அம்மா
இருந்த உணவை பகிர்ந்து
எம் வயிறு நிரப்பி
நீரை மட்டும் நீ குடித்து
சிரித்தபடி எமை வளர்த்தாய்
வளர்ந்தால்
உன்னை பார்ப்பார் என்றோ
படித்து பெரியவர் ஆவார் என்றோ
நீ கனவு கண்டிருப்பாய்
எதுவும் நடக்கவில்லை
யாருக்கும் உதவும் உன்மனம்
பிள்ளைகளோடு பிறந்ததால்
பிள்ளைகள் உன்னோடு இல்லை
ஒருபோதும் நீ நினைத்திருக்கமாட்டாய்
உன் இறுதிசடங்கில் கூட
உன் பிள்ளைகள் வரமாட்டார் என்று
அம்மா நீ விரும்புவாயோ
இல்லையோ
அடுத்த பிறப்பிலும்
நீதான் எமக்கு அம்மாவாகவேண்டும்
1 கருத்து:
வணக்கம்
அம்மாவைப்பற்றிய கவிதை மிக அருமையாக உள்ளது
அடுத்த பிறப்பிலும்
நீதான் எமக்கு அம்மாவாகவேண்டும்... எல்லோரும் வேண்டி நிப்பது...இதைத்தான்...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கருத்துரையிடுக