வெள்ளி, 16 அக்டோபர், 2020
சனி, 19 செப்டம்பர், 2020
சனி, 12 செப்டம்பர், 2020
எமது அமைப்பில் தாயக மண்ணில் சொற்ப போராளிகளே பணியில் இருந்தகாலம். ஆரம்பத்தில் கம்பர் என்ற வகை சைக்கிளில் பின்னால் பெரிய கரியரில் களத்தில் பத்திரிகையுடன் வயல்வெளிக்கூடாக வந்து எமக்கு சுமையேற்றி போவான். இன்றும் ஞாபகம் இருக்கிறது ஓ! சத்தியநாதா என்ற போஸ்டர் கட்டினையும் ( முதலாவது மாவீரர் சங்கர்) இப்படித்தான் கொண்டுவந்து தந்துபோனான். பின் ரலி வகை சைக்கிளில் வந்தான். பின் சிறிய மோட்டார் சைக்கிளாகி 185 , 200 என்ற மோட்டார் சைக்கிளில் அவனது பணிச்சுமை கூடியது. ஆரம்ப காலத்தில் சிறுகோயில்களின் முற்றங்களில் அல்லது விளையாட்டு மைதானங்களில் பின் பாடசாலை வகுப்பறைகளில் பேசத்தொடங்கியவன் பின் பெரும்வெளிகளில் நின்று பேசினான், அந்த ஒலி இன்னும் கேட்டுக்கொண்டிருக்கிறது. அவன் நாளும் பொழுதும் எப்போதும் மக்களின் விடுதலை என்ற கனவோடே திரிந்தான். நண்பா!நீ நினைத்த மக்கள் புரட்சி நடக்கவில்லையடா , உன் பசியும் மூ பதினொரு ஆண்டாகியும் தொடருதடா. கைகூப்பி அஞ்சலிக்கிறோம்.
சனி, 8 ஆகஸ்ட், 2020
திரும்பிப்பார்க்கிறேன்
1996 ஆம் ஆண்டின் பிற்பகுதி அல்லது 1997 ஆம் ஆண்டின் முற்பகுதியாக இருக்கவேண்டும். நான் ஒட்டிசுட்டானில் அமைந்திருந்த அபயன் மருத்துவமனையின் பொறுப்பு மருத்துவராய் இருந்தேன். மாதம் ஒருமுறையாவது கரும்புலிகளின் முகாமிற்கு செல்வது வழக்கம். அப்போது அமைந்திருந்த அவர்களின் முகாமிற்கு முத்தையன் கட்டு குளத்திற்கு வலதுபக்கமாய் சென்று போகவேண்டும். பசுமை என்ற மருத்துவமனைக்கு இடதுபக்கமாய் சென்று போகவேண்டும். கரும்புலிகளின் முகாமிற்கு மாதவன் அவர்கள் பொறுப்பாக இருந்தார்கள். நான் வழமையான எனது கடமைகளை முடித்து, பின் மதியபோசனமும் உண்டபின் மாதவன் அவர்கள் அங்கிருந்தவர்களுடன் ஒரு உரையாடலுக்கு ஒழுங்குபடுத்தினார். தரையில் பாய்களை ஒழுங்காக விரித்து அதன்மேல் நாங்கள் இருந்தோம். எப்போதும் புன்னகை தவழும் குமுதன்தான் அந்த கேள்வியை கேட்டான் " தமிழீழம் எப்படி இருக்கும்? தமிழீழத்தில் மக்கள் எப்படி வாழ்வார்கள் ? ". எல்லோரின் முகங்களிலும் ஆவல் விசாலித்திருந்தது. நான் எனது குறை அறிவுடன் என் கனவு தேசத்தை பற்றி முடிந்தவரை சொன்னேன். அவர்களில் சிலருக்கு என்னைவிட அதிக கற்பனை இருந்ததையும் அவர்கள் இதை பலதடவை உரையாடியிருக்கிறார்கள் என்பதையும் அனுமானிக்க கூடியதாய் இருந்தது. நீண்டநேர உரையாடலில் அவர்களின் மகிழ்ச்சியின் அளவை என்னால் எழுதிமுடிக்கமுடியாது.
திரும்பிப்பார்க்கிறேன்
திங்கள், 3 ஆகஸ்ட், 2020
திரும்பிப்பார்க்கிறேன்
வடமாகாணத்திற்குரிய தலைநகராய், மாங்குளம் பகுதியை ஒரு பெருநகராக்க திட்டமிட்டிருந்தோம். மாங்குளம் சந்தியில் இருந்து 1-2 கி மீ தூரத்தில் நாற்சதுரவடிவில் மாங்குளம் சந்தியை சுற்றி அகல பாதையமைக்க திட்டத்தில் இருந்தது. முருகண்டியில் சர்வதேச விளையாட்டு மைதானம் அமைய திட்டமிடப்பட்டது. பல்வேறு காரணங்களால் எதுவுமே நடைபெறவில்லை.
திரும்பிப்பார்க்கிறேன்
வெள்ளி, 17 ஜூலை, 2020
அன்பால் பிணைந்த உறவை எவரால் அறுத்தெறியமுடியும் ?
கனவுகள் எல்லாம் மெய்ப்பதும் இல்லைநினைவுகள்போல காய்ப்பதும் இல்லை வீரர்கள் எல்லாம் களத்தில் மாய்வதும் இல்லைஇலக்கை அடையும்வரை அவர் ஓய்வதும் இல்லை
தாய்நிலம் காக்க புறப்பட்ட சேய்கள்காயம் ஆற ஒன்றாவார்கள் - சுயநலம் அறியா மாவீரர் சுவடுகள் தேடி ஓடி வருவார்கள் கவலைகளால் பின்னிய வலைகளை மீறி எகிறி எழுவார்கள் - அன்பால் பிணைந்த உறவை எவரால் அறுத்தெறியமுடியும் - அதுவரை காத்திருக்கும் தாய்நிலம் புழுங்கியபடி
அன்பால் பிணைந்த உறவை எவரால் அறுத்தெறியமுடியும் ?



