போர் சட்ட விதி முறைகளுக்குள் உட்பட்டது.
இவ்விதி முறைகளை தாண்டி போரில் திட்டமிட்டு
செய்யப்படும் குற்றங்கள் போர் குற்றங்கள் ஆகும் .
இலங்கையில் நடந்தது போர்க்குற்றம் மட்டுமல்ல.
போர் விமானங்களாலும்,எறிகனையாலும் ,ஆழ
ஊடுருவும் படையணியாலும் திட்டமிட்டு
போர் வலயத்திற்கு அப்பால் செய்யப்பட்ட
மக்கள்கொலைகள் போர்குற்றங்களா ?( செஞ்சோலை வளாகத்தில்
மாணவிகள் மீதான வான்தாக்குதலுக்கு முன் இரு ஆழ
ஊடுருவும் படையினரை மாணவிகள் கண்டுள்ளனர்)போர்
வலயத்திற்கு அப்பால் கொல்லப்பட்ட தமிழ்,
சிங்கள ஊடகவியலாளர்கள் .கிரிசாந்தி போல்
கொல்லப்பட்ட தமிழ் பெண்கள்,போர் வலயம்
தவிர்ந்துகாணாமல் போன
பல நூறு உயிர்கள் ,கொல்லப்பட்ட பாராளமன்ற
உறுப்பினர்கள் எல்லாம் எக்குற்றத்திட்குள்
அடங்கும்?உண்மையில் பல கொலைக்குற்றங்கள்
போர்க்குற்றங்கள் அல்ல திட்டமிட்ட கொடூர கொலைகள்.
ராஜபக்சாக்கள் போர்க்குற்றங்களுக்காகவும் ,கொடூர
கொலைக்குற்றங்களுக்காகவும் தண்டிக்கப்படவேண்டும்.
-நிரோன்-
1 கருத்து:
நிச்சயம் இந்த போர்க் குற்றவாளி தண்டனை அனுபவித்தே ஆகவேண்டும். உலக நாடுகள் தமது சுயநலன்களுக்காக பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டிக்கொண்டு நிற்கின்றது. அனைத்துத் தமிழரும் இணைந்து கொலைவெறியருக்கு ஏற்ற தண்டனை பெற்றுத்தர முயல்வோம்.
கருத்துரையிடுக