நான் ஏன் இடம்பெயர்ந்தேன்? வென்றவன் எழுதுவதுதான் வரலாறாகப்போகும் ( அது உண்மை வரலாறு அல்ல ), வென்றவன் முடிந்தவரை இருப்பவரை பயன்படுத்துவான் புனைவு வரலாறு எழுத, நானும் ஒருவனாய் அதில் இருக்கக்கூடாது என்பதால் புலம்பெயர்ந்தேன். சாட்சிகளற்ற இனஅழிப்பையே சிங்களம் எம்மண்ணில் நடாத்தியது. அந்த முகத்திரை கிழியுமோ இல்லையோ என் பங்களிப்பை வழங்க புலம்பெயர்ந்தேன். தேவையான நேரத்தில் என் பணி செய்தேன். என் மனச்சாட்சிற்கு தவறு செய்யக்கூடாது என்பதற்காய் நான் கொடுத்த விலையே என் புலம்பெயர்வாழ்வு.
ஞாயிறு, 13 மே, 2018
திரும்பிப்பார்க்கிறேன்- 39
நான் ஏன் இடம்பெயர்ந்தேன்? வென்றவன் எழுதுவதுதான் வரலாறாகப்போகும் ( அது உண்மை வரலாறு அல்ல ), வென்றவன் முடிந்தவரை இருப்பவரை பயன்படுத்துவான் புனைவு வரலாறு எழுத, நானும் ஒருவனாய் அதில் இருக்கக்கூடாது என்பதால் புலம்பெயர்ந்தேன். சாட்சிகளற்ற இனஅழிப்பையே சிங்களம் எம்மண்ணில் நடாத்தியது. அந்த முகத்திரை கிழியுமோ இல்லையோ என் பங்களிப்பை வழங்க புலம்பெயர்ந்தேன். தேவையான நேரத்தில் என் பணி செய்தேன். என் மனச்சாட்சிற்கு தவறு செய்யக்கூடாது என்பதற்காய் நான் கொடுத்த விலையே என் புலம்பெயர்வாழ்வு.
சனி, 12 மே, 2018
திரும்பிப்பார்க்கிறேன்- 38
நான் எனது பணியை செய்தேன் . அப்பா, அம்மா, சகோதரர்கள் தங்களுக்குரிய பணியை செய்தார்கள். எங்களது குடும்பம் தன் இனத்தின் விடுதலைக்கான எங்களுக்குரிய பணியை செய்திருக்கிறது என்பதே இப்போது எம்குடும்பத்தின் திருப்தி. சமூகத்தில் குடும்பநிலையில் எம்குடும்பம் பின்னடைந்து இருக்கலாம். அதைப்பற்றி எங்களுக்கு கவலையில்லை. எப்பொழுதுமே நாங்கள் உண்மையாக இருந்தோம்.
திரும்பிப்பார்க்கிறேன்- 38
திரும்பிப்பார்க்கிறேன் - 37
அண்ணையுடன் (தலைவர்) அவர்களுடன் ஓரளவிற்கு மனம்விட்டு பழகியிருக்கிறேன்.
இரண்டாயிரமாம் ஆண்டு தொடக்ககாலங்களிலேயே எமது அமைப்பு தோற்றுப்போகும் ஏதுநிலைகள் இருப்பதை மறைமுகமாய் பலதடவைகள் சொல்லியிருக்கிறார். நாங்கள்தான் அதை பெரிதாக எடுக்கவில்லை . ஆனால் எமது கொள்கை தோற்காது என்பதிலும் உறுதியாய் இருந்திருக்கிறார் . பேரழிவை சந்திக்கப்போகிறோம் என்பதை நேரகாலத்துடனேயே தெரிவித்திருந்தார். சில தசாப்தங்களுக்குப்பின் மீண்டும் போர் தொடங்கும் அப்போதைய எம் தலைவன் தன்னைப்போல் ஈவிரக்கம் பார்க்கமாட்டான் என்றும் தெரிவித்திருந்தார். எமது இனம் நிச்சயமாக விடுதலை அடையும். நாங்கள் எதிர்கால சந்ததிக்கு வீரவரலாற்றை கொடுத்துப்போகவேண்டும் என விரும்பினார் .
திரும்பிப்பார்க்கிறேன் - 37
வெள்ளி, 11 மே, 2018
முள்ளிவாய்க்கால்
இந்தி(யாவி)ற்கு ஈழத்தமிழரின் விடுதலையில் துளியும் விருப்பில்லை. அப்படியிருந்தும் இயக்கங்களை வளர்த்துவிட்டு , இயக்கங்களுக்கிடையில் முரண்களை உருவாக்கி , எங்களுக்குள்ளேயே அழிவை நயவஞ்சகமாய் செய்தது இந்தி(யா). எங்களை அணைப்பதுபோல் அணைத்து முதுகில் குத்தும் இந்தி(யா). ராஜீவை தாக்கிய சிங்களன் இலங்கையில் சுதந்திரமாக ஜனாதிபதி தேர்தலில் நின்றான். இந்தியா பெரிய தேசம் ஈழத்தில் தமிழனின் தனித்துவத்தை அழிப்பதே அதன் ஈழக்கொள்கை. ஸ்ரீ லங்கா மட்டும் எதிரியாக இருந்திருந்தால் ஈழம் எப்போதோ கிடைத்திருக்கும்.
