வெள்ளி, 17 ஜூலை, 2020
திங்கள், 29 ஜூன், 2020
தாய்மண்
தாய்மண் நினைவில்
கடலளவு கவலைகளுக்குள்
மூழ்கியிருந்தாலும்
ஒப்பற்ற அன்பு பண்பு அர்த்தம் நிறை
உறவுகளோடு வாழ்ந்தோம் எனும் கசிவில்
மிதக்கிறேன் வானுயர்வில்
கடலளவு கவலைகளுக்குள்
மூழ்கியிருந்தாலும்
ஒப்பற்ற அன்பு பண்பு அர்த்தம் நிறை
உறவுகளோடு வாழ்ந்தோம் எனும் கசிவில்
மிதக்கிறேன் வானுயர்வில்
தாய்மண்
புதன், 24 ஜூன், 2020
திரும்பிப்பார்க்கிறேன்
1970 களில் எங்களது நேரங்களை அழகுபடுத்தியதில் வானொலிக்கு கணிச பங்கிருக்கிறது. காலைத்தென்றலில் தொடங்கி பொங்கும் பூம்புனலில் வசமாகி இரவின் மடியில் வரை மனது குளிர்ந்திருக்கும்.
சனிக்கிழமைகளில் ஒலிபரப்பாகும் "ஒரு வீடு கோயிலாகிறது " என்ற தொடர்நாடகமும், ஞாயிற்றுக்கிழமைகளில் " தணியாத தாகம் " என்ற தொடர்நாடகமும் இன்றும் நினைவில் படர்ந்திருக்கிறது. இப்படித்தான் ஒருநாள் கிறிக்கெற் தமிழ் வர்ணனையை வானொலியில் கேட்டுக்கொண்டிருந்தோம். இந்தியாவிற்கும் இங்கிலாந்திற்கும் இடையிலான டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து கொண்டிருந்தது. இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் கவாஸ்கர் நூறு ஓட்டங்களை பூர்த்தி செய்ய பார்வையாளர் ஒருவர் மாலையுடன் மைதானத்திற்குள் ஊடறுத்து ஓடுகிறார். அவரை துரத்தி இரு போலிஸ்காரர்கள் செல்கின்றனர். இதோ அவரை பிடித்து நிலத்தில் வீழ்த்திவிட்டனர். மாலையையும் ஒரு பொலிஸ்காரர் பறித்துவிட்டார். ஓ! இப்போது பொலிஸ்காரர் மாலையுடன் ஓடுகிறார். பொலிஸ்காரர் மாலையை கவாஸ்கருற்கு போட்டுவிட்டு அவரருகில் வாயெல்லாம் பல்லுடன் நிற்கிறார். இங்கிலாந்து அணிவீரர்கள் யாவற்றையும் வியப்புடன் பார்க்கிறார்கள். வர்ணனையாளர்கள் அப்துல் ஜபாரும் சீனிவாசனும் எங்களையும் மைதானத்திற்கே கூட்டிப்போயிருந்தார்கள்.
திரும்பிப்பார்க்கிறேன்
வெள்ளி, 29 மே, 2020
திரும்பிப்பார்க்கிறேன்
2004 ஆம் சித்திரை மாதம் , தலைவரை சந்திக்கிறோம். அடுத்தநாள் காலை திருகோணமலைக்கு வெளிக்கிடவேண்டும். யாருடைய முகத்திலும் ஈயாடவில்லை. அண்ணையின் முகத்திலும் சோகரேகைகளே விரிந்திருக்கிறது. அண்ணை சொல்கிறார் " இரண்டு பக்கமும் எங்கட ஆட்கள்தான், இன்னுமொரு டொக்டர் போனால் நல்லா இருக்கும்" என்னைப்பார்த்து "யார் வந்தால் நல்லா இருக்கும்"?. அடுத்தநாள் மனோஜ், அஜோ அண்ணையுடன் நாங்கள் வெளிக்கிட்டோம். மற்றபக்கமும் எம்மால் உருவாக்கப்பட்ட மருத்துவ அணிதான், அது மனதுக்கு திருப்தியாக இருந்தது. எனது சத்திரசிகிச்சைகூடம் சம்பூரில் இயங்கிற்று, என்னுடன் மருதனும் இருந்தார். அஜோ அண்ணையின் சத்திரசிகிச்சைகூடம் எங்களுக்கும் சண்டைபிரதேசத்திற்கும் நடுவில் இயங்கிற்று. எங்களிடம் காயமடைந்து வந்தவர்களுக்கு சிகிச்சை அளித்தோம். உண்மையிலேயே இருபக்கத்தினரும் இருந்தனர். ஆனால்
நாங்கள் அவர்களைப்பற்றி கேட்கவேயில்லை.
