புதன், 28 பிப்ரவரி, 2024
மௌனம் புதைந்திருக்கிறது
கவலைக்கடலுக்குள்
அஞ்சலி சகோதரா!
மரணம் எல்லோருக்கும் வரும்
சிலருக்கு ஆயுள் கணக்கிலில்லை
காலத்தை மீறி வாழ்வர்
சனி, 24 பிப்ரவரி, 2024
சத்தமில்லாத யுத்தம்
இரத்தம் குடிப்பது யுத்தம்
அடக்குமுறையும் ஆணவமும்
யுத்தத்தின் விதை
சமநீதி இல்லா உலகில்
யுத்தம் தளைத்துவிடுகிறது
கல்வி செல்வம் வீரம்
யுத்தத்திலும் ஊட்டச்சத்து
யுத்தம் இல்லையெனில்
இன்று பலநாடுகள் இல்லை
சில இனங்கள் இருந்திருக்கும்
யுத்தமில்லா பூமி ஓர் கனவு
நீதி அரசாண்டால் அது நனவு
நவீன உலகில்
சமாதானம் ஒரு பொறி
சத்தமில்லாத யுத்தம்

சத்தமில்லாத யுத்தம்
வியாழன், 22 பிப்ரவரி, 2024
அவனைத்தேடி எத்தனை விழிகள் காத்திருக்கும்
கடலையே பார்த்துக்கொண்டிருந்தேன்
அலைகள் தாவி விழுந்து கொண்டிருந்ததன
எழுவானம் சிவந்து கொண்டிருந்தது
நீ கையசைத்துப்போனாய் - ஏதோ
சொல்லவந்தும் சொல்லாமல் போனாய்
நிமிர்நடைக்கும் புன்னகைக்கும் குறைவில்லை
இடைவெளி அகன்றுகொண்டிருந்தது
நீ மறையும்வரை பார்த்துக்கொண்டிருந்தேன்
மாலைநேரம்
கடலோரம் நின்றுகொண்டிருந்தேன்
கடல் அலைகளற்று இருந்தது
"நீ வரமாட்டாய்" செய்தி மட்டும் வந்தது
அடிவானில் செவ்வானம் மறைந்தது
விக்கல் ஒன்று தொண்டைக்குழியில் சிக்கிற்று
உடலினுள் தீ ,உயிர் பிழிய நகர்ந்தேன்
அவனைத்தேடி எத்தனை விழிகள் காத்திருக்கும்

அவனைத்தேடி எத்தனை விழிகள் காத்திருக்கும்
ஞாயிறு, 18 பிப்ரவரி, 2024
சிறுவர்களின் எதிர்காலத்தை நினைக்க பயமாக இருக்கிறது.
2008 ஆம் ஆண்டு பிற்காலம் , கரடிப்போக்கிற்கும் கிளி பிள்ளையார் கோயிலுக்கும் இடையில் அமைந்திருந்த பசுமை கட்டிடத்திற்கு மேற்கட்டிடத்தில் Children development council ( CDC ) நிர்வாகக்கூடம் நடைபெற்றது. CDC இற்கு பொறுப்பாக ரவி அண்ணை ( சூட்டி, மகேந்தி அவர்களின் அண்ணன் ) இருந்தார். பிரான்சிஸ் அடிகளார் CDC யின் தலைவராக இருந்தார். CDC வடகிழக்கு மாகாணத்திலுள்ள ஐந்து வயதிற்கு ( முன்பள்ளி) குறைந்தவர்களின் முன்னேற்றத்திற்காக TRO அமைப்பின் கீழ் உருவாக்கப்பட்டிருந்தது. CDC யின் ஆலோசகராக நான் இருந்தேன். அதுதான் CDC யின் இறுதிக்கூட்டம் என்று அன்று நான் நினைக்கவில்லை. கூட்டம் முடிந்தபின்பும் ரவி அண்ணை, நான், பிரான்சிஸ் அடிகளார் நீண்டநேரம் உரையாடினோம். உரையாடலில் சிறுவர்களுக்கான திட்டங்களும் கரிசனைகளுமே இருந்தன.அதற்குப்பின் எவ்வளவோ நடந்து முடிந்துவிட்டது. இப்போது வாழும் சிறுவர்களின் எதிர்காலத்தை நினைக்க பயமாக இருக்கிறது. எனக்குத்தான் இப்படியிருக்கிறதோ தெரியவில்லை.

சிறுவர்களின் எதிர்காலத்தை நினைக்க பயமாக இருக்கிறது.
வெள்ளி, 16 பிப்ரவரி, 2024
வியாழன், 15 பிப்ரவரி, 2024
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
