ஆயிரத்து தொளாயிரத்து தொண்ணூற்றி ஆறாம் ஆண்டு அண்ணையோடு கதைத்துக்கொண்டு இருந்தோம்.அப்பொழுது கிரிக்கட் பற்றி கதை தொடங்கிற்று.தமிழேந்தி அண்ணைதான் ஆரம்பித்துவைத்தார்.தமிழேந்தி அண்ணை ஒரு இந்திய அணி ஆதரவாளர்.அதிலும் டெண்டுல்காரின் விசிறி .அந்த நேரம் இலங்கைக்கும்
அவுஸ்திரேலியாவிட்கும் போட்டி நடக்கயிருந்தது.தமிழேந்தி அண்ணை
அண்ணையிட்ட சொன்னார் " தம்பி சொர்ணம் இலங்கை அணியின்ர ஆதரவாளர்" . சொர்ணம் அண்ணையிட்ட சொல்லிச்சு அண்ணை சிங்களவன் எப்படியெண்டாலும் எங்களை ஒத்தவன் அவன் அப்படியில்லை.அண்ணை சொர்ணம் சொன்னதை ஆமோதித்தார்.
நான் வெஸ்ட்இண்டீஸ் ஆதரவாளன்.எனக்கு ஏனோ இலங்கை இந்தியா பிடியாது.ஒவ்வொருத்தர் ஒவ்வொருமாதிரித்தானே.அண்ணையிடம் இனவாதமோ,மதவாதமோ எதுவும் இருந்ததில்லை.அவர் அருகில் இருந்தவர்கள் சிலர் இன்னும் உயிரோடு அங்கும் இங்கும் இருப்பார்கள்
அவர்களிடம் கேட்டுப்பாருங்கள்.தூரத்தில் இருப்பவர்கள்தான் அவரை நா கூசாமல் விமர்சிக்கிறார்கள்.இனத்தின் விடுதலையும் மேம்பாடும்தான் அவரின் சதா சிந்தனையாய் இருந்தது. அதில் விட்டுக்கொடுப்புகளுக்கு இடம் இல்லை.ஒவ்வொரு போராளியும் மாவீரர் ஆகும்போது அந்த சுமை அவரின் நெஞ்சில் கூடிக்கொண்டே போனது.
இயக்கத்தின் அரசியல் துறை பொறுப்பாளரின் மனைவி சிங்கள இனத்தை சேர்ந்தவர்.அரசியல் ஆலோசகரின் மனைவி வெள்ளை இனத்தை சேர்ந்தவர்.இன்னுமொருவரின் மனைவி தாய்லாந்தை சேர்ந்தவர்.சில போராளிகள் சிங்கள பெண்களை மணந்திருந்தார்கள்( தேவை கருதியும்,விரும்பியும்).ஒரு தடவை சிங்களப்பெண்ணை மணந்த போராளியொருவன் குடும்பமாய் வன்னிக்கு வந்திருந்தான்.வரும்போதே அவனது நான்கு வயது பெண்குழந்தைக்கு டெங்கு நோய் இருந்திருக்கிறது.
இங்கு சீரியஸ் ஆகிவிட்டது.பல போராளிகள் அந்த பிள்ளையை எப்படியும் காப்பாற்றிவிட வேண்டும் என்று துடித்தார்கள்.அந்த பிள்ளைக்கு இரத்தம் ஏற்றவேண்டும் ஒரு பொறுப்பாளர் தனது இரத்தத்தை ஏற்றச்சொன்னார் ஆனால் அந்த இரத்தம் பொருந்தவில்லை.இன்னுமொரு போராளியின் இரத்தம் ஏற்றப்பட்டது.அந்த குழந்தை காப்பற்றப்பட்டதுடன் அந்த குழந்தை அந்த மருத்துவமனையில் இருந்து வெளிக்கிட மறுத்தும்விட்டது. குழந்தை பணியாளர்களுடன் மிகவும் ஒட்டிவிட்டது.பின் அந்த குடும்பம் தலைவரை சந்தித்து சிங்கள தேசத்திற்கு போனது.
அந்த உன்னத தலைவனை எழுதும் அருகதை எனக்கு கிடையாது.இருந்தும் சிலரின் விமர்சனம் எழுதத்தூண்டுகிறது.
- ஓவியன்-
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக