்பவரை
வேடிக்கை பார்க்க
தெற்கில் இருந்து
தினம் வருகிறது
மக்கள் கூட்டம்.
காயத்திற்கு
மிளகாய்த்தூள் தடவுவது போல்.



Share/Save/Bookmark

சனி, 27 மார்ச், 2010

காந்தியின் கண்ணீர்

நண்பா உன் சிலையையா
உடைக்கிறார்கள்?

நல்லூரில்
நல்கந்தன் முன்
நலிந்த இனத்தின்
நலன் வேண்டி
நீர் கூட அருந்தாமல்
ஈரேழு நாட்கள்
நீ  எரிந்து
ஒப்பற்ற தியாகமானாய்.

உன்னைக் கொன்று
காந்திதேசம்
காந்தியைக் கொன்றது.

உலக தமிழர் மனங்களில்
நீ வாழ
உன் சிலையை உடைத்தார்
மீண்டும் மஞ்சள் துண்டுக்காய்
கழுத்தறுத்து
தாயைக் கொன்றார்.

பல்கலைப் படிப்பை
மக்களுக்காய்
துறந்தவன் நீ -மீண்டும்
அவர்களுக்காய்
பல்கலை போனாய்
இறந்த உடலாய்.

பாரத பணிமனை
யாழில் திறப்பு
ஈழத்து காந்தியின்
சிலை தகர்ப்பு.

நீதியிலும் ராஜதந்திரமா?
வாழ்வு கூனிக் குறுகிப் போகுமா?

சொந்த மண்ணில்,
மக்களுக்காகவே வாழ்ந்து,
அணுஅணுவாய் இறந்த மண்ணில்
உன் சிலையைக் காப்பாற்ற முடியவில்லை.

மக்கள் புரட்சி வெடிக்கும்
பாரில் எம்தேசம் பிறக்கும்
கனவோடு நீ போனாய்.


Share/Save/Bookmark

வெள்ளி, 19 மார்ச், 2010

பிரியசகி

பிரிவு 
கிழக்கு  மேற்காகிறது.
மனதுகள்  மட்டும் 
ஒருபுள்ளியாய்,
பூமியாய்  சுழல்கிறது.

மனதை  எழுதி, மடித்து 
கடிதமாய்  அனுப்ப 
முகவரிகள்  ஏது?


Share/Save/Bookmark

செவ்வாய், 16 மார்ச், 2010

தனியரசு

தமிழர் தாயகத்தை 
அந்நியர் வந்து, அநியாயம் செய்து,
இரு தேசத்தை ஒரு தேசமாய்,
ஒன்றை சிரச்சேதம் செய்தனர்.
தம் நலனுக்காய். 

தனித் தமிழ் தேசத்தை 
நடுக் கடலில் 
தத்தளிக்க விட்டுச் சென்றனர்.
தத்துப் பிள்ளையாக்கி.
தம் நிலத்தை,
தம் இனத்தை 
தாமே ஆளல் தவறா?
தனியரசு வேண்டாமாம்.
தரணி எங்கும்   தனியரசுகள் தான் 
தறி கெட்டுச் சொல்கின்றன. 


Share/Save/Bookmark

செவ்வாய், 9 மார்ச், 2010

கோடை விடுமுறை எனக்கும் அவனுக்கும்

எனது நாட்கள் அழகானவை,
வீட்டைவிட்டு நெடுந்தூரப் பயணம் - மகிழ்வுடன்
வெட்டை வெளியில் “tent” அடித்து – சுகமான
காற்றை அனுபவித்த இரவுகள்
நெருப்புமூட்டி வாட்டியயுணவு உண்டு இரசித்த –அழகான
பகல்ப் பொழுதுகள்
அப்படிக் கழிந்த விடுமுறைக்காலம் இங்கே எனக்கு.

எப்படியிருக்கு எனது தம்பியின் விடுமுறை…??
அவனும்..
வீட்டைவிட்டு நெடுந்தூரம்தான் பயணிக்கின்றானம்- ஆனால்
துயரத்துடன்
வெட்டை வெளியில் ”tent” அடித்துத்தான் இருக்கின்றானாம் - ஆனால்
கந்தகநொடியை சுவாசித்துக் கொண்டு
வாட்டிய உணவையாவதும் உண்ணலாமாம் - ஆனால்
வாட்டத்தான் உணவில்லையாம்
இப்படிக் கழிகின்றது விடுமுறைக்காலம் அங்கே அவனுக்கு!
அவனது நாட்கள் துன்பமானவை!!

-கதிரவன்-


Share/Save/Bookmark

ஞாயிறு, 7 மார்ச், 2010

புத்தாண்டு எனக்கும் அவளுக்கும்

அவள் எடுத்தாளே அழைப்பு என்பதே விதி

இன்றும் அப்படித்தான் அவளே எடுத்தாள்


"எப்படியண்ணா புத்தாண்டு?"

நான் கேட்கத் தயங்கியதை

அவளே கேட்டுவிட்டாள்.

இண்டைக்கு ஒருநாள் ஒரே வெடிச்சத்தங்கள் தான்

அண்ணார்ந்து பார்க்கவே அழகாய் உள்ளது வானம் என்றேன் நான்

ஒவ்வொரு நாளும் வெடிச்சத்தங்கள்தான் எங்களுக்கு வாழ்க்கை.

அண்ணார்ந்து பார்க்கவே "மிக்",  வருவது போன்று பயமாக

இருக்கிறது அண்ணா என்றாள் அவள்.

கந்தகம்,

சிறுவர்களுக்கு அழகிய வானவேடிக்கை காட்டுவதற்காய் - இங்கே

என் தங்கைகளின் உயிர்களைப் பறிப்பதற்காய் புத்தனின் சீடர்கள்

 கையிலே - அங்கே!


"என்ன சாப்பாடு?" நான் கேட்டகத் தயங்கும் இன்னொரு கேள்வியையும்

அவளே கேட்டுவைத்தாள்

மைக்டொனால்ஸில் கம்பேர்க்கர் என்றேன் நான்.

காலையில் கஞ்சிதான்

அப்பா வந்தாத்தான் மதியம் தெரியும் என்றாள் அவள்.

ஏன் காசு எல்லாம் முடிஞசுபோச்சோ என்றேன் நான்.

காசு இருக்குக் கையில்இ ஆனால் கடையிலதான் சாமான்கள் இல்லை

என்றாள் அவள்.

பல புண்ணியங்கள் உலகிற்குச் சொல்லிச் சென்றான் புத்தன் அன்று,

ஆனால் இன்றோ அவன் சீடர்கள் தம் நாட்டிலே என் தங்கைகளைப்

பட்டினி போடுகிறார்கள்.



அண்ணா மேலாலே வருகுது, பிறகு எடுக்கிறேன் என்ற நடுங்கிய

குரலுடன் துண்டிக்கப்பட்டது தொடர்பு.

ஓ புத்தனே! என் தங்கைக்கு அடுத்த புத்தாண்டாவது சந்தோஷமாய்

இருக்காதா?

ஐயோ வேண்டாம்! அடுத்த முறை அவள் குரலை நான் கேட்பதற்றகாயினும்

உயிரோடு விட்டுவைப்பார்களா அவளை உன் சீடர்கள்??

-கதிரவன்-
( போன வருட பிறப்பின் போது  எழுதப்பட்டது)


Share/Save/Bookmark

வெள்ளி, 5 மார்ச், 2010

மனதின் பாடல்

2010 பிறக்கிறது.
ஐரோப்பா
சில தசாப்தங்களுக்குப்  பின் 
அசாத்திய பனிமழை, அதிக குளிர்.
பால் போல வெள்ளை என்பவர் 
பனிமேடுகளைப்  பார்க்காதவர்.
நீலம் போட்டு வெளுத்த வெள்ளை.
மனதில் இல்லாக் குளிர்மையை 
இயற்கை தருகிறது போல. 




Share/Save/Bookmark

திங்கள், 1 மார்ச், 2010

-இதய நாட்டு.-




உலக அதிசயம் எது?
அன்பு தான்.
அன்பு உருவம் அற்றது .
அன்பு நூலளவாய் இருந்தாலும்
அதன் பலம் மலையையும் விஞ்சும். 



Share/Save/Bookmark
Bookmark and Share