சனி, 7 மே, 2011

யார் செய்தது குற்றம் ?

விடுதலைப் புலிகள் 
மக்களை பாதுகாக்கவே 
பல தடவைகள் 
பகிரங்கமாய் 
யுத்த நிறுத்தம் கேட்டிருந்தனர் 
மறுத்தது சிங்கள அரசு 
மக்கள் செறிபகுதியினுள் 
அதீத செல்,பீரங்கி,விமான தாக்குதலுடன் 
ஊடுருவின சிங்கள படைகள் 

யார் செய்தது குற்றம்?

அரசு 4 இலட்சம் மக்கள் இருக்க
70,000 ஆயிரம் மக்களே
உள் இருப்பதாய் கொடும் பொய் சொன்னது
3 இலச்சம் மக்களை 
மூடிய தேசத்தில் படுகொலை செய்வதே 
அரசின் திட்டமாக இருந்தது 
மிகக் குறைந்த உணவு,மருந்து வழங்கலை
வேண்டா வெறுப்பாய்ச் செய்தது 
விடுதலைப்புலிகள் 
தமது உணவை பகிர்ந்து கொடுத்தனர் 
அவசிய சத்திரசிகிச்சை மருந்துகளைக் கொடுத்தனர் 
பட்டினியில் வாடிய மக்களுக்கு 
இறுதிவரை கஞ்சி ஊற்றினர் 
காயமடைந்தவரை 
மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் 
இடம்பெயர இடம்பெயர 
அரச,வங்கி,மருத்துவமனைகளை 
இடம்மாற்ற 
தம்மாலான அனைத்து 
உதவிகளையும் செய்தனர் 
மருத்துவசேவை  வழங்குதலில்
வி.பு.மருத்துவபிரிவினரே 
உச்ச பங்கு வகித்தனர் 
விடுதலைப்புலிகளின் அறிவுறுத்தல்,உதவி உடன் 
மக்கள் பதுங்ககழி அமைத்தனர் 
பல ஆயிரம் உயிர்கள் காப்பாற்றப்பட்டன  
வைகாசி 15 ஆம் திகதிவரை
வி.புலிகளின் நிர்வாகம் இயங்கிற்று 
மக்கள் சேவைக்காக மட்டும்
சில நூறு போராளிகள் வீரச்சாவு எய்தினர்  

யார் செய்தது குற்றம் ?

வி.பு.  மக்களின் விடுதலைக்காக
தூய மனதுடன் 
இறுதிவரை இயங்கினர் 
நடைமுறையில் 
சில தவறுகள் இருக்கலாம்-ஆனால்
சிங்களம் தவறுகளை 
மிகப் பெரிதாக உலகிற்கு காட்டிற்று 

வி.பு 
மக்கள் இராணுவலைக்குள்
செல்வதை விரும்பி இருக்கவில்லை 
அது ஏன்?
மக்களின் இன்றைய துயர் பதில் சொல்லும்    

தயவு செய்து 
விடுதலைப்புலிகளை ,
வி.பு தலைவனை 
நடுநிலையாக /சுயாதீனமாக 
ஆய்வு செய்யுங்கள் 
விடுதலைப் பற்றை புரிந்து
இன விடுதலைக்காக உழையுங்கள் 

                                                                   -சுருதி-


  


Share/Save/Bookmark