எனக்கு தலைவன்தான் இருந்தும் அவரிடம் ஒரு துளி பயம்கூட எனக்கு இருக்கவில்லை. எப்படி? சம்பாஷணை முடிந்து வெளியில் வரும்போதே அளவுக்கு அதிகமாய் கதைத்த ஞாபகம் வரும். எனக்கு அவரிடம் ஒளிக்க ஒன்றுமில்லை அதுதான் காரணம் என்று எனக்குள் நினைத்துக்கொள்வேன். 1990 களில் உடல் உறுப்பு தானம்பற்றி தற்செயலாய் இழுத்துவிட்டேன். சொர்ணமும் சங்கர் அண்ணையும் அது சாத்தியப்படாது என்றார்கள். எம் சமூகத்தில் பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்றார்கள் . அண்ணை வழமைமாதிரியே கண்ணை உருட்டியபடி யோசித்தார். பிள்ளை விரும்பி பெற்றோர் விரும்பாட்டி அதைவிடலாம். இருவரும் விரும்பும் பட்சத்தில் வசதிப்பட்டால் செய்யலாம். ஒருபோராளி தான் நேசித்த மக்களுக்காய் எவ்வளவு அதிகம் செய்யமுடியுமோ அதை செய்யிறதை நான் விரும்புகிறேன். கதை பிறகு பல பக்கங்களுக்கும் போயிற்று. என்ன ஆச்சரியம் சில காலத்தில் போராளிகளுக்கான தனிப்பட்ட அறிக்கையில் இந்தவிடயம் இணைக்கப்பட்டிருந்தது.
அவரிடம் ஒரு துளி பயம்கூட எனக்கு இருக்கவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக