மனிதனின் வாழ்வுமட்டுமல்ல
விலங்கின் வாழ்வும் குறுகியதுதான்
இருந்துமென்ன
இருக்குமட்டும் புரிவதில்லையவர்
பூமியிருக்கிறது
எம்பரம்பரைகளின் கதைகளை அறிந்த
பூமியிருக்கிறது
சாட்சியாக வானமிருக்கிறது
மூச்சாகும் காற்று இருக்கிறது
இருந்துமென்ன
பேச்சிருக்கும்வரை
உனது ஆட்சிதான்
யார் பேச்சும் கேட்கமாட்டாய் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக