புரியாத மொழிப்பாடல்களையும்
கேட்கிறது மனம்
இசையோ குரலோ
மனதோடு கோர்வையாகிவிடுகிறது
சில புரிந்த மொழிப்பாடல்கள்கூட
மனதை ஏனோ ஆற்றுப்படுத்துவதில்லை
தாய்நிலமிழந்து அந்தரத்தில் கழிகிறது நொடி
கண்கள் தெரியாதவனை
தினம் தினம்
விதவித உடையுடுத்தி
கைபிடித்து கூட்டிப்போகிறாய்
வந்த பாதைகூட தெரியவில்லை
வந்துவிட்டேன் அம்மா
எனக்குள் நான் அடங்கிப்போகிறேன்
மலையுச்சிக்கும் வந்து போகிறது நிலவு
காலமீட்டலை சுட்டிப்போயிற்று இரவு
நெஞ்சோடு முட்டிப்போகிறது அழுகை
விடிகாலையில் புதிய பயணம்
நாடற்றவனின் சுவடுகளை விட்டுப்போகிறேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக