விடுதலைப்புலிகளின் தலைமை தனது இனத்தின் விடுதலை
என்ற குறிக்கோளின் அச்சில் எப்போதும் சுழன்று கொண்டிருந்தது.
எந்த நாடுகளின் பின்னணியிலும் அது தங்கி இருக்கவில்லை.ஆனால் பல
இயக்கங்கள் உருவாக வேறு நாடுகள் தமது நலனுக்காய் பின்னணியில் இருந்தன.இது எமது பலத்தை சிதறப்பண்ணியது.உண்மையிலேயே
சகோதர மோதல்களை அருகு நாடே ஆரம்பித்து வைத்தது.பிரித்தாளும்
தந்திரத்தை எமக்குள் பாய்ச்சி எம் விடுதலையை தடுத்தது.இன்று
சகோதரயுத்தம் என்று நீலிக்கண்ணீர் வடிக்கிறது.விடுதலைப்புலிகளுக்கு
விடுதலையை முன்னெடுக்க வேறு மார்க்கங்கள் வழங்கப்பட்டிருக்கவில்லை.
எமது போராட்ட பாதையின் நியாயங்களை ஏற்றுக்கொண்ட வேறு
இயக்க போராளிகள் பலர் விடுதலைப்புலிகள் இயக்கத்துடன்
இணைந்து போராடி வீரமரணம் அடைந்திருக்கிறார்கள்.பலர் போராளியாய்
இல்லாவிட்டாலும் முள்ளிவாய்க்கால் வரை நின்று விடுதலைக்கு
வேண்டிய பணி செய்திருக்கிறார்கள்.எந்த சந்தர்ப்பத்திலும் விடுதலைப்
போராட்டத்தை காட்டிக்கொடுக்காத , விடுதலைக்காக தமது காலத்தை அர்ப்பணித்த அனைவரும் அவர் எந்த போராட்ட இயக்கத்தில் இருந்தாலும்
அவர்கள் போராளிகளே.விடுதலைக்காய் புறப்பட்டு விடுதலையை
காட்டிக்கொடுக்காமல் மரணித்த அனைவரும் புனிதர்களே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக