31/05/1981 , ஈழத்தமிழர் வாழ்வில் மறக்கமுடியாநாள். "யாழ் நூலகம்" தென் ஆசியாவில் தொன்மையான ,சிறப்புமிக்க நூலகம் , சிறிலங்கா அரசால் திட்டமிட்டு அமைச்சர் ஒருவரின் தலைமையில் எரிக்கப்பட்ட நாள். 97000 ற்கும் அதிக நூல்களுடன் பல அரிச்சுவடிகளும் சாம்பலாயிற்று. வன பிதா தாவீது அவர்கள் செய்தி அறிந்து இடது நெஞ்சை பிடித்தபடி இறந்துபோனார்.
காமினி திசாநாயக்காவின் தலைமையில்த்தான் நூலகம் எரிக்கப்பட்டதாய் சொல்லப்பட்டது. சிறில் மத்தியு தலைமையில் காடையர்களால் மற்றவைகள் ( யோகேஸ்வரன் வீடு,ஈழநாடு பத்திரிகை
காரியாலயம்,கூட்டணி காரியாலயம்,-----) அழிப்பட்டதாய் சொல்லப்பட்டது.இராணுவம் ,போலிஸ்,சிங்கள காடையர்களுக்கு இந்த அமைச்சர்கள் தலைமை தாங்கினார்கள். அதே நேரம் அமைச்சர் லலித் அத்துலத் முதலியும் யாழ்ப்பானத்தில்த்தான் இருந்தார் . இந்த வன்செயல்கள் 2-3 நாட்கள் தொடர்ந்தன.
1977 இல் தமிழர்கள் தனிநாட்டுக்கோரிக்கைக்கு முழு ஆதரவு தந்தமையும் ஏற்றுக்கொள்ளமுடியா நூலக எரிப்பும் பல இளைஞர்களின் பாதைகளை தீர்மானித்தது.
31/05/1981
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக