போர்க்கால கடமை என்பது அமைதிகாலத்தைவிட எப்போதும் பல மடங்கு கடினமானது. எனது கடமைக்காலத்தில் அரச சாரா நிறுவனங்களுடன்(NGO) இணைந்து மக்களுக்காய் பணி புரிந்ததும் மனதில் பதிந்துள்ளது. OXFAM (INGO ) , FORUT (INGO ) , ICRC(INGO ) என்பன வருமுன்காப்புப்பணியில் சுகாதார பணியாளர்களை வன்னியில் கடமை செய்ய உதவியிருந்தன. இந்தப்பணியாளர்களின் பங்களிப்பும் வருமுன்காப்புப்பணியில் வன்னியில் முக்கியமானது. போர்க்காலத்தில் சுகாதாரத்திணைக்களத்தில் பாரிய ஆளணி தட்டுப்பாடு நிலவியது யாவருக்கும் தெரிந்ததே. இந்தப்பணியாளர்களின் உருவாக்கத்தில் , வினைத்திறனை அதிகரித்ததில்,ஒருங்கிணைத்ததில் எனது பங்கு நேரடியாக முக்கியமானது. உலக உணவு நிறுவனத்தின் (WFP) need assesment ற்கான consultant ஆக இருந்ததுடன் தொடர்ந்தும் இணைந்து பணியாற்றியிருந்தேன். WHO நிறுவனத்தால் கிளி முல்லை மாவட்ட UN staff ற்கான medical adviser ஆக நியமிக்கப்பட்டிருந்தேன் . சிறுவர் பட்டினிச்சாவு தவிர்ப்புத்திட்டத்தில் TRO உடன் இணைந்து முக்கிய பணியாற்றியிருந்தேன். CHC (Centre for health care ) சுகாதார நிறுவனத்தின் தலைவராகவும், CDC (Children Development Council ))யின் ஆலோசகராகவும் கடமையாற்றினேன். இறுதிப்போர்க்காலத்தில் பெரும் பங்காற்றிய Health Development council ( சுகாதார அபிவிருத்திச்சபை ) என்ற NGO வை உருவாக்கினேன்.

திரும்பிப்பார்க்கிறேன்- 13
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக