ஞாயிறு, 31 மே, 2026
"விழி " மருத்துவ மாத இதழ்
"விழி " மருத்துவ மாத இதழ் போர்ப்பிரதேசத்திற்குள் கிளிநொச்சியில் இருந்து வெளிவந்து கொண்டிருந்தது.2000 - 2008 ஆம் ஆண்டுவரை மாதம் தவறாது 95 இதழ்கள் வெளிவந்தன . இதன் ஆசிரியராகவும் ஸ்தாபராகவும் நான் இருந்தேன். பொருளாதாரத்தடைக்கிடையில் மாதம் 1350 பிரதிகள், விசேட இதழ்கள் 2000 பிரதிகள் வெளியாகியது ஒரு அதிசயம்தான்.
புதன், 27 மே, 2026
திரும்பிப்பார்க்கிறேன்
1996 ஆம் ஆண்டு நான்காம் மாத முடிவில் யாழ்ப்பாணத்திலிருந்து வன்னிக்கு வந்தேன். 2009 ஆம் ஆண்டு மேமாதம் 17 ஆம் திகதிவரை தமிழர்களின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் வாழ்ந்தேன். இக்காலப்பகுதிற்குள் இருபத்தைந்திற்கும் மேற்பட்ட சத்திரசிகிச்சை கூடங்களில் பணிபுரிந்திருக்கிறேன். பெரும்பாலான சத்திரசிகிச்சைகூடங்கள் casualty theatres தான்,
சத்திரசிகிச்சையாளனாகவும் , சத்திரசிகிச்சைகூட அணிகளைை வழிநடத்துபவனாகவும் , சிகிச்சையாளர்களை உருவாக்கவும் பங்களித்திருக்கிறேன். எங்களால் உருவாக்கப்பட்டவர்கள் முள்ளிவாய்க்கால் இறுதிக்கணம்வரை மட்டும்மல்ல , தாயகமெங்கும் அளப்பரிய பணி செய்திருக்கிறார்கள். சம காலத்திலேயே ஒன்றுக்கு மேற்பட்ட சத்திரசிகிச்சைகூட அணிகளையும் வழிநடத்தியிருக்கிறேன்.

திரும்பிப்பார்க்கிறேன்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