ஒரு சிறு இனத்தின் வீரத்திற்கு உலகம் பயந்தது. ஒரு பேரழிவின் ஊடாக அந்த இனம் விடுதலைக்கனவை மறந்துவிடவேண்டும் என உலகம் விரும்பியது. நாளை விரியப்போகும் அந்த குவிபுள்ளியே முள்ளிவாய்க்கால்.
ஒரு சிறு இனத்தின் வீரத்திற்கு உலகம் பயந்தது. ஒரு பேரழிவின் ஊடாக அந்த இனம் விடுதலைக்கனவை மறந்துவிடவேண்டும் என உலகம் விரும்பியது. நாளை விரியப்போகும் அந்த குவிபுள்ளியே முள்ளிவாய்க்கால்.
முள்ளிவாய்க்கால்
திரும்பிப்பார்க்கிறேன்- 36
நாம் சுகாதாரசேவைக்காக பிரத்தியேகமான குறுந்தூர ஒலிபரப்பு வானொலியையும் உருவாக்கினோம். இந்த உருவாக்கத்தில் மருத்துவர் கலை அவர்களின் பங்கு அளப்பரியது. நாங்கள் எம் நடமாடும் சேவையுடன் இவ்வானொலியையும் இணைத்துக்கொண்டோம். சுமார் ஆறு கிலோமீட்டர் சுற்றுவட்டாரத்தில் மக்கள் எமது வானொலியை கேட்டார்கள். சில விசேட தினங்களிலும் எமது அலுவலகத்தில் இருந்து ஒலிபரப்பினோம். புலிகளின் குரல் வானொலியும் ஒரு குறுந்தூர ஒலிபரப்பு வானொலியை மாதத்திற்கு ஒருதடவை வெவ்வேறு இடங்களில் பல நிகழ்ச்சிகளுடன் நடத்திவந்தது. ஒருதடவை அந்த புலிகளின் குரல் வானொலியின் குறுந்தூர ஒலிபரப்பு வானொலி பழுதானதால் நண்பன் ஜவான் எங்களுடைய குறுந்தூர ஒலிபரப்பு வானொலியை தரமுடியுமா? என வந்து கேட்டார். அதே நாளே எங்களுக்கும் நடமாடும் சேவை இருந்ததால் உதவமுடியாமல் போய்விட்டது.
திரும்பிப்பார்க்கிறேன்- 36
செவ்வாய், 8 மே, 2018
திரும்பிப்பார்க்கிறேன்- 35
1981 ஆம் ஆண்டு மே மாதத்தில் நானும் இணைத்தலைமையாக இருந்து ஒரு நாள் பாடசாலை பகிஷ்கரிப்பு போராட்டத்தை செய்தோம். யாழ் நூலகத்தை இலங்கை அரசு எரித்ததற்கான அடையாள போராட்டம். அன்று அந்த போராட்டத்தை வெற்றியாக்கி அந்த இடத்தைவிட்டு நகர்கையில் இராணுவம் அந்த இடத்தை நோக்கி சென்றுகொண்டிருந்தது. எமக்கு தெரிந்த ஒருவரே இராணுவத்திற்கு பாடசாலைக்கு அருகில் இருந்த தபாற்கந்தோரின் தொலைபேசிக்கூடாக தகவல் கொடுத்திருந்தார். அந்தக்காலத்தில் இருந்து போராட்டவாழ்வு ஏதோவொருவகையில் பொதுவெளியில் தொடர்ந்து கொண்டிருக்கிறது. 1985 இல் என்னை இராணுவம் தேடியது . நளின் செனிவரத்ன என்ற இராணுவ பொறுப்பதிகாரியே எனது பல்கலைக்கழக பீடத்துடன் தொடர்புகொண்டு என்னைப்பற்றி விசாரித்திருந்தார். நான் எந்தவித குற்றங்களிலும் ஈடுபடாமல் போராடிக்கொண்டு இருக்கிறேன். ஆரம்பகால அரசியல் வேலைத்திட்டங்களில் இருந்து மருத்துவப்பணி முடித்து நீதிக்கான பங்களிப்பு வழங்கி நான் நகர்ந்துகொண்டிருக்கிறேன்.
திரும்பிப்பார்க்கிறேன்- 35
வெள்ளி, 4 மே, 2018
திரும்பிப்பார்க்கிறேன்- 34
சமாதானகாலத்தில் ( ரணில் பிரபா ஒப்பந்தகாலம்) இயக்கத்தில் சிலருக்கு க பொ த உயர்தரம் படிக்க சந்தர்ப்பம் கிடைத்தது. விரும்பிய சிலருக்கு கிடைக்கவில்லை. நான் தமிழீழ மருதுவக்கல்லூரியை பொறுப்பெடுத்த ஆரம்பகாலம் மலரவன் அவர்கள் என்னை சந்திக்க வந்தார். பிரியவதனா க பொ த உயர்தரம் படிக்க விரும்புவதாக சொன்னார். நான் அனுமதி கொடுத்து , யாரிடமும் சொல்லவேண்டாம் , அப்படி யாரும் அறிந்து கேட்டால் நான்அனுமதி தந்ததாக சொல்லுங்கள் என்று சொல்லி சில உதவிகளையும் செய்தேன். பின் பிரியவதனா மருத்துவபீடத்திற்கு தெரிவானதும், அண்ணையின் மகள் துவாரகாவிற்கும் பிரியவதனா படிப்பித்தார். கிளி பொன்னம்பலம் மருத்துவமனையில் மலரவனினதும் பிரியவதனாவினதும் மருத்துவப்பணி பொன் எழுத்துக்களால் பொதிக்கப்படவேண்டியது.
திரும்பிப்பார்க்கிறேன்- 34
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
