நான் தலைவரை சந்தித்து வரும்போது தலைவர் அவர்கள் ஏதாவது புத்தகங்களை தருவார்(எல்லா தடவைகளிலும் அல்ல) . நான் வாசித்துவிட்டு கவனமாக மீளக்கையளிப்பேன். ராஜு அண்ணையும் தாங்கள் இரகசியமாக வெளியிடும் புத்தகங்களை தருவார். நான் இரகசியமாக வாசித்துவிட்டு கவனமாக மீளக்கையளிப்பேன். கடாபி அவர்களும் புத்தகங்களை தந்திருக்கிறார். இவர்கள் ஏதோவகையில் என்னை வழிப்படுத்தியிருக்கிறார்கள். இவர்களுடன் சங்கர் அண்ணையும் இராணுவ விஞ்ஞானத்தில் நான் ஓரளவு புடம்போடப்பட உதவியிருக்கிறார்கள். இவர்களுடனான உரையாடல்கள் என் வாழ்காலத்தின் மிகுபயன் என்றால் அது மிகையல்ல.

திரும்பிப்பார்க்கிறேன்- 12
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக