எண்பதுகளில்
சுகந்தன்/ரவிசேகரம் என்ற போராளி விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்தார்.யாழ்
பல்கலைக்கழகத்தின் மாணவராக இருந்த அவர் மறுமலர்ச்சிக்கழகத்தின் முக்கிய
செயட்பாட்டாளராய் இருந்தார்.அவருடைய சொந்த ஊர் மாதகல் ஆகும்.
சிறிலங்கா
அரசு தமிழர்களின் தாயகத்தை சிதைக்க சிங்களக் குடியேற்றங்களை விரைவு
படுத்திக்கொண்டிருந்த காலம்.
மணலாறில் கென்
பார்ம்,டொலர்
பார்ம் என்பன தமிழர்களின் வளமான
விவசாயப்பண்ணைகள் அந்த
பண்ணைகளையும் ஆக்கிரமித்து சிங்கள குடியேற்றம் நடை பெற்றது. குற்றம் செய்த சிங்கள
மக்களை குடியேற்ற பாவித்தார்கள் .குடியேற்றங்கள்
எப்போதும் நிரந்தர ஆக்கிரமிப்பிற்கு வழிகோலும். அதனால் அப்போது ரெஜி அண்ணை,மாத்தையா
அண்ணை தலைமையில் அந்த குடியேற்றங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
அதில்
சிங்களமக்கள் கொல்லப்பட்டார்கள்.
சாதாரண
சிங்கள மக்கள் கொல்லப்பட்டது சில போராளிகளுக்கு கவலையை கொடுத்தது.சுகந்தன்
அண்ணாவும் தலைவருடன் இது விடயமாய் கதைக்க தமிழ் நாட்டிற்கு சென்றார்.தலைவர்
அவர்கள் நடைமுறையில் சில விடயங்கள் தவிர்க்க முடியாது என்று
சொல்லிவிட்டார்.சுகந்தன் அண்ணா இயக்கத்தில் இருந்து விலத்துவதாய்
துண்டு
கொடுத்துவிட்டு வந்துவிட்டார்.விலத்திபோகும் போதும் அவருடன் இருந்த சயனைற்றை சுகந்தன் அண்ணாவின்
விருப்பப்படி ,
சுகந்தன்
அண்ணா வைத்திருக்க அனுமதிக்கப்பட்டது.பின் கச்சேரியடியில்
சிங்கள இராணுவத்தின் ஒரு சுற்றிவளைப்பில்
சுகந்தன் அண்ணா சயனைட் உண்று மரணமானார். அது மிகவும் கவலையானது.
பின் ஒரு
காலத்தில் தலைவரிடம் இவ்விடயத்தை கதைத்தேன்.தலைவரும் மிகவும் கவலைப்பட்டார்.
குடியேற்றத்தை இல்லாமல் செய்ய வேறு என்ன செய்யலாம்? யாரோடையும் பேச்சுவார்த்தை நடத்தினால்
போய்விடுவார்களா? நடைமுறையில்
வேறு தேர்வு
இல்லையே.உயிர்களின் மதிப்பை நான் உணர்கிறேன்.
எங்களுடைய
மனச்சாட்சியையும் தாண்டித்தான் நடைமுறை வாழ்வு இருக்கிறது.நாங்கள் விரும்பியோ
விரும்பாமலோ சில விடயங்களை
செய்ய எதிரி
தூண்டுகிறான் என்று சொன்னார் அண்ணை.
ஓவியன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக