இரவுநேரம் ஆகியும் , இந்த வலைப் பக்கத்தை படிப்பதற்கு நன்றி !!!

திங்கள், 14 அக்டோபர், 2024

உன் தலைவனை கூட என் தாயகம் பாதுகாத்து அனுப்பியதே வரலாறு

நீ ஏற்றுக்கொள்கிறாயோ இல்லையோ எனக்கு இன மத வெறியில்லை நீ கூட எனக்கு நண்பனுமில்லை பகைவனுமில்லை ஆனானும் உன்னோடு என்வாழ்வும் சிலவேளை ஒத்துப்போகிறது உன் தந்தை இறந்தபோது இறுதிநிகழ்விலும் நீ பங்குபற்றமுடியவில்லை உன் ஒன்றுவிட்ட சகோதரனையும் தோழமைகளையும் அரச பயங்கரவாதத்திற்கு இழந்ததுபோல் நானும் என் சகோதரனையும் ஒன்றுவிட்ட சகோதரர்களையும் தோழமைகளையும் களத்தில் இழந்தேன் உன் வலி உனக்கு வலிமை தந்தது நான் நூலகம் எரித்த சாம்பலிலிருந்து வந்தவர்களிலொருவன் வந்த வழி மறந்தவனில்லை உன் எழுச்சி எனக்கு மகிழ்வுதான் என் தேசத்தை அழித்தவர்களுள் நீயுமொருவன் என்றபோதும் உன் கொள்கை மாறா வாழ்வு என்னை ஈர்த்தது உன் செயலால் அழிக்கப்பட்ட என் தாயக அடையாளங்களை மீளுருவாக்கம் செய்தபின்னாவது வா! வாக்கு கேட்க இப்போது போய்விடு உன் தலைவனை கூட என் தாயகம் பாதுகாத்து அனுப்பியதே வரலாறு


Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share