இலங்கையில் இனக்கலவரம் நடைபெறவில்லை.
ஒரு இனத்தை ஒரு இனம் படுகொலைதான் செய்தது.
அரசால் திட்டமிடப்பட்டு நாடாத்தப்பட்ட 1983ஆம் ஆண்டுஇனப்படுகொலையின் பின் உணர்வு உள்ள எல்லா தமிழ் இளைஞரும் ஏதோ ஒரு போராட்ட
இயக்கத்துடன் இணைந்தார்கள்.அவனும் 1984இல்தனது எட்டாம்
வகுப்பில் ஒரு இயக்கத்துடன் இணைந்துகொண்டான். அவனது இயக்கப்பெயர் துளசி . அவன் இந்தியாவில் இராணுவ பயிற்சி பெற்றான்.1987இல் அந்த இயக்கத்தை விடுதலைப்புலிகள்
கலைக்க ஆணையிட அந்த இயக்கம் கலைக்கப்பட்டது.
அவன் வீடு வந்து சேர்ந்தான்.
விடுதலைப்புலிகள் அமைப்பில் ஆளணி பற்றாக்குறை
அறிவிப்பு வர 1990 இல் மீண்டும் விடுதலைப்புலிகள் இயக்கத்தில்
இணைய முயல ,அதற்கு முதலே அவனது ஒரே ஒரு
தம்பி விடுதலை புலிகளில் இணைந்துவிட்டான்.வீட்டுப்
பொறுப்பு அவன் மீது வீழ்ந்தது.வீட்டை சமநிலைப்படுத்த
முயன்றான்.1995இல் இடப்பெயர்வர குடும்பத்துடன் வன்னிக்குச் சென்றான்.
அவனது தம்பி மாவீரன் ஆகியிருந்தான்.
வன்னியில் மக்களின் வருகையால் மனிதாபப் பணிகளின்
தேவை அத்தியாவசியமாக அவனும் அதில்ஒருவனாய் மிக
முக்கிய பணி செய்தான். போராட்டத்தோடையே நிற்கோணும்,
அதற்கு எங்களால முயன்றதை செய்யோணும் என்பதில் மிக
உறுதியாய் இருந்தான்.போராட்டத்தை/விடுதலையை
உண்மையாய் நேசித்த போராளிக்கு அவன் முன்புஎந்த இயக்கத்தை
சேர்ந்திருந்தாலும் மக்களின் விடுதலையே தாரக மந்திரம்.
தங்கள் மனநிலையை அவர்கள் வெளிப்படுத்துவதில்லை.
அவன் வசதியான குடும்பத்தை சேர்ந்தவன் . வெளிநாடு
செல்வதாயின் அவன் சென்றிருக்கலாம்.அவன் அப்படி செய்யவில்லை.
வன்னியில் மனிதாபாப் பணி செய்து கொண்டிருந்த பெண் ஒருவரை
விரும்பி திருமணம் செய்து கொண்டான்.
சமாதானகாலத்தில் சொந்த ஊரான யாழ்ப்பானத்திட்கு சென்று
போர் மேகம் சூழ மீண்டும் வன்னிக்கு வந்தான்.
இப்போது முக்கிய மனிதாபப்பணிக்கான பொறுப்பு.
அவனைவிட்டால் அந்தபணிக்கு பொருத்தமாய் வன்னியில்
எவரும் இருக்கவில்லை.மிக வெற்றிகரமாய் அப்பணியை
செய்தான்.
அவன்,அவனது மனைவி,அவனது ஒரே பிள்ளை
கொத்துக்குண்டால் காயமடைந்தார்கள்.ஆனாலும்
கப்பல் மூலம் திருகோணமலைக்குச் செல்ல மறுத்துவிட்டான்.
இந்த மக்களை விட்டிட்டு நான் போக மாட்டன்.இந்த
மக்களுக்கு நடக்கிறதே என் குடும்பத்திற்கும்
நடக்கட்டும்.மீண்டும் இரட்டைவாய்க்காலில் இவன் துப்பாக்கி ரவைக்
காயம் ஏற்று மயிரிழையில் தப்பினான்.முள்ளிவாய்க்காலில்
பொஸ்பரஸ் குண்டால் எரிகாயத்திட்கு உள்ளானதுடன் இவன்
குடும்பம் மயிரிழையில் உயிர் தப்ப இவனது அனைத்து
சொத்துக்களும் எரிந்து போயிற்று.இறுதியில் முள்ளிவாய்க்காலில்
இருந்து இராணுவ பகுதிக்குள் வந்த பின் இவனை பார்த்தேன்.
சலரோக நோயாளியான இவன் உருவமே மாறி இருந்தான்.
நேற்று அவனுடன் கதைத்தேன் அவர்கள் (விடுதலைப்புலிகள்)
விடுதலைக்கு உண்மையாய் உழைத்தார்கள் என்று சொன்னான்.
தனது பங்களிப்பு போதாது என்று சொன்னான் .
தனது பங்களிப்பு போதாது என்று சொன்னான் .
- நிரோன்-
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக