ஞாயிறு, 20 செப்டம்பர், 2026
மலரவன்
ஒரு கையில் பேனா
மறுகையில் துப்பாக்கி
இரண்டிலுமே
நீ சுமந்திருந்தது ஈழவிடுதலையை !
வார்த்தைகளால்
நீ கோத்த கவிதைகள் யாவும்
வெற்றுப் பாடல்கள் அல்ல
காடுகளின் மடியில்
கண்ணீரும் செந்நீரும் சிந்திய
எம் மண்ணின் சாட்சியங்கள்!
நீ எழுதிய 'போர் உலா'
இன்னும் உலா வருகிறது
விடுதலைப் பாதையின்
கரடுமுரடான சுவடுகளை
காலத்தின் நெஞ்சில் செதுக்கியபடி!
இருபது வயதிலேயேஉன் ஆயுள் உதிர்ந்து போயிருக்கலாம் ஆனால்
உன் பேனா சிந்திய மை
மரணத்தை வென்று
இன்றும் எரிகிறது
எங்கள் விடியலின் தீபமாய்!
மலரவன் என்ற பெயரோடு
மண்ணில் வாழ்ந்த நீ
மரணித்த பின்னும்
மாசற்ற மாவீர வாசம்!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக