புதன், 31 ஜூலை, 2024
திங்கள், 29 ஜூலை, 2024
நாங்கள் நினைப்பது எல்லாம் சாத்தியமாவதில்லை
26 .09 .2009 அன்று காலை நோர்வேயில் ஒரு அகதியாக வந்து இறங்கினேன். விமானநிலைய நடைமுறைகளை முடித்துவிட்டு வெளியில் வந்து தரிப்பிடத்தில் இருந்தேன். இன்று திலீபனின் நினைவுநாள் மதியம்வரையாவது எதுவும் சாப்பிடக்கூடாது என மனது சொல்லிக்கொண்டது. இலங்கையை விட்டு வெளிக்கிட முன் அப்பா அம்மா அம்மம்மாவையாவது ஒருமுறை பார்த்து வந்திருக்கலாம் என நினைத்தாலும் அடுத்தகணமே அது சாத்தியமில்லை , கையில் அடையாள அட்டை கூட இல்லாமல் அறவே சாத்தியமில்லை என்ற பதிலையும் சொல்லிக்கொண்டேன், இனி ஒரு போதும் அவர்களை சந்திக்கமுடியாமல் போகலாம். என்னோடு வாழ்ந்த பலரின் முகங்கள் எனக்குள் வந்து வந்து போய்க்கொண்டிருந்தது, விரக்தியின் எல்லையில் இருந்தேன் இருந்தாலும் எதற்கும் தயாராக வேண்டும் என்ற பழக்கப்பட்ட மனநிலையும் என்னிடம் இருந்தது. இனி யாவும் பூச்சியத்தில் இருந்து ஆரம்பிக்கவேண்டும், புதிய மொழியையும் அ, ஆவன்னாவிலிருந்து கற்கவேண்டும். அகதி அந்தஸ்து கிடைக்கவேண்டும். அந்த நாட்களை இப்போது நினைப்பது கூட கடினமாக இருக்கிறது.
எனது வாழ்நாளில் எனக்கு பலர் பல்வேறுவிதமான உதவிகளை நான் அறிந்தும் அறியாமலும் செய்திருக்கிறார்கள், அவர்களுக்கு நன்றிக்கடனை இந்தப்பிறவியில் என்னால் செய்து முடிக்க முடியாமல் போய்விடக்கூடும். நாங்கள் நினைப்பது எல்லாம் சாத்தியமாவதில்லை

நாங்கள் நினைப்பது எல்லாம் சாத்தியமாவதில்லை
ஞாயிறு, 14 ஜூலை, 2024
சனி, 6 ஜூலை, 2024
திரும்பிப்பார்க்கிறேன்
சாவகச்சேரி மருத்துவமனை பேசுபொருளாகிறது , மனது வலிக்கிறது.
1995 ஆம் ஆண்டு யாழ் வலிகாம பெரும் இடப்பெயர்வில் யாழ் மருத்துவமனை மந்திகை மருத்துவமனைக்கு இடம்மாற நானும் ஒரு சில மருத்துவர்களும் நூற்றுக்கணக்கான காயப்பட்ட நோயாளிகளுடன் சாவகச்சேரி மருத்துவமனைக்கு ஒரு இரவில் வந்து சேர்ந்தோம். நான் சத்திரசிகிச்சைப்பிரிவை பொறுப்பெடுத்து நடத்தினேன். சாவகச்சேரியே மக்களால் நிரம்பிவழிந்து அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருந்த காலம். நானும் எனக்குரிய அணியினரும் 24 மணிநேரமும் மருத்துவமனையிலேயே இருந்தோம்.மருத்துவமனையின் மற்றைய விடுதிகளில் பகல் நேரங்களில் மருத்துவர்கள் இருப்பார்கள், இரவுநேரங்களில் அத்தியாவசிய நோயாளிகளுக்கு நாங்களே உடன் சிகிச்சை வழங்கினோம் , இயன்றவரை சிறப்பான மக்கள் சேவை வழங்கினோம் .

திரும்பிப்பார்க்கிறேன்
நண்பா!
நினைத்திருக்கமாட்டோம்
ஒருபுள்ளியில் தொடங்கி
இரு வேறு திசையில்
இன்று
நீ எங்கோ நான் எங்கோ
உனக்கொரு உலகம்
எனக்கொரு உலகம்
அன்று
எம்வாழ்வு ஆலமரத்தின் கீழ் இருந்தது
இன்று(னு)ம்
உன்னை நினைக்கையில் நானும்
என்னை நினைக்கையில் நீயும்
சிலிர்த்துப்போகிறோம்
இடைவெளியில்லை
எனினும் தொடமுடியா தூரம்
விடைபெறும் காலம் நெருங்குகிறது
ஞாபகங்களுடன் முடியும் பயணம்

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)