செவ்வாய், 24 அக்டோபர், 2017

குர்திஸ்தான், கத்தலோனியா மக்களின் தனிநாட்டுக்கான அமோக ஆதரவு  ஆக்கிரமிப்பாளர்களால் மட்டுமல்ல  ஜனநாயகம் பேசும் நாடுகளாலும் கண்டு கொள்ளப்படவில்லை. 1977 இல் தமிழீழ மக்களின் தனிநாட்டுக்கான அமோக ஆதரவை ஜனநாயகம் பேசும் உலகு கண்டுகொள்ளாததால் பூர்வீக இனம்  ஒன்றின் ஆயுள் திட்டமிட்டவகையில் குறுக்கப்படுகிறது.  



Share/Save/Bookmark

புதன், 4 அக்டோபர், 2017

இன்று ஒவ்வொரு முகங்களாய் வந்து வந்து போகிறது

இயக்கத்தில் விரல் விட்டு எண்ணக்கூடிய அதிவிசேட பயிற்சி முகாம்கள் நடாத்தப்பட்டன. அப்பயிற்சிகளில் ஒரு பயிற்சிபெறுனராகவும் சமகாலத்தில்அம்முகாம்களின் மருத்துவப்பொறுப்பாளனாகவும்  வாழ்ந்தகாலங்கள் கடினமானவையாகவும்  இயக்கவளர்ச்சிற்கு இன்றியமையாததாகவும் உணர்கிறேன். காலை ஐந்து மணிக்கு துயில் எழுந்தால் இரவு பன்னீரெண்டுக்குப்பின்தான் நித்திரைக்கு செல்வேன். பயிற்சியாளர்களை தேர்வு செய்யும் ஆரம்ப பரிசோதனையில் இருந்து அவர்களது உணவு பட்டியலை தயாரித்து எனது கடமைகள் நீண்டவை. எனது கடமைகளை ஒழுங்காக செய்ததாய் உணர்கிறேன். அதனால்த்தான்  என்னவோ தரையில் நடந்த நான்கு   அதிவிசேட பயிற்சி முகாம்களுக்கும் நான் தெரிவு செய்யப்பட்டேன். நான்கிலும் பங்குபற்றியவன் இயக்கத்திலேயே நான் மட்டும்தான்.  இன்று ஒவ்வொரு முகங்களாய் வந்து வந்து போகிறது. நினைவுகள் கொடுமையானவை.           



Share/Save/Bookmark

ஞாயிறு, 24 செப்டம்பர், 2017

இப்ப நான் மட்டும் தனிமையில்

நண்பன் திலீபனின் நினைவுகளை சுமந்து 30 வருடங்கள் ஆகிறது . இன்றைய நாளும் எனக்கு கடினமாக இருக்கிறது. இயக்கத்தில் இருந்த காலங்களில் அவன் இல்லை என்பது பெரிதாக தெரியவில்லை. இயக்கம் சொன்னால் நானும் உண்ணாவிரதம் இருப்பேன் என்ற இறுமாப்பில் வாழ்ந்தேன். இன்றைய நாட்கள் குற்ற உணர்வில் கழிகிறது.
என் அம்மம்மா மரவள்ளிக்கிழங்கு அவித்து ஒரு சருவத்திலேயும் சிகப்பு சம்பல் ஒரு சாப்பாட்டுக்கோப்பையிலேயும் தருவா. நான், திலீபன், அருணன் சுற்றி இருந்து சாப்பிடுவம். இப்ப நான் மட்டும் தனிமையில்.  



Share/Save/Bookmark

வெள்ளி, 28 ஜூலை, 2017

துயர் தோய்ந்த பின்னிரவும் அதிகாலையும் .

24 / 11  / 1992  வளலாயில் மருத்துவ submain யில்  ஷெல்மழையிற்கு  நடுவில் கடமையில்நின்றேன் . எனது சகோதரன் படுகாயம் அடைந்துவிட்டான் என்பதை நடைபேசி ஊடாக அறிந்துகொண்டேன். அவன் இறந்தது அறிந்தும் அழுத்தவாறே இறுதிவரை முழுமூச்சுடன் கடமையில் நின்றேன். துயர் தோய்ந்த பின்னிரவும் அதிகாலையும் .      



Share/Save/Bookmark

வியாழன், 22 ஜூன், 2017

ராஜிவ் காந்தி கொலையில் குற்றம் சாட்டப்பட்ட கைதி "பயஸ் " ,இருபத்தைந்து வருட சிறைவாழ்விற்கு பின் தன்னை கருணைக்கொலை செய்யுமாறு கேட்கிறார் .  இலங்கையில் அமைதிப்படையால் கொல்லப்பட்ட மூவாயிரத்திற்கு மேற்பட்ட கொலைகளில் ராஜீவ் காந்தி எவ்வாறு சம்மந்தப்பட்டாரோ அதேபோல் பயஸும் ராஜீவ் கொலையில் சம்மந்தப்பட்டிருக்கலாம். இலங்கையிலும் பெரும் படுகொலைகளுடன் சம்மந்தப்பட்டவர்கள் ஜனாதிபதியாய், அமைச்சராய் ,இராணுவ அதிகாரியாய் சுகபோக வாழ்வுவாழ்கிறார்கள். உண்மையில் ஜனநாயகம் , நீதி என்பன நடைமுறையில் ஒரு கேலிக்கூத்து.


Share/Save/Bookmark

ஞாயிறு, 18 ஜூன், 2017

ஈழத்தமிழனாய் தலைகுனிவதை தவிர வேறுவழியில்லை.  காணாமல் போனோர்,  சிறையில் வாடும் அரசியல் கைதிகள்  உள்ளிட்ட பல துன்பத்தில் எம் உறவுகள் வதங்கிக்கிடக்க , நேர்த்தியான அரசியலற்று சிதைந்துபோகிறது ஆண்ட இனம்.

சிங்கள அரச/இராணுவ இயந்திரம் ஓய்வற்று இயங்கும்( இராணுவ முகாமைத்துவம் அறிந்தவர் விரிவாய் அறிவர்) . சிங்கள குடியேற்றம் உள்ளீடாய் தமிழின அழிப்பில் இந்நேரம் மூச்சாய் இயங்கும். நாங்கள் என்ன செய்யலாம்? முதுகில் குத்தும் தமிழனை பார்ப்பதா? கறையானாய் அரிக்கும் சிங்களவனை பார்ப்பதா?   


Share/Save/Bookmark

சனி, 3 ஜூன், 2017

புனர்வாழ்வுக் கழகத்தின் கீழ் Children Development council (CDC) என்ற அரசசார்பற்ற அமைப்பு இயங்கியது  அதன் முழுக்குறிக்கோள் வட கிழக்கிலுள்ள  முன்பள்ளி மாணவர்களின் வளர்ச்சிதான். அதை இயக்கியது ரவி அண்ணை (மகேந்தி,  சூட்டியின் சகோ), பிரான்சிஸ் அடிகளார் அதன் தலைவராய் இருந்தார். நான் ஆலோசகராய் இருந்தேன். இறுதிக்கூட்டம் 2008 பிற்பகுதியில் கிளி/ பசுமை நிறுவனம் அமைந்த பகுதியில் நடந்தது.    


Share/Save/Bookmark
Bookmark and Share