சனி, 31 ஆகஸ்ட், 2024

அது ஒரு வீரம் தியாகம் நிறைந்த சூழல் ஒவ்வொன்றாகவும் கூட்டாகவும் இழந்தபின் தரையில் வீசிய மீனானோம் நாள் ஒவ்வொன்றும் மாதங்களாய் நகர்த்தும் வலி நகரவே இல்லை செஞ்சோற்றுக்கடன் தீரவுமில்லை கடலில்லா பூமியில் கப்பல் கட்டிக்கொண்டிருக்கிறேன்


Share/Save/Bookmark

ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2024

தமிழீழ சுகாதார சேவைகளின் நிர்வாக அலகினுள் ஒருவன் நீ மருத்துவத்தையும் சுகாதாரத்தையும் ஆழ ஊடுருவும் படையினரின் தாக்குதல்களுக்குள்ளும் வீடு வீடாக கொண்டு சென்றவருள் ஒருவன் நீ முள்ளிவாய்க்கால் இறுதிவரை மக்களை தொற்றுநோய் நெருங்காமல் காத்து சென்றவருள் ஒருவன் நீ கூரை அல்ல அத்திவாரக்கற்களில் ஒருவன் நீ


Share/Save/Bookmark

வியாழன், 1 ஆகஸ்ட், 2024

நான் சிறுவனாக இருந்தபோது என் கிராமத்தில் ஒருவரிடமும் மோட்டார்சைக்கிள் இருக்கவில்லை, வீட்டுக்கொரு சைக்கிள் இருந்தது. கிராமத்தில் ஒருவரிடம் கார் இருந்தது, அந்தக்காரினை மற்றையவர்கள் நல்லது கேட்டதிற்கு வாடகையிற்கு அமர்த்துவார்கள். அப்போதெல்லாம் அவச்சாவுகளை நாங்கள் கேள்விப்பட்டதில்லை. என் கிராமத்தில் அப்போது மின்சாரம் இல்லை, தொலைகாட்சி பெட்டியில்லை ஆனாலும் கிராமம் வயல்களோடு செழித்திருந்தது. கோயில்கள், விளையாட்டு மைதானங்கள், சனசமூகநிலையங்கள் எங்களை மகிழ்வூட்டின.ஒவ்வொரு வீடுகளிலும் ஆடு மாடு கோழிகள் இருந்தன. கிருமிநாசினி பாவிக்காத காய்கறிகள் , பழங்கள் இருந்தன. நாட்டுக்கோழிதான், புரொய்லர் கோழி இருக்கவில்லை. சலரோகம், பிரஷர் , கான்சர் கேள்விப்பட்டதில்லை.


Share/Save/Bookmark

புதன், 31 ஜூலை, 2024

நாடில்லாதவன் ஒலிம்பிக் போட்டிகளை பார்க்கையில் வெந்துபோகிறான்



Share/Save/Bookmark

திங்கள், 29 ஜூலை, 2024



Share/Save/Bookmark

நாங்கள் நினைப்பது எல்லாம் சாத்தியமாவதில்லை

26 .09 .2009 அன்று காலை நோர்வேயில் ஒரு அகதியாக வந்து இறங்கினேன். விமானநிலைய நடைமுறைகளை முடித்துவிட்டு வெளியில் வந்து தரிப்பிடத்தில் இருந்தேன். இன்று திலீபனின் நினைவுநாள் மதியம்வரையாவது எதுவும் சாப்பிடக்கூடாது என மனது சொல்லிக்கொண்டது. இலங்கையை விட்டு வெளிக்கிட முன் அப்பா அம்மா அம்மம்மாவையாவது ஒருமுறை பார்த்து வந்திருக்கலாம் என நினைத்தாலும் அடுத்தகணமே அது சாத்தியமில்லை , கையில் அடையாள அட்டை கூட இல்லாமல் அறவே சாத்தியமில்லை என்ற பதிலையும் சொல்லிக்கொண்டேன், இனி ஒரு போதும் அவர்களை சந்திக்கமுடியாமல் போகலாம். என்னோடு வாழ்ந்த பலரின் முகங்கள் எனக்குள் வந்து வந்து போய்க்கொண்டிருந்தது, விரக்தியின் எல்லையில் இருந்தேன் இருந்தாலும் எதற்கும் தயாராக வேண்டும் என்ற பழக்கப்பட்ட மனநிலையும் என்னிடம் இருந்தது. இனி யாவும் பூச்சியத்தில் இருந்து ஆரம்பிக்கவேண்டும், புதிய மொழியையும் அ, ஆவன்னாவிலிருந்து கற்கவேண்டும். அகதி அந்தஸ்து கிடைக்கவேண்டும். அந்த நாட்களை இப்போது நினைப்பது கூட கடினமாக இருக்கிறது. எனது வாழ்நாளில் எனக்கு பலர் பல்வேறுவிதமான உதவிகளை நான் அறிந்தும் அறியாமலும் செய்திருக்கிறார்கள், அவர்களுக்கு நன்றிக்கடனை இந்தப்பிறவியில் என்னால் செய்து முடிக்க முடியாமல் போய்விடக்கூடும். நாங்கள் நினைப்பது எல்லாம் சாத்தியமாவதில்லை


Share/Save/Bookmark

ஞாயிறு, 14 ஜூலை, 2024

இன்றுள்ள நாடுகள் நூறு வருடத்திற்கு பின்னும் இருக்கலாம் , மொழியும் இனங்களும் மதங்களும் கூட இருக்கக்கூடும் ஆனால் இன்றுள்ள மனிதர்கள் இருக்கமாட்டார்கள்.இதற்குள் மனிதனே தனக்குள் பிணக்குகளை உருவாக்குகிறான், சூழலையும் மாசாக்குகிறான். ஆறாம் அறிவில் என்ன இருக்கிறது?


Share/Save/Bookmark
Bookmark and Share