குமாரும் ராஜாவும் நல்ல நண்பர்கள் .சிறுவயது முதலே
ஒன்றாய் படித்தும்,ஒன்றாய் விளையாடியும் வந்தார்கள் .
குமார் வகுப்பில் எப்போதும் முதல்தான்.
ராஜா கடைசிப்பிள்ளைக்கு போட்டிபோடுவான்.
இருவரும் அவர்களது கிளித்தட்டு அணியில்
ஒன்றாக விளையாடுவார்கள் .ஒரு தடவை யாழ்
மாவட்டத்தில் நடந்த திறந்த கிளித்தட்டுப்போட்டியில்
அரையிறுதிவரை வந்திருந்தார்கள். அரையிறுதியில்
உடுவில் ஐக்கிய விளையாட்டுக்கழகத்திடம் தோற்றுப்போனார்கள்.
உடுவில்ஐக்கிய விளையாட்டுக்கழகமே சாம்பியனாகவும்
வந்தது.அவர்கள் அப்போது மிகச்சிறந்த அணியாக இருந்தார்கள்.
குமார் பொறியியல்பீடத்திற்கு தெரிவாகி பொறியியலாளராகி
அரசசேவைக்குள் உள் நுழைந்தான்.ராஜா பாராளமன்ற உறுப்பினருக்கு
பதினையாயிரம் ரூபா பணம் கொடுத்து எழுதுவினைஞர் சேவைக்குள்
உள் நுழைந்தான்.ராஜா இப்போது அமைச்சரின்செயலாளராய்
இருக்கின்றான்.அந்த அமைச்சுக்கு கீழ்தான் குமாரும் வேலை செய்கிறான்.
சில அனுமதிகளுக்கு ராஜாவிடம்தான் செல்ல வேண்டும்.அவர்கள்
நண்பர்கள் என்பதால் பிரச்சனை இல்லை.ஆனால் ராஜா தனக்கு
அமைச்சரால் பிரச்சனை என்று சொல்லிக்கொள்கிறான்.அமைச்சர்
அரசியலுக்கு வருமுன் பேக்கரி நடத்திவந்திருந்தார்.இப்போது
அவருக்கு நிறைய சொத்துகள் .அமைச்சர் பெரிய வாகனதிருத்துமிடமும்
வைத்திருக்கிறார்.அமைச்சின் அனைத்து வாகனமும் அங்குதான்
சேர்வீஸ்,திருத்தத்திற்குப் போகும் பெரும் கொள்ளை.ராஜா
அமைச்சர் சொல்வதை எல்லாம் செய்யோணும்.குமாரும்,
ராஜாவும் இந்த வருடம் ஓய்வு பெறுகிறார்கள்.இருவருக்கும்
ஓய்வு பெறுவதில் துளியும் கவலையில்லை.
-நிரோன்-
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக