வெள்ளி, 30 டிசம்பர், 2016

நம்பிக்கை

வருடம் கழியும் வெறுமையில்
வருடம்பிறக்கும் வறுமையில்
ஒரு வருடம் கூடுகிறது
இறுதிவார்த்தை பகிர்ந்து ,
காணாமல் போய்,சிறைக்குள்
புதுவருடம்
வழமைபோல் உலகதிருவிழா
போரில்உ லகிடம் தோற்றோம்
நிலத்திலும் புலத்திலும்
நாளும் அடையாளம் இழக்கிறோம்
நாளாந்தவாழ்வில் எதிர்காலத்தை
புதைக்கிறோம் - இருந்தும்
நம்பிக்கையை விதைக்கிறோம்
"நவீன உலகில்
எதுவும் சாத்தியமாகலாம் "


வருடம் கழிகிறது
பல கனவுகளை மீள நினைக்கிறேன்
2000  இல் கிளிநகரின் திட்டமிடலில் ஒருவன்
அறிவியல் நகரில் ஆயிரம் கனவுகள்
முருகண்டியில் எழுபது ஏக்கரில் மைதானம்
இரணைமடுவில் "தாயகம்" மருத்துவமனை
அதன் பணிப்பாளராக நியமனம் (2004 )
கிளிமருத்துவமனை முன் மருத்துவ ,உணவு ஆய்வுகூடம் (2008 )
மாங்குளத்தில் பெருநகர் திட்டமிடல்
தமிழீழத்தின் சுகாதாரதிட்டமிடல் (2007 )
இன்னும் இன்னும் பல கனவுகள்  
கருவில் கலைந்தநினைவுகள்        
Share/Save/Bookmark

சனி, 10 டிசம்பர், 2016Share/Save/Bookmark

சனி, 3 டிசம்பர், 2016

என் மரியாதை எப்போதும்

பிடல்
ஒரு காலத்தில்
எங்களுக்குள் புதுந்துகொண்டவன்
கியூபாவிற்காக மட்டும் வாழ்ந்தவன்
சே அப்படியல்ல
அவன் மக்கள் விடுதலைக்காய் பிறந்தவன்
பிடல்
அதிபராக இருக்கும்போதும்
கரும்புத் தோட்டத்திலும் வேலை செய்தவன்
சே
பதவி வேண்டாம் என்று
பொலிவியாவின் மலையொன்றில்
வீரச்சாவு அடைந்தவன்
பிடல்
பெண்பொறுக்கிதான்வென்றதால் போற்றப்படுகிறான்
ஈழத்தமிழனின் குருதியை
ஐ நாவில் கூட தண்ணீராய் பார்த்தவன்
கியூபாவின் விடுதலைப்போர்
ஈழப்போரின் கனதியில் ஒரு தூசு
இருந்தும்
அமெரிக்காவிற்கு சவாலாகவே இருந்தான்
அந்த வீரத்திற்கு
ஒரு மதிப்பை விரிக்கிறேன்
என் மரியாதை எப்போதும் என்னவனுக்குத்தான்

     
Share/Save/Bookmark

வியாழன், 27 அக்டோபர், 2016

கண்மூடியசகோதரர் "குழந்தைகளை"
கண்மூடமுன் பார்ப்பேனா?
நாடு இழந்தவனின் அவா Share/Save/Bookmark

செவ்வாய், 11 அக்டோபர், 2016

கடமையில் மூழ்கியிருந்தோம்

16/ 05/2009 , மாலை ஐந்து மணியிருக்கும் என ஊகிக்கிறேன். நானும் சுதர்சனும் காயமடைபவர்களுக்கு முதலுதவி செய்து கொண்டிருந்தோம். இரண்டு சுமார் பத்து,பன்னிரண்டு வயது சிறுவர்கள் தனித்தனி சிறு உருளை மூட்டை வடிவில் சேலையால் சுற்றி இரத்தத்துடன் விக்கி விக்கி அழுதபடியே தூக்கிபோனார்கள் . என்ன என்று வினவினேன். தாய் ஷெல்லில் வயிற்றோடு சிதைந்து போனதாகவும் நெஞ்சோடு தலையும் ,இடுப்போடு கால்களும் உள்ளதாக. நான் எங்களது பங்கரில் போட்டு மூடச்ச்சொன்னேன்.   இல்லை தங்களது தங்கையிற்கு காட்டவேண்டும் என்று நிலத்தில் படாமல் தூக்கியபடியே போனார்கள். நாங்கள் சர்வசாதாரணமாக எங்களின் கடமையில் மூழ்கியிருந்தோம்.    Share/Save/Bookmark

திங்கள், 10 அக்டோபர், 2016

போராடு! உழைப்பிற்கு ஊதியம்

உடன்பிறப்புகளே!
தோள்கொடுக்க முடியவில்லை
எம் தார்மீக ஆதரவு உங்களுக்குள்
யாரும் உங்களுக்காய் இல்லை
ஏணியாய் வாழ்ந்தது போதும்
சோராது பயணியுங்கள்
கூடவரமுடியவில்லை
மலையில் இறங்கும் அருவியில்
மாரியம்மன் பஜனையில்
சிலிர்த்து உரசும் காற்றில்
நாம் இருப்போம் உயிராக  
அன்புடன்


Share/Save/Bookmark

வெள்ளி, 7 அக்டோபர், 2016

இலங்கையில் தமிழ் அழியாது

இலங்கையில் தமிழர் என அடையாளப்படுத்துவோர், சிங்களவர் என அடையாளப்படுத்துவோர்,முஸ்லீம்கள் என அடையாளப்படுத்துவோர் வாழ்கின்றனர். காலப்போக்கில்   தமிழர் என அடையாளப்படுத்துவோர் தமது அடையாளங்களை  இழந்துபோனாலும் இலங்கையில் தமிழ் அழியாது தமிழ் பேசும் முஸ்லீம்கள் அதை வளர்த்துச்செல்வர் .தற்போது இலங்கையில் 30 % தமிழ் பேசுகிறார்கள் இன்னும் நூறு வருடத்தில் 45% தமிழ் பேசுவார்கள்.இன்னும் நூறு வருடத்தில்புலம் பெயர்ந்த தமிழ் சமூகத்தில் அரைவாசியாவது --? Share/Save/Bookmark

வியாழன், 15 செப்டம்பர், 2016

அநியாய உயிரிழப்புகள் நிறுத்தப்படவேண்டும்

விபத்துக்களும் அதனால் ஏற்படும் அநியாய உயிரிழப்புகளும் மிகுந்த கவலையை ஏற்படுத்துகிறது. குறிப்பாக சில இடங்களில் அதிக விபத்து ஏற்படுவதுபோல் உள்ளது (உ+ம்)பளை. விபத்துகள் அதிகம் நடக்கின்ற இடங்களில் வேகக்கட்டுப்பாடு இறுக்கமாக(குறிப்பிட்ட நேரங்களிலாவது) கடைப்பிடிக்கவேண்டும். வாகனத்தின் தரம்,எண்ணிக்கை , வீதிகளின் தரம்/ மாற்று வீதிகள் , சாரதி,மக்களின் விழிப்புணர்வு  என்பனவற்றில் அதிக கவனம் எடுத்து அநியாய உயிரிழப்புகள் நிறுத்தப்படவேண்டும்.
( வாகனமும் தரமாய் இருந்து வீதியும் தரமாய் இருந்தால் அதிக வேகத்தில் ஓடமுடியாது ஏனெனில் அந்த வீதியில் அந்த வாகனம் மட்டும் பயணிப்பதில்லை)      Share/Save/Bookmark

புதன், 14 செப்டம்பர், 2016

14/09/2016

நண்பா !
இன்றிரவே இறுதியாய் உணவருந்தினாய்
நாளை உன் யாகம்
தமிழன்னையின் பிள்ளை நீ
அன்றல்ல என்றும்தான் 


நெடுதூர பயணத்தில்
சூரியனை இழக்கையில்
அறிந்திருக்கவில்லை
நிலவும் இனி இல்லை என்பதை
தர்மம் சாவதில்லை
துயரக்கடலையும் தாண்டி
செங்கதிர்களாய் முளைக்கும்
விடிவெள்ளியாய் பூக்கும்   Share/Save/Bookmark

