நாங்கள்
இரண்டு பேர், இயக்கத்தில
சேர்ந்த புதிது.எங்களுக்கு குட்டி விலாசம். சாரத்தோட பெக்கி சேட்டுமாய் எங்களைவிட்டால் ஆள் இல்லை என்றமாதிரி
திரிவம்.ஒரே சைக்கிள் அடிதான்.சிலநேரம் திலீபன் பத்து ரூபாய் காசு தரும் .அப்ப ஒரு
நெக்டோ சோடா நாலு ரூபாய் ஐம்பது சதம் . ஒரு சோடா வாங்கி இரண்டு பேரும் பிரிச்சு
குடிப்பம்.காலமை ஒருக்கா பின்னேரம் ஒருக்கா குடிப்பம்.ஒரு ரூபாயிட்கு
கச்சான்தான்.சின்ன சின்ன வேலைத்திட்டங்களாய் பறந்துதிரிவம். நாங்கள் ஒரே திரியிற
அழகான கிராமம் ஒன்றில ஒராள அடிக்கடி சந்திப்பம்.அந்த ஆளின்ர சைக்கிளில உமல் பை
தொங்கும்.நாங்கள் முறைச்சு பார்க்கிறதை பார்த்திட்டு அந்த ஆள் நிலத்தை
பார்த்துக்கொண்டு போயிடுவார். எங்களுக்கு அவரில சந்தேகம்.எங்களுக்கு என்று வேற
வேலைகள் இருந்ததால அவரை பின்தொடர ஏலாமல் போயிற்று.ஆனால் கெதியில அவரை பின்தொடருற
திட்டம் இருந்தது.ஒரு நாள் சுதுமலையில ஒரு ஒழுங்கைக்க நின்று திலீபன் உடன்
கதைத்துக்கொண்டு நின்றம்.அந்த ஆள் சைக்கிளில வாறார். நாங்கள் இன்றைக்கு சிங்கனை
அமத்துவம் என்று மனசுக்குள் யோசித்தம்.திலீபனுக்கு ஆளை காட்டினோம்.திலீபன் தன்ர
கரியல் சைக்கிளில் இருந்து மெதுவாய் இறங்கிச்சு .நாங்களும் நினைச்சம் அமத்தத்தான்
என்று. திலீபன் இறங்கி அந்த ஆளுக்கு இராஜ மரியாதை.பிறகென்ன அசுரகதியில நாங்களும்
சைக்கிளைவிட்டு பாய்ந்தோம்.அவர் ஒரு முக்கிய போராளி திலீபன் அவரை சுருளி அண்ணை
என்டு அறிமுகப்படுத்திச்சு.நாங்கள் வழிஞ்சுகொண்டு நின்றம்.சுருளி அண்ணை நன்கு
சிரித்துக்கதைத்தார்(ஒன்றும்
தெரியாத மாதிரி). பின் சுருளி
அண்ணையின் ஆயுதக்கிடங்கு ஒன்று என்ற பொறுப்பில இருந்தது.
அந்த
ஆயுதக்கிடங்கைப்பற்றியும் சொல்லோனும் .
அந்த ஆயுதக்கிடங்கு ஒரு ஒதுக்குபுறமான பொது வளவுக்க இருந்தது.இந்த
நாசமாய்ப்போவாங்கள் ( எங்கட ஆட்கள்தான்) அதுக்குப்பக்கத்தில வைச்சு இந்தியன்
ஆமிக்கு அடியெண்டால் செம அடி.ஆமி பிறகு வந்து சுத்தியிருக்கிற வீடுகள் எல்லாம்
கொழுத்தி சனத்தை சுட்டு,அடிச்சு
தங்கட வழமையான வேலையை செய்திட்டு போட்டாங்கள் .நான் மூன்று நாள் குட்டி போட்ட நாய்
மாதிரி திரிஞ்சன்.
ஓவியன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக