கிளிநொச்சி இரணைமடு பிரதேசத்தில் சமாதானகாலத்தில் அதிநவீன மருத்துவமனை ஒன்று புலம்பெயர் உறவுகளின் உதவியுடன் விடுதலைப்புலிகளால் கட்ட திட்டமிடப்பட்டது. அது சம்மந்தமான செய்தி மேலெழுந்தவாரியாக தெரிந்திருந்தது. எனது வேலைப்பளுக்களுக்கிடையில் அச்செய்தியை நான் பெரிதுபடுத்தியிருக்கவில்லை. மருத்துவமனை சம்மந்தமான முக்கிய சந்திப்பு ஒன்றுக்கு முன்பு அரசியல்த்துறை பொறுப்பாளரால் நான் மருத்துவமனையின் Executive Director ஆக அறிவிக்கப்பட்டேன். தாயகம் மருத்துவமனை திட்டம் உலகத்தரத்திலானது. இயக்கம் மிகவும் தூரநோக்கோடு இருந்தது . "தாயக மருத்துவமனை" என பெயரிடப்பட்ட அந்த மருத்துவமனையும் கானல் நீராகவே போய் விட்டது.

திரும்பிப்பார்க்கிறேன்- 4
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக