வேர்கள்
வெளியில்
தெரிவதில்லை
கனிகள்,காய்கள்
ஏன் மரங்கள்
கூட
கொண்டாடப்படுகையில்
வேர்களின்
வியர்வையை
யாரும்
துடைப்பதில்லை
மரத்தை
வளர்க்க
நிலத்தை துளையிட்ட
வேர்களின் வலி
யார் அறிவார்?
கனிகளை,காய்களை,மரத்தை
திருடுகையில்
வேரின்
அழுகையை யார் நினைத்தார்?
வேர் என்பது
உயிருள்ள
அத்திவாரம்
தாயை போல,
தாயின் தாயை
போல
மரம் வானளவு
வளர்ந்தாலும்
வேர்களுக்குத்தான்
தாய்
மண்ணின் முத்தம்
வேர்
கிழங்கானால்
மரமும்
சாகும்
சுயநலர்களுக்காய்.
-நிரோன் -
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக