எனது முதலாவது பிரசுரமான சிறுகதை "கல்லறைக்குள் தீபம் ஒன்று "
1987
ஆம் ஆண்டு உதயனின் சஞ்சீவியில் பிரசுரமாயிற்று. நான் எழுதிய ஏழு ஆரம்பகால கதைகளை " சமுதாயக்காயங்கள்" என்ற பெயரில் தொகுக்க இருந்தேன்.இந்திய இராணுவம் எரித்த வீடுகளில் எங்கள் வீடும் ஒன்றானதில் எனது முதல் தொகுப்பு கருவில் சிதைந்து போயிற்று. 1992 ஆம் ஆண்டு ஈழநாதம் நடத்திய இலக்கிய போட்டியில் எனது சிறுகதை( இவர்கள் புலிகள்) இரண்டாம் இடத்தை பெற்றது. 1994 ஆம் ஆண்டு பொருண்மிய நிறுவனம் நடாத்திய இலக்கிய போட்டியில் "மேம்பாடுகளைத்தேடி " என்ற கட்டுரை முதலாம் இடத்தை பெற்றது. 1998 ஆம் ஆண்டு
ஈழநாடு பத்திரிகை நடாத்திய இலக்கிய போட்டியில் ”என்னவளுக்கு” என்ற
கவிதை இரண்டாம் இடத்தை பெற்றது.
2004
ஆம் ஆண்டு
சர்வதேச மாணவர் பேரவை நடாத்திய இலக்கிய போட்டியில்
”நிழல் ஓவியங்கள்” என்ற சிறுகதை இரண்டாம் இடத்தை பெற்றது. இச்சிறுகதை தமிழீழ தொலைக்காட்சியினரால் குறும்படமாய் ஒளிபரப்பட்டது. முல்லை கடற்தொழிலாளர் சங்கம் கரும்புலிகள் நினைவாய் நடாத்திய ஓவியப்போட்டியில் எனது ஓவியமும் பரிசை தட்டிக்கொண்டது. என் இளமைக்காலத்தில் விளம்பரப்பலகைகளுக்கு எழுத்துருக்களை எழுதியிருக்கிறேன். திறந்த
இலக்கிய போட்டிகளில் எனது பதினான்கு ஆக்கங்கள் பரிசு பெற்றுள்ளன.
எனது முதலாவது கவிதை தொகுதி ( அந்த நாளை அடைவதற்காய்)
1999
ஆம் ஆண்டு வெளியானது.இந்நூலின் முன்னுரையை சு.ப. தமிழ்ச்செல்வன் அவர்கள் எழுதியிருந்தார். எனது மூன்றாவதும்( அந்தநாள் எந்தநாளோ) நான்காவதும் ( கண்ணீர்த்துளிகள்) நூல்கள் எங்கு தேடியும் எனக்கு கிடைக்கவில்லை .தயவுசெய்து யாருக்கும் கிடைத்தால் தந்துதவுங்கள். முள்ளிவாய்க்காலில் பல ஆக்கங்களை இழந்தாலும் , அது இழந்த உயிர்களுடன் ஒப்புநோக்குகையில் தூசாய் போகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக