மக்கள்
எழுபத்து ஏழில்
தனிநாட்டுக்கு
தீர்ப்பளித்தனர்
தந்தை
செல்வா
தமிழ்
மக்களை கடவுளே
காப்பாற்றவேண்டும்
என்றார்
வேறுவழியில்லை
கைகளில்
ஆயுதம்
நாங்கள்
அடித்தால் அடிவாங்க
பயந்தாங்கோழிகளோ
மகாத்மாக்களோ
இல்லை
அடித்தார்
திருப்பி
அடித்தோம்
அடித்தவரில்
குற்றம்
சொல்லா உலகு
திருப்பி
அடித்தவரில்
எங்ஙனம்
குற்றம் காண்பது?
எங்கள்
கைகளை மட்டும் கட்டி
எதிரிக்கு
ஆயுதம் கொடுத்தது
மூர்க்கமாய்
கால் தடங்கள் போட்டது
முதுகை
குறிவைத்தது
இயங்கிய
உடல் ஓயலாம்
போராட்ட
ஆத்மா சாகாது
அடிமைத்தனத்தை
ஏற்காது
நீறு பூத்த
நெருப்பாய்
விடுதலை
தாகம் இருக்கும்
ஒரு நாள்
தீரும்