சாதனைப்பெண்
கானவியை நான் த.குயில் ஆக நன்கு அறிந்தவன். த.குயில் அவர்களின் ஓயாத ஒன்றரை தசாப்த உயிர்காக்கும் பணியை கண்கண்ட சாட்சியாக நான் இருக்கிறேன். அவரினதும் அவரின் அணியினதும் அளப்பரிய மருத்துவப்பணியால் (அகாலவேளையிலும்) பல உயிர்கள் காப்பாற்றப்பட்டன. இப்பணியை எழுத்திலோ, பேச்சிலோ எடுத்துரைப்பது இலகு அல்ல. இதற்கு நிகரான மருத்துவப்பணி உலகில் எங்கும் நிகழ்ந்திருக்குமோ தெரியவில்லை.
த.குயில் அவர்களின் " மருத்துவ மடியில் " ( உண்மைக்கதைகளின் தொகுப்பு) என்ற நூலை , அவரது வேறு ஆக்கங்களை சுமார் ஒரு தசாப்தத்திற்கு முன் வாசித்திருக்கிறேன். அவர் வாழ்ந்த வாழ்க்கைக்கும் அவர் எழுதிய அன்றைய எழுத்துக்களுக்கும் வேறுபாடில்லை. உண்மைமனிதர்களின் எழுத்துக்கள் . இப்படிப்பட்டவர்களை தற்போது எங்கேனும் காண்பது அரிது.
"கருணை நதி" என்ற நாவலை ஒரு கருணைக்கடல் எழுதியிருக்கிறது என்றுதான் நான் உணர்கிறேன். கானவியிடம் நிச்சயமாக இன்னும் பல நூறு கதைகள் உண்டு , அவையும் நூலுருப்பெற வாழ்த்துகிறேன்.
- கா. சுஜந்தன்-

"கருணை நதி"
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக