திங்கள், 26 அக்டோபர், 2026

எழுத்தாளர் மலரன்னை அவர்கள்

எழுத்தாளர் மலரன்னை அவர்கள் எழுதிய 270 ற்கும் மேற்பட்ட சிறுகதைகள் இதுவரை பிரசுரமாகியிருக்கிறது. இதில் முற்பத்தைந்திற்கும் மேற்பட்ட சிறுகதைகள் திறந்த போட்டிகளில் பரிசு பெற்றிருக்கின்றன. அதில் இருதடவைகள் சர்வதேச அளவில் நடைபெற்ற போட்டிகளில் பரிசு பெற்றிருக்கின்றன. இதுவரை 11 சிறுகதைத்தொகுதிகள் வெளியிடப்பட்டுள்ளன , இவற்றுள் 217 சிறுகதைகள் அடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. எழுத்தாளர் மலரன்னை அவர்கள் எழுதிய 40 ற்கும் மேற்பட்ட வானொலி நாடகங்கள் பெருவரவேற்புடன் ஒலிபரப்பாகியிருக்கிறது.இதில் பத்திற்கும் மேற்பட்ட வானொலி நாடகங்கள் திறந்த போட்டிகளில் பரிசு பெற்றிருக்கின்றன. அதில் இருதடவைகள் சர்வதேச அளவில் நடைபெற்ற போட்டிகளில் பரிசு பெற்றிருக்கின்றன. இதைவிட 43 அங்கங்களை கொண்ட ஒரு தொடர்நாடகமும் ஒலிபரப்பாகி பெருவரவேற்பு பெற்றிருக்கிறது. இவர் எழுதிய முப்பத்தைந்திற்கும் மேற்பட்ட மாவீரர்களின் வரலாறுகள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட வானொலி நிகழ்ச்சிகள் தாயக வானொலியில் ஒலிபரப்பாகியிருக்கிறது.


Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share