1991 ஆம் ஆண்டு ஆனையிறவு போருக்குப்பின் இயக்கமருத்துவர்களுக்கான ஒன்றுகூடல் ஒன்று தலைவருடன் நல்லூரில் அமைந்திருந்த சாளி முகாமில் நடைபெற்றது. அப்போது தமிழீழ மருத்துவ கல்லூரி ஒன்று ஆரம்பிக்கவேண்டும் என்ற முடிபு தலைவரால் எடுக்கப்பட்டது. நாங்கள் 30 பேருடன் ஆரம்பிப்போம் என்றபோது தலைவர் அவர்கள் 70-100 பேரை உள்ளீர்க்கவேண்டும் என்றதுடன் அதற்கான செயற்பாடுகளில் இறங்கி வழமைபோல் வெற்றிபெற்றார்.30 பெயரளவில் மருத்துவராக வெளிவருகையில் உண்மையில் தலைவரின் தீர்க்கதரிசனத்தை நான் உணர்ந்தேன். வரலாற்றில் தமிழன் தன்னை தானே ஆண்டது சில நூற்றாண்டுகளுக்கு பின்பானது. இனி எப்போதோ?தெரியவில்லை.புலிகளின் போராட்ட வரலாறு முதன்மையானது.அர்ப்பணிப்புகளால் புடம்போடப்பட்டது. காலத்தால் அழிக்கப்படமுடியாதது. இதற்குள் தமீழீழ மருத்துவக்கல்லூரியின் பங்களிப்பு ஒப்பற்றது. அதன் போராட்டத்தோடு கலந்த வரலாறு முழுமையாக பதியப்படவேண்டும்.எங்கள் எதிர்கால சந்ததிகளுக்கு எமது விடுதலைப்போராட்ட வரலாறு அதன் பங்காளிகளால் வழங்கப்படவேண்டும்.
சனி, 28 மே, 2016
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக