இரண்டாயிரத்து நான்காம் ஆண்டு,ஒரு சிறப்பு பயிற்சிமுகாம்.அந்த சிறப்பு பயிற்சி முகாம் வன்னியில் ஒரு காட்டினில் ஆடம்பரமற்றும், அழகாகவும் அமைக்கப்பட்டிருந்தது.அந்த அமைப்பு பணியை முன்னாள் இம்ரான் பாண்டியன் தளபதி ராஜேஸ்தான் செய்துமுடித்திருந்தார். அந்த பயிற்சி முகாமின் பொறுப்பாளராய் தளபதி கடாபி இருந்தார்.நானும் கடாபியும் நல்ல நண்பர்கள் அந்த முகாமில் ஒரே தங்குமிடத்தில் தங்கியிருந்தோம்.காலை ஐந்து மணிக்கு பயிற்சிக்கு எழுந்தால் பயிற்சி முடியும்வரை ஒன்றாகத்தான் திரிவோம்.கடாபி ஆதவன்,3/8 ஆகிய பெயரிலும் அழைக்கப்படுவார்.நான் 3/8என்றுதான் அழைப்பேன்.முன்பும் ஒரு பயிட்சிமுகாமில் நாங்கள் ஒன்றாக நின்றோம் அப்போது சங்கர் அண்ணாவும் எங்களுடன் இருந்தார்.
இரவு பயிற்சி முடிந்தாலும் கடாபி நிர்வாக வேலைகளை செய்துவர சாமம் ஆகிடும் எனது நித்திரையை குழப்பக்கூடாது என்று லைட் போடாமல் மெதுவாக போய் தனது படுக்கையில் படுப்பார்.போராளிகளுக்கு கண்டிப்பானவராய் தெரிவார்.எங்களுக்கு ஒரு உத்தமராய் தெரிந்தார்.அதித உழைப்பு ,இறுக்கமான நிர்வாகம் அவருடையது.சிறந்த துப்பாக்கி சூட்டாளர். சிறப்பு பயிற்சி முகாமில் ஞாயிறு ஓய்வு நாள்.அன்றும் ஒரு காலை காலை உணவிற்குப்பின் முகாமை சுற்றிப்பார்க்க இருவரும் சென்றிருந்தோம்.எல்லா இடங்களையும் பார்த்து
சூட்டு பயிற்சி நடக்கும் இடத்திற்கு போனோம்.அப்போது நல்ல சூட்டுப் போராளி ஒருவன் ஒரு துப்பாக்கியை கடாபியிடம் காட்டி இந்த துப்பாக்கி வலு சீராக்க ( Zero setting )வேண்டும் , சுடுகின்றபோது சரியான விலத்தல் இருப்பதாய் சொன்னான். அப்போது கடாபி அந்த குழுவின் தலைவனிடமும் அது பற்றி கேட்டார்.அவனும் ஆமோதித்தான் .இப்போது கடாபி அந்த துப்பாக்கியை வாங்கி எழுபத்தைந்து மீட்டர் தூரத்திலிருந்த ஏழு இலக்குகளுக்கு( Targets) ஒவ்வொரு ரவைகள் படி அடித்தார். போய் அந்த இலக்குகளை பார்த்துவருமாறு அந்த போராளியிடமும்,குழுத்தலைவனிடமும் கூறினார். அவர்கள் இருவரும் போய் வந்து முதல் ஆறும் குறிதவறவில்லை (Bபுள்),
ஏழாவது இலக்கில் குறிபட இல்லை என்றார்கள்.அப்போது கடாபி அந்த ஏழாவது இலக்கில் வலது கண்ணை வடிவாய் பார்த்திட்டு வாங்கோ என்றார்.இந்தத் தடவை ஆவலில் நானும் போனேன்.என்ன ஆச்சரியம் வலது கண்ணின் கறுப்புப்புள்ளிக்கூடாக சன்னம் போயிருந்தது.சாதரணமாய் சொன்னார் துப்பாக்கியில பிழை சொல்லாதையிங்கோ. கடாபி மிகச்சிறந்த சூட்டாளன் அதனால்த்தான் இயக்கத்திற்ற இருந்த ஒரேயொரு மக்னம் பிஸ்டலை கடாபியிடம் கொடுத்திருந்தார் தலைவர்.
- ஓவியன் -
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக