வெள்ளி, 31 மே, 2024
நூலகங்களை எரிப்பதற்கு பெரும் வன்மம் இருக்கவேண்டும் . சாதாரண மனிதர்களால் அதை செய்யமுடியாது. இறுதிப்போரிலும் பாலர் நூல்கள் உட்பட எந்த நூல்களையும் அவர்கள் விட்டுவைக்கவில்லை.நல்லிணக்கம் என்று எலும்புக்கூடுகள் கைகுலுக்கலாம், இதயம் மூளைக்கு அது சாத்தியமில்லை.
புதன், 29 மே, 2024
ஞாயிறு, 26 மே, 2024
சிலந்திவலையில் சிக்கியது மனம்
நாம் சிறுவயதில் வாழ்ந்த வீடு
கைவிடப்பட்டிருக்கிறது
பாழடைந்துவிட்டது
சிலந்திவலையில் சிக்கியது மனம்
மெல் ஒலியில் பாடல் கேட்கும் வீட்டில்
பல்லிகள் சொல்லும் சத்தம்
வளவின் ஒவ்வொரு சாணிலும்
நினைவுகள் சிந்தியிருக்கின்றன
நடைபாதையில் வடலிகள்
பாசி படர்ந்திருக்கும் கிணற்றில்
பழைய மீன்களின் வழித்தோன்றல்கள்
சுற்றியிருந்த வெளிவளவில் மாளிகைவீடுகள்
காணாமல் போயிருந்த காலத்திலும்
ஒரு வரலாறு கட்டப்பட்டிருக்கிறது

சிலந்திவலையில் சிக்கியது மனம்
வெள்ளி, 24 மே, 2024
திரும்பிப்பார்க்கிறேன்.
நான் க.பொ. த உயர்தரம் படித்துக்கொண்டிருந்தேன்.அப்போது பல்வேறு இயக்கங்கள் இருக்கின்றன என்ற அறிவு கூட எனக்குள் இருக்கவில்லை,நான் ஒரு இயக்கத்துடன் தொடர்பில் இருந்தேன். அப்பாவிற்கு இது தெரிந்துவிட்டது, என்னை கூப்பிட்டு தனியே கதைத்தார். நீ செய்யுறதில தவறில்லை, ஆனால் இது சீரியஸான விஷயம், விளையாட்டில்லை. கொள்கையில கடைசி மட்டும் மாறாமலும் உண்மையாகவும் இருக்கோணும் , கன விசயங்களை நீ இழக்க வேண்டிவரும்.எனக்கு எல்லாம் சொல்லுற நீ இதை எனக்கு சொல்லவில்லை, அது எனக்கு ஓ கே . அப்பாவிற்கு உது தெரிஞ்சமாதிரி வேற ஆட்களுக்கும் தெரிஞ்சிருக்கும்தானே?
அப்பாதான் என் வழிகாட்டி மட்டுமில்லை, அவர் எனக்குள் அதிசயமும்தான். அப்பாவின் வாழ்வில் எளிமையும் சிக்கனமும் இருந்தாலும் தேவையானவருக்கும் தாராளமாய் உதவுவார். அப்பா வேலைக்கு மட்டும்தான் நீளக்கால்ச்சட்டை போடுவார் மற்றப்படி வெளியில் போகும் பொது வேட்டிதான் கட்டுவார். அப்பா சிறுவயதிலிருந்தே விவசாயத்தோடு ஒன்றி வாழ்ந்திருந்தாலும் ஒரு பூக்கன்று நட்டவரில்லை, பராமரித்தவரில்லை. அப்பா இந்துசமயத்தை சேர்ந்தவரென்றாலும் பைபிளை குரானை சரளமாக வாசித்திருந்தவர் .

ஞாயிறு, 19 மே, 2024
முதியோர்கள் வீடுகளில் ஒன்றாக வாழ்வது ஒரு கொடை, அவர்களது அனுபவம் / பட்டறிவு எந்த பல்கலைக்கழத்திலும் கிடைக்கமுடியாதது. புலம் பெயர்ந்து வாழும் எமது அடுத்த / அடுத்தடுத்த சந்ததி இந்த வாய்ப்பை பெரும்பாலும் இழந்துவிடுகின்றனர். இதை சந்ததிகளுக்
கிடையிலுள்ள இடைவெளிகளில் பார்க்கலாம். நான் புலம்பெயர்ந்திருந்தாலும் தனிப்பட்ட முறையில் புலம்பெயர்வை நான் வெறுக்கிறேன். தாயகத்திலிருந்து என்னிடமும் புலம்பெயர் வாய்ப்புகளை வினாவுகிறார்கள். மருத்துவர்கள் இந்த நாட்டுக்கு வராதீர்கள், மொழி படித்து இங்கு மருத்துவ அங்கீகாரம் பெறுவது சிரமமானது. அக்கரையிற்கு இக்கரை பச்சை என்பது சரியாக பொருந்தும்.

சுதர்சனின் நினைவ
சுதர்சனின் நினைவு வருகையில் அதிலிருந்து மீளுவது எனக்கு இலகுவல்ல. அவனது திருமணத்திலும் அவனது தந்தை தாயாக நானும் எனது மனைவியும்தான் இருந்து நடத்தினோம்.
அன்றொருநாள் தமிழ்வாணனின் வித்துடல் கனகபுரம் துயிலும் இல்லத்தில் விதைத்துவிட்டு எமது பணிமனைக்கு வந்தும் எதுவும் செய்யமுடியவில்லை . இரவு பத்து மணியளவில் நான் வெளிக்கிட்டேன் , துயிலுமில்லத்திற்கு போய் அந்த அமைதியான சூழலில் சில மணிநேரம் இருந்தால் மனம் ஒருமைப்படும் , சுதர்சனும் என்னோடு வந்தான் . அவன் துயிலுமில்லத்தில் குலுங்கி அழுத காட்சி இப்போதும் என்னை அழுத்துகிறது.சிரித்துக்கொண்டே திரிபவனின் அழுகை துயர் நிறைந்தது.

சுதர்சனின் நினைவ
நாங்கள் சாதாரணமானவர்
எங்கள் வாழ்வை நாங்களும்
உங்கள் வாழ்வில் நீங்களும்
மகிழ்வில் செழிப்பதே எம்மனது
ஒருவர் வாழ்விற்காய் அடுத்தவர்
நசுக்கப்படல் தர்மமில்லை
ஆதலால் உங்களை எதிர்த்தோம்
சந்ததி வாழ வேறு தேர்வு இல்லை
எதிரியோடு பொருதுவது கடினமில்லை
துரோகிகளை களைவது இலகுமில்லை
காலம்தான் பச்சோந்திகளை வெளிக்காட்டும்
சிலவேளை வெற்றி தோல்வி முடிந்திருக்கும்

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