செவ்வாய், 30 ஆகஸ்ட், 2016

தரைமீன்கள்
Share/Save/Bookmark

ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2016

அரசியற்கைதி
Share/Save/Bookmark

வெள்ளி, 26 ஆகஸ்ட், 2016

இலங்கை


Share/Save/Bookmark

வியாழன், 25 ஆகஸ்ட், 2016

அரச பயங்கரவாதம்

Share/Save/Bookmark

புதன், 24 ஆகஸ்ட், 2016

நான் ஒரு கம்யூனிஸ்ட்
Share/Save/Bookmark

செவ்வாய், 23 ஆகஸ்ட், 2016

சீரழிவு
Share/Save/Bookmark

திங்கள், 22 ஆகஸ்ட், 2016

நல்லாட்சி
Share/Save/Bookmark

யாரிடம் குறையில்லை

நினைவுகளை எழுதலாம்
வரலாற்றுக்காக
புதியகாலத்தை இழக்காதே
அதையும் வரலாறாக்கு
பூச்சியத்தில் இருந்து இராச்சியம் வரை
தன்னம்பிக்கையை வளர்
முயன்றால் முடியாதது எதுவுமில்லை
மனிதரில் வேற்றுமையில்லை
எந்தக்குறையும் குறையல்ல
ஒரு கையே போதும் ஓவியனாக
குரல் ஒன்றே போதும் பாடகனாக
யாரிடம் குறையில்லை
யாருக்கும் துன்பம் நினையாதவன்
கடவுளை   தேடத்தேவையில்லை Share/Save/Bookmark

ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2016

அழுவதற்கும் அனுமதியில்லை
Share/Save/Bookmark

திங்கள், 25 ஜூலை, 2016

என்னை ஏன் தவிர்த்து/தவிக்க விட்டாய்?

"வாழ்க்கை "
வெறும் சக்கரம்தான்
பூமி அல்ல 


ஒவ்வொரு மனிதனும்
வெறும் தேர்வுதான்
அவன் அறியாமலே 


யாரிடமும் சொல்லாமல் வந்தேன்
சொல்வதற்கு யாருமில்லை
சொல்லவும் எதுவுமில்லை    

 
வீழ்ந்தவருக்கு
இயன்றவரை கைகொடுத்தேன்
நீ வீழும்போது நான் அருகிலில்லை
என்னை இயன்றவரை சபிக்கிறேன்
மனித நேசிப்பில் எப்போதும் உயர்ந்தவன் நீ
அர்ப்பணிப்பில் ஒரு பல்கலைக்கழகம் நீ
என்னை ஏன் தவிர்த்து/தவிக்க விட்டாய்?     

  


Share/Save/Bookmark

செவ்வாய், 19 ஜூலை, 2016

நரியை அலங்கரித்தால் "பரி" ஆகுமா?

சமாதான காலம்
முஸ்லீம் பிரமுகர்களுடான
புலிகளின் சந்திப்பு
கலால் உணவு
தொழுகைக்கான இடம்
இது தலைவனின் சிறப்பு
தனித்துவம் மீதான மதிப்பு

நாம் சிறுபான்மை
தனித்துவத்தை இழந்தால்
எம்மை இழந்துவிடுவோம்
தனித்துவத்தை குறிவைத்தே
சிங்களத்தின் ஒவ்வொரு நகர்வும்
நல்லிணக்கம் "பரஸ்பர புரிதல்"
உன்னை இழப்பதல்ல
கொலைகளுக்கு,காணாமல் செய்யப்பட்டவருக்கு
பதில் இல்லாமல்
நல்லிணக்கம் சாத்தியமா?
ஆரம்பம் இல்லாமல் முடிபு வருமா?
ஓட்டை வாளியில் நீர் நிரப்பலா?
நரியை அலங்கரித்தால் "பரி" ஆகுமா?           


Share/Save/Bookmark

வியாழன், 14 ஜூலை, 2016

நினைவுகள் வீடு திரும்புகின்றன
Share/Save/Bookmark

புதன், 13 ஜூலை, 2016

கோழையின் வீரம்
Share/Save/Bookmark

ஞாயிறு, 10 ஜூலை, 2016

இலங்கையின் இன நல்லிணக்கம்
Share/Save/Bookmark

சனி, 9 ஜூலை, 2016

என்னை நான் புரிகிறேன்

எனக்கு
நானே ஒரு புதிர்
தூண்டிலில் மீன் துடிப்பதை
நான் பார்க்க விரும்புவதில்லை
மீன் உணவு எனக்கு பிரியமானது

மனித உயிர்களை மதிப்பவன்
கொலைகளை வெறுப்பவன்
மனித விடுதலையே என் இலக்கு
எனக்குள் நானே ஒரு முரண்

மனித வேற்றுமைகள் என்னிடமில்லை
என் மக்களுக்காய் சாகத்துணிந்தேன்
சயனைட் குப்பிகளுடன் பலவருடம் வாழ்ந்தேன்
நீலமெனில் கடலும் வானமும் ஒன்றா?
என்னை நான் புரிகிறேன்
உலகம் எப்போது?Share/Save/Bookmark

ஞாயிறு, 3 ஜூலை, 2016

கைகூப்புகிறது மனம்

ஜூலை 5
எனக்குள் எரிகிறது நினைவுகள்
எரிய எரிய துலங்கும் முகங்கள்
வரிசையில் வந்து
குளிர்மை தந்துபோகின்றன
அந்த ஆத்மாக்கள் கூடிவாழும் திசையை
கைகூப்புகிறது மனம்
கனவுகள் கலைந்த நிஜத்தில்
கவலையை கழுவமுடியாமல்
நாட்கள் கி(க)ழிகின்றனகுறைப்பிரசவமாய்


நட்புச்சிறகு விரித்து
பறந்துபோனீர்
சொல்லியும் சொல்லாமலும்

இதயம்மட்டுமுள்ள
ஏழைமனிதன் நான்
இன்று என்ன செய்வேன் ?
Share/Save/Bookmark

சனி, 18 ஜூன், 2016

ஒரு இனத்தின் தற்கொலை
Share/Save/Bookmark

புதன், 8 ஜூன், 2016

எறும்புகள் சுமந்தன மலையை

எனக்குள்ளே இரகசியங்கள்
இரையாகிப்போகட்டும்
என்னோடு வாழ்ந்து பிரிந்த
விடுதலைக்கதிர்களின் நினைவில்
எஞ்சிய காலம் கொதித்து முடியட்டும்
வழியற்ற பொழுதுகளில் உண்ட
பழுதாகிய உணவின் சுவைகூட
சொர்க்கத்தில் எனக்கில்லையே
மரத்த வாழ்வில்
குளிர்மை வாழ்விற்கு
ஒன்றாய் வாழ்ந்த தோழர் இல்லையே
மக்கள் தன் மானிட நேயம் உறைந்ததால்
எறும்புகள் சுமந்தன மலையை
சில இறந்தது போக - மிகுதி
திசைக்கொன்றாய் அழுந்துகின்றன பாரீர்
  Share/Save/Bookmark

உணர்விழந்த நீதி "யுத்தகளத்தை மீளத்திறக்குமா" ?

உலகம் திருப்தி அடைந்திருக்குமா?
சகல ஆயுதங்களையும் பரீட்சீர்த்தபின்
எதிர்பார்த்திருக்குமா?
மூன்று இலட்சம் பேர்  தப்புவார்கள் என்று
 விமானம்,கடல்,தரையென
தடை செய்த நச்சு,கொத்துக்குண்டுகளுடன்  மூச்சாய்த்தாக்கியும்
உணவு,மருந்துத்தடையோடும் 
மூன்று இலட்சம் பேர்  தப்புவார்கள் என்று


 கோத்தா கதைவிட்டார்   எண்பதாயிரம் பேர்தான் உள்ளனர்
அவர் நினைத்ததுபோல் ஏன் கொல்லமுடியவில்லை?
உலகால் கைவிடப்பட்டவர் எப்படி?
 பதுங்குகுழி அமைப்பு போதனை,தொற்றுநோய்த்தடுப்பு
மருத்துவ அணியின் பங்களிப்பு
புனர்வாழ்வுக்கழகத்தின் கஞ்சித்திட்டம்
புலிகளின் குரலின் ஒத்துழைப்பு மக்களின் உறுதி
வர இருந்த பெரும் இழப்புகளை குறைத்தன


இழந்தது ஒன்றல்ல,இரண்டல்ல,பல ஆயிரம்
கொலைகாரர்கள் இன்னும் வாழ்கிறார்கள்
உணர்விழந்த  நீதி  "யுத்தகளத்தை மீளத்திறக்குமா"  ?

நீறு பூத்த நெருப்பாய் கிடக்குமா?


Share/Save/Bookmark

செவ்வாய், 7 ஜூன், 2016

அவனுக்கு சுடப்போகுதடா!

