மக்களுக்கு , பல போராளிகளுக்கு முகம் தெரியாமல் விடுதலைக்காய் தியாகமானவர்களில் பலர் எனக்கு முகம் தெரிந்தவராய் இருந்தார்கள்.
எனக்கும் முகம் தெரியாதவர்கள் இருந்தார்கள். அவர்கள் யார்? இராணுவப்பகுதிகளுள் சென்று காயமடைந்திருப்பர் அல்லது நோய்வாய்ப்பட்டிருப்பர். இங்கிருந்து அவர்களுடன் அல்லது அவர்களை பராமரிப்பவருடன் அல்லது அவர்களின் மருத்துவருடன் கதைத்து மருத்துவ ஆலோசனைகளை வழங்கவேண்டியிருக்கும்.அதற்கான ஒழுங்குகள் உரியவர்களால் செய்யப்படும். உண்மைப்பெயர்களை பரிமாற முடியாது. சிலநேரம் தெரிந்த முகங்களாகவும் கூட இருந்திருக்கலாம்.ஒவ்வொருதடவையும் எமது மேலிடத்திற்கு மருத்துவ அறிக்கை கொடுக்கவேண்டும். என்ன ஆச்சரியம் எந்த உயிர்களையும் அந்த தொலைபேசி மருத்துவத்தில் நான் இழக்கவில்லை. எனது தொலைபேசி மருத்துவமும் இரணைப்பாலைவரை என்னோடு பயணித்தது. அந்த முகம் தெரியாதவரில் சிலர் சரித்திரமாக வாழக்கூடும். இறுதியில் அவர்கள் கூறிச்சென்ற அன்புநிறைந்த சொற்கள் என்சாவோடு சாகட்டும்.

திரும்பிப்பார்க்கிறேன்- 8
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக