1990 - 1995 காலப்பகுதியில் வட இலங்கையில் நடைபெற்ற இராணுவத்திற்கும் புலிகளுக்கும் இடையிலான போர் முனையில் கள முன்னணி மருத்துவராக பணிபுரிந்தேன். துப்பாக்கி ரவைகளுக்கும் ஷெல் எறிகணைகளுக்கும் விமான குண்டு வீச்சுக்கும் நடுவில் பணிபுரிந்தது எப்போதும் எனக்கு ஒரு சவாலான அனுபவம்தான். பலதடவைகள் மயிரிழையில் உயிர் தப்பியிருக்கிறேன். களப்பணியில் பல உயிர்களை காத்திருக்கிறேன் என்பதுபோல் என்மடியில் என் கண்முன்னால் உயிரிழந்தவர்களின் நினைவும் என்னில் ஆழமாய் படிந்துபோய் இருக்கிறது. உண்மையில் ஒவ்வொரு தடவையும் களமுனையில் பணியாற்றி பாதுகாப்பான பகுதியிற்கு மீள்கையில் தப்பிவிட்டோம் என்ற உணர்வு வந்து போகும். சில களச் சம்பவங்களை நினைக்கையில் இப்போதும் மயிர்க்கூச்செறிகிறது. எனது களமருத்துவப்பணியில் எப்போதும் நேர்த்தியுடன் இயங்கியிருக்கிறேன். எனக்கு மிகப்பொருத்தமான பணி களமருத்துவம்தான் என்ற நினைப்பும் எனக்குண்டு. சிலநேரம் எனது தந்தையும் களமருத்துவர் என்பது காரணமாய் இருக்குமோ தெரியவில்லை .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக