நடுப் பகல் போதிலும் , இந்த வலைப் பக்கத்தை படிப்பதற்கு நன்றி.

சனி, 4 ஜூன், 2016

இறுதி உரையாடல்

தைமாதம் 2009 ஒரு இரவு ஆரம்பப்பொழுதில்  தலைவரைச் சந்தித்தோம்.
அப்பொழுது பரந்தனில் இராணுவம் இருந்தது. தலைவரின் நாம் சந்தித்த முகாமும் ஏற்றகனவே   விமானத்தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தது.நான்,ரேகா,அன்பழகன்,நடேசன் அண்ணைதமிழேந்தி அண்ணையும் சுமார் 3-4 மணிநேரம் ஒன்றாகயிருந்தோம்.   அன்று ஒன்றாகயிருந்து கொத்துரொட்டி சாப்பிட்டோம்.எனக்கு அண்ணையின் இடத்து கொத்துரொட்டி சரியான விருப்பம்.அண்ணைக்கும் தெரியும் .நான் அண்ணைக்கு அருகாமையில் இருந்தேன் .இதை ஒருக்கா சாப்பிடுங்கோ என்று வேறுவிதமாய் செய்த கொத்துரொட்டியையும் தனது கையால் எனக்கு பரிமாறினார்.அதுதான் அவருடன் ஒன்றாய் உணவருந்திய கடைசி நிமிடங்கள்.

 பின் புதுக்குடியிருப்பில் பொட்டம்மானுடன் தலைவரை சந்தித்தேன்.அதுதான் எனது தலைவருடனான  இறுதி உரையாடல். ஒரு மணித்தியாலத்திற்கு குறைவான நேர சந்திப்பு. கூடுதலாக மக்கள் பிரச்சனையைப்பற்றித்தான் கதைத்தார். நான் எங்களால் பயிற்றுவிக்கப்பட்டவர்களில் அரைவாசிக்கும் மேற்ற்பட்டவர்களை பொது மருத்துவமனைகளுடன் இணைத்துள்ளோம் என்பதை தெரிவித்தேன். தொற்று நோய்கள்வராமல் இயன்றவரை தடுப்போம் என்பதையும் தெரிவித்தேன். அம்பாறையில் அப்போது கடமையில் இருந்த மருத்துவர் வளர்பிறை என்னிடம்தான் மேலதிக மருத்துவ ஆலோசனைகளை பெறுவார். அவருக்குள்ள சில பிரச்சனைகளையும் நான் அண்ணையிடம் தெரிவித்தேன். அண்ணை சில உதவிகளை செய்ய பொட்டம்மானுக்கு கூறினார். இது இறுதியுரையாடலாய்   போனது துரதிஷ்டம்தான்.  


Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share