மாசி மாதம் 2009. வன்னி.
இராணுவம் சுதந்திரபுரத்தை ஆக்கிரமித்தது. சுதந்திரபுரம், வள்ளிபுனம் எங்கும் பிணக் குவியல்கள். வள்ளிபுனம் சிறுவர் பாடசாலையில் மருத்துவமனை இயங்கிக் கொண்டிருந்தது. சில நாட்களாய் அதிக சுமையை சுமந்து கொண்டிருந்தது. கொத்து கொத்தாய் காயங்கள் வந்தன. சிகிச்சையின் வினைத்திறன் உச்சமாகவே இருந்தது. இடைக்கிடை மருத்துவமனை எல்லைக்குள்ளும் செல்வந்து விழுந்தது. சத்திர சிகிச்சை செய்யப்பட்டவர்கள் இயன்றவரை பாதுகாப்பாக வைக்கப் பட்டிருந்தனர். புதிதாக அனுமதிக்கப் படுகிறவர்கள் மண் முற்றத்தில் கிடத்தப் பட்டிருந்தனர். சத்திர கிச்சை கூடம் வேகமாக இயங்கிக் கொண்டிருந்தது.