திரும்பிப்பார்க்கிறேன்
வியாழன், 28 மே, 2020
திருப்பிப்பார்க்கிறேன்
1994 ஆம் ஆண்டு, சிறப்பு பயிற்சி முகாம், முகாம் பொறுப்பாளராக கடாபி அவர்கள் இருந்தார். பயிற்சியின் இணைப்பாளராக ராஜு அண்ணை இருந்தார். நான் முகாமின் மருத்துவப்பொறுப்பாளராய் இருந்தேன். மூவரும் பயிற்சியிலும் பங்குபற்றினோம். பயிற்சி காலை ஐந்து மணிக்கு தொடங்கி மாலை ஆறு மணிக்கு முடியும். கடாபி அவர்கள் மிக நேர்த்தியாக நிர்வாகம் செய்தார். ராஜு அண்ணையும் கடாபி அவர்களும் தங்களுக்கே உரிய கடமைகளை ஆர்ப்பாட்டமில்லாமல் அழகாக செய்தார்கள்.எங்களது முழு உழைப்பும் அந்த பயிற்சி முகாமை வெற்றிகரமாய் முடிப்பதுதான். எங்களுடன் பயிற்சி எடுத்த சக போராளிகளின் பாடத்திட்டங்களில் ஏற்படும் சந்தேகங்களை அப்பப்ப நானும் நிவர்த்தி செய்தேன்.ஓய்வுநேரங்களில் ராஜு அண்ணை பயிற்சி வழங்குபவர்களுடன் இராணுவ விஞ்ஞானத்தில் உள்ள தெரியாத விடயங்களை கேட்டுக்கொண்டிருப்பார். அநேகமாக நானும் ராஜு அண்ணையுடன் இருப்பேன். அந்த பயிற்சி முகாம் எங்கட அமைப்பின் வளர்ச்சியில் முக்கியமானது. அந்த பயிற்சி முகாமில் வசந்தன், மாதவன், ராஜேஷ், குமரன், மணியரசன், அறிவன் உள்ளிட்ட பலர் பயிற்சி எடுத்திருந்தார்கள். ராஜு அண்ணையையும், கடாபி அவர்களும் நண்பராய், சகோதரராய், ஆசான்களாய் என்றும் என் மனதில் வாழ்ந்துகொண்டிருப்பார்கள் .
திருப்பிப்பார்க்கிறேன்
செவ்வாய், 5 மே, 2020
பழைய நினைவுகளிலிருந்து
எனது கணிசமான எழுத்துக்கள் பொதுவெளிக்கு வராமல் ஏதோ ஒரு காரணத்தால் அழிந்துபோயிற்று. அழிவதற்கு பலவழிகள் இருந்திருக்கின்றன. நான் களமருத்துவ கடமையிற்கு செல்லும்போது எப்போதும் என்னிடம் note book உம் பேனையும் இருக்கும். இயற்கையை ரசிப்பதும் கவிதைகள் எழுதுவதும்தான் ஓய்வுநேரத்தில் என் பொழுதுபோக்கு. அப்படித்தான் 1991 ஆம் ஆண்டு ஆனையிறவு தாக்குதல்
காலத்திலும் ஒரு சிறுகவிதைகள் நிரம்பிய note book எனது காற்சட்டை பையினுள் இருந்தது. தொடையில் காயமடைந்து இரத்தக்குழாய் அறுந்த போராளி ஒருவரின் இரத்தப்போக்கை கட்டுப்படுத்துகையில் எனது note book போராளியின் குருதியில் ஊறிற்று. கவிதைகள் அழிந்துபோனாலும் அந்த போராளியின் காலினை காப்பாற்றிய திருப்தி இன்றும் இருக்கிறது.1993 ஆம் ஆண்டு காலப்பகுதியிலும் ஒரு கவிதைக்கொப்பியை தவறவிட்டிருக்கிறேன். இந்த கவலையில் சிலகாலம் கவிதை எழுதாமலும் இருந்திருக்கிறேன். 1987 இல் இந்திய இராணுவத்தாலும் 2009 இல் இலங்கை இராணுவத்தாலும் என் எழுத்துக்கள் அழிந்துபோயிற்று. ஒரு கடின வாழ்க்கையின் பதிவுகளை காப்பாற்றமுடியாமல் போன துயர் என்றும் என் மனதில் அப்பியிருக்கும்.
காலத்திலும் ஒரு சிறுகவிதைகள் நிரம்பிய note book எனது காற்சட்டை பையினுள் இருந்தது. தொடையில் காயமடைந்து இரத்தக்குழாய் அறுந்த போராளி ஒருவரின் இரத்தப்போக்கை கட்டுப்படுத்துகையில் எனது note book போராளியின் குருதியில் ஊறிற்று. கவிதைகள் அழிந்துபோனாலும் அந்த போராளியின் காலினை காப்பாற்றிய திருப்தி இன்றும் இருக்கிறது.1993 ஆம் ஆண்டு காலப்பகுதியிலும் ஒரு கவிதைக்கொப்பியை தவறவிட்டிருக்கிறேன். இந்த கவலையில் சிலகாலம் கவிதை எழுதாமலும் இருந்திருக்கிறேன். 1987 இல் இந்திய இராணுவத்தாலும் 2009 இல் இலங்கை இராணுவத்தாலும் என் எழுத்துக்கள் அழிந்துபோயிற்று. ஒரு கடின வாழ்க்கையின் பதிவுகளை காப்பாற்றமுடியாமல் போன துயர் என்றும் என் மனதில் அப்பியிருக்கும்.
பழைய நினைவுகளிலிருந்து
புதன், 29 ஏப்ரல், 2020
பழைய நினைவுகளில் இருந்து.
பாதுகாப்பகழி அமைப்பது தொடர்பான கட்டுரை ஒன்றை எழுதி ஈழநாதத்திற்கு அனுப்பிவிட்டு எமது விழி மருத்துவ இதழுக்கு பாதுகாப்பகழி அமைப்பது பற்றிய கட்டுரை ஒன்றை எழுதிக்கொண்டிருந்தேன். கிளிநொச்சி பொன்னம்பலம் மருத்துவமனையில் இருந்து அவசர அழைப்பு வருகிறது. பூநகரியிலிருந்து பதின்ம வயது சிறுவன் ஒருவன் பாம்புகடித்து மயக்கநிலையில் உள்ளதான தகவல். கிளிநொச்சி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் இருந்து உடனடியாக கிளிநொச்சி பொன்னம்பலம் மருத்துவமனையிற்கு செல்கிறேன். சிறுவனின் பெற்றோர் பாம்பினை உயிருடனேயே கொண்டுவந்திருந்தனர். ஒளித்து பிடித்து விளையாடும்போது சிறுவனுக்கு
பாதுகாப்பகழியினுள் பாம்பு கடித்திருக்கிறது. சிறுவனை காப்பாற்றினோம் கூடவே பாதுகாப்பகழியின் பராமரிப்பைப்பற்றியும் எழுதவேண்டி வந்தது.
பழைய நினைவுகளில் இருந்து.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
