உலகம் திருப்தி அடைந்திருக்குமா?
சகல ஆயுதங்களையும் பரீட்சீர்த்தபின்
எதிர்பார்த்திருக்குமா?
மூன்று இலட்சம் பேர் தப்புவார்கள் என்று
விமானம்,கடல்,தரையென
தடை செய்த நச்சு,கொத்துக்குண்டுகளுடன்
மூச்சாய்த்தாக்கியும்
உணவு,மருந்துத்தடையோடும்
மூன்று இலட்சம் பேர் தப்புவார்கள் என்று
கோத்தா கதைவிட்டார் ”எண்பதாயிரம் பேர்தான் உள்ளனர் ”
அவர் நினைத்ததுபோல் ஏன் கொல்லமுடியவில்லை?
உலகால் கைவிடப்பட்டவர் எப்படி?
பதுங்குகுழி
அமைப்பு போதனை,தொற்றுநோய்த்தடுப்பு
மருத்துவ அணியின் பங்களிப்பு
புனர்வாழ்வுக்கழகத்தின் கஞ்சித்திட்டம்
புலிகளின் குரலின் ஒத்துழைப்பு மக்களின்
உறுதி
வர இருந்த பெரும் இழப்புகளை
குறைத்தன
இழந்தது ஒன்றல்ல,இரண்டல்ல,பல ஆயிரம்
கொலைகாரர்கள் இன்னும் வாழ்கிறார்கள்
உணர்விழந்த
நீதி "யுத்தகளத்தை
மீளத்திறக்குமா" ?
நீறு பூத்த நெருப்பாய் கிடக்குமா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக