16/ 05/2009 , மாலை ஐந்து மணியிருக்கும் என ஊகிக்கிறேன். நானும் சுதர்சனும் காயமடைபவர்களுக்கு முதலுதவி செய்து கொண்டிருந்தோம். இரண்டு சுமார் பத்து,பன்னிரண்டு வயது சிறுவர்கள் தனித்தனி சிறு உருளை மூட்டை வடிவில் சேலையால் சுற்றி இரத்தத்துடன் விக்கி விக்கி அழுதபடியே தூக்கிபோனார்கள் . என்ன என்று வினவினேன். தாய் ஷெல்லில் வயிற்றோடு சிதைந்து போனதாகவும் நெஞ்சோடு தலையும் ,இடுப்போடு கால்களும் உள்ளதாக. நான் எங்களது பங்கரில் போட்டு மூடச்ச்சொன்னேன். இல்லை தங்களது தங்கையிற்கு காட்டவேண்டும் என்று நிலத்தில் படாமல் தூக்கியபடியே போனார்கள். நாங்கள் சர்வசாதாரணமாக எங்களின் கடமையில் மூழ்கியிருந்தோம்.
கடமையில் மூழ்கியிருந்தோம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக