வெள்ளி, 6 ஜூலை, 2012

சுஜோவின் ஹைக்கூ/விடுகதைக்கவிதைகள் -02



1,
இதயங்களுள் நுழைந்த ,
கணத்தில் ஒளிர்ந்து முடிந்த மெழுகுதிரி 
கரும்புலி 

2,
மனதை தின்னும் பூச்சி 
மழைக்கால மாரித்தவக்கை 
பொறாமை             

3,
ஷெல்லை விதைக்க  
 இழவுடன் உழவு 
அறுவடை தலைகள் "முள்ளிவாய்க்கால்"  

4,
பகுத்தறிவு இல்லை 
ஆனால் மேதைப்படிப்பு 
ஓட்டைப்படகு 

5,
மோட்சம் இழந்த 
காவிக்குள் புகுந்த சாத்தான்கள் 
சாமிமார்/பிக்குகள் 

6,
கடதாசி உருவில் 
கடவுளும் பிசாசும் 
காசு /பணம் 

7,
வீட்டுப்பிரச்சனையால் 
திட்டித்தீர்க்கிறார் ஐயர் 
மந்திரம்   

8,
மனிதனுடன் கூட வாழும் 
பற்சூத்தை 
லஞ்சம் 
9,
கற்பனையில் வாழ்தல் /
கானல் நீர் 
போலி வாழ்க்கை 
10,
கண் மூடி இரத்தம்
குடிக்கும் பூனை 
போர்க்குற்றவாளி 
11,
ஓயும்வரை
ஓய்வெடுக்காமல்  ஓடும்வாகனம் 
இதயம் 

12,
சாக்குருவி தலைக்குமேல் 
கத்தியபடி பறக்கிறது .
வேவுவிமானம் 

13,
கன்றை தவறவிட்டு 
பசு கத்துகிறது 
ஈழத்தாய்

14,
காட்டுத்தீ பரவ 
விலங்குகள் துடித்து மாண்டன 
கர்ப்பிணித்தாய் மரணம் 

15,
கிளிக் இல்லாமல் 
படம் எடுத்தான் 
தலையாட்டி 

16,
அம்மா குழைத்துத்தரும் 
சோற்றுருண்டை அல்லது 
முட்டைப்பொரியல் "நிலா "

17,
இசைக்கமுடியா மொழி 
கல்மனதையும் கரை(லை)க்கும் ஒலி
மழலை மொழி 

18,
அரசை/உலகத்தை  நம்பி 
சரணடைந்தனர் போராளிகள் 
விட்டில்ப்பூச்சிகள் 

19,
வேலி பயிரை தின்றகதை பழையது 
வேலி நிலத்தையும் தின்னும் கதை புதியது 
ஈழம் 

20,
வாழ்வின்
மின்மினிப்பூச்சி 
துக்கமும் மகிழ்வும் 

21,
பஞ்சு உள்ளம்,
உயிரே  வியர்க்கும் அணுவை மீறிய சக்தி
கரும்புலி 

22,
அணு அணுவாய் சாதல் 
அரிசி மாவாதல் 
திலீபன் 

23,
நல்லபாம்பு வேஷம்போடும் 
புடையன் 
எதிர்க்கட்சி (ஸ்ரீலங்கா)

24,
தொட்டால் சுருங்கி 
பட்டால் காஞ்சோண்டி 
ஒட்டுக்குழுக்கள் 

25,
  அடைக்கோழி
அடைகாக்கும் முட்டைகள் 
கறுப்புப்பணம் 

26,
நிலத்திட்குக்கீழ்
தாட்டு வைத்திருக்கும் சாராயம் 
 கறுப்புப்பணம் 

27,
பருந்து வாயில் 
கோழிக்குஞ்சு 
ஈழம் 

28,
கழற்றக்கூடா செட்டை
சுயத்தின் பெருமை 
மானம் 

29,
குமிழ் எரியும் 
வயரில்லா மின்சாரம் 
பாசம்      

30,
செத்த பூனையை 
சாப்பிடுகிறது எலி 
ஒட்டுக்குழுக்கள் 

31,
எத்தனை வீடிருந்தும் 
சொந்தமாவது 
கல்லறை 
32,
யுத்தம்வரை 
சண்டியருடன் சமாதானம் 
நெருப்பெட்டி 

33,
எரிய எரிய எரிக்கும் 
ஆறாவது விரல் 
சிகரட் 

34,
திராட்ச்சைச்சாறை 
இராணுவம் திருடி குடித்தது 
பிணம் கிடக்கிறது 


35,
தங்கக்காசு 
நகை ஆகிறது 
தாய்மை 

36,
கலவரம் 
அமைதிப்பேரணியில் 
ஜனநாயகம் 

37,
குறைப்பிரசவமாயிற்று 
ஜனநாயகம் 
குற்றவாளியால் நீதிபதி நியமனம்  
(நல்லிணக்க ஆணைக்குழு)

38,
கல் கடவுளாயிற்று 
உண்டியல் நிரம்பிற்று 
யதார்த்தம் 

39,
மூங்கிலை ஒதுக்கியவர் 
புல்லாங்குழலை இரசிக்கிறார் 
முயற்சி திருவினையாக்கும் 

40,
தவளை விழுங்கிய 
பாம்பு 
ஈராக்கில் அமெரிக்கா

41,

மார் தட்டி 
சத்தம் போட்டு வா! என்று அழைக்கிறான் 
கோயில் மணியோசை 

42

காதோடு காதாய்
இரகசியம் காவும் காலில்லா ஊர்தி 
நடமாடும் தொலைபேசி 

43,
உணவிருந்தும் உண்ணவில்லை 
"விரதம்"+உணவில்லாததால் உண்ணவில்லை 
"பட்டினி"=விடுதலைப்போராட்டம் 

44,
மலத்தில் மொய்த்த இலையான் 
உணவில் (நெருப்புக்காயச்சல்)
"இராணுவம் மக்களுக்கு உதவி"

45,
போர் என்றால் போர் 
சமாதானம் என்றால் சமாதானம் :ஜே ஆர் 
தூக்கில் தொங்கிற்று ஜனநாயகம் 





Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share