இதயபூமி-01(மண்கிண்டிமலை இராணுவமுகாம் தாக்குதல்), எனது sub main உம் பால்ராஜின் கட்டளைப்பீடமும் ஒன்றாகவே அமைந்திருந்தது.வெற்றித்தாக்குதலின்பின் மூன்று இராணுவத்தினர் பிடிக்கப்பட்டு கை,கால் கட்டப்பட்ட நிலையில் எமது நிலைக்கு
விடப்பட்டிருந்தார்கள் . எனக்கு பிளேன்ரி (Plain tea)  தரும்போது இராணுவத்தினருக்கும் கொடுக்கச்சொன்னேன். என் உதவியாளன் ஒரு இராணுவனுக்கு  பிளேன்ரி பருக்கதொடங்க பால்ராஜ் கண்டுவிட்டார். டேய் அவனுக்கு சுடப்போகுதடா! என்று கத்தினார். உதவியாளன் "ஆற்றிப்போட்டுத்தான் கொடுக்கிறன்" என்றான். அப்ப சரிடா என்றார்.  Share/Save/Bookmark

தவறுகளுக்கு தண்டனையில்லையேல் எதுவும் முற்றுப்புள்ளியில்லை

அடுத்தவனின் வலி
மற்றவனுக்கு ஆறுதல் அல்ல
எமது தாகம்
அடுத்தவரின் கண்ணீரால் தீராது
மருத்துவனுக்கு மனித உயிர்தான் பெரிது
அது யாருடையது என்பதல்ல

முள்ளிவாய்க்காலும்  கொஸ்கமவும்  ஒன்றல்ல
இராட்சத யானையும் கொசுவும்   - எனினும்
எரிகின்ற சுவாலையில்
மனம் ஏறி இறங்குகிறது
ஆறாத புண்
அடுத்தவரையும் ஆற்றுப்படுத்தாது
தவறுகளுக்கு தண்டனையில்லையேல்
எதுவும் முற்றுப்புள்ளியில்லை
இன்றைய போராட்டம்
எங்களுக்கும் அவர்களுக்குமானதல்ல
புத்தபகவானுக்கும் பிக்குகளுக்குமானது

பல ஆயிரம் மக்கள் இறந்தபோது
அவர்கள் கொண்டாடினார்கள்
கிரிபத்தோடும் வெடியோசையோடும்
நாங்கள் துளியளவும்கொண்டாடப்போவதில்லை
வலி அறிந்தவர் என்பதால் மட்டும் அல்ல
மனிதம் நிறைந்தவர் என்பதால் /
நல்ல தலைவனால் வளர்க்கப்பட்டவர் நாம்          
    


Share/Save/Bookmark

ஞாயிறு, 5 ஜூன், 2016

இம்மண்ணிற்ற்க்காய் மரணித்தவரிடம் மானசீகமாய் மன்னிப்பு கேட்ற்கிறோம்

இன்று பொன் சிவகுமாரனின் நினைவுதினம்.எமது போராட்டம் தோற்றிருக்கக்கூடாது. போராட்டதோல்விக்கு பல காரணங்கள்.அதில் முக்கிய அகக்காரணி : போராளியாகிய வீதம் போதாமை - சில குடும்பங்களே அதிக சுமையை சுமக்கவேண்டிய நிர்ப்பந்தம்.
இன்று எங்கள் இனம் மெல்ல மெல்ல அழிக்கப்பட்டுக்கொண்டு இருக்கிறது. உயிர் வாழும் நாம்    இம்மண்ணிற்ற்க்காய்   மரணித்தவரிடம் மானசீகமாய் மன்னிப்பு கேட்ற்கிறோம். எங்கள் இனம் தப்பவேண்டுமானால் சில தசாப்த வருடங்களுக்கு பிறகாவது எமது இனம் போராடவேண்டும். அதுவரை சிங்கள அரசோ இந்தியாவோ எம்பலத்தை விட்டுவைக்கும் என்று நான் நினைக்கவில்லை. அது பல கோணத்தில் தமிழ்த்தேசியத்தை அழித்துக்கொண்டு இருக்கிறது.எங்கள் மக்களைக்கொண்டும் தமிழ்த்தேசியத்தை அழிப்பது கவலை தருகிறது .Share/Save/Bookmark

சனி, 4 ஜூன், 2016

இறுதி உரையாடல்

தைமாதம் 2009 ஒரு இரவு ஆரம்பப்பொழுதில்  தலைவரைச் சந்தித்தோம்.
அப்பொழுது பரந்தனில் இராணுவம் இருந்தது. தலைவரின் நாம் சந்தித்த முகாமும் ஏற்றகனவே   விமானத்தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தது.நான்,ரேகா,அன்பழகன்,நடேசன் அண்ணைதமிழேந்தி அண்ணையும் சுமார் 3-4 மணிநேரம் ஒன்றாகயிருந்தோம்.   அன்று ஒன்றாகயிருந்து கொத்துரொட்டி சாப்பிட்டோம்.எனக்கு அண்ணையின் இடத்து கொத்துரொட்டி சரியான விருப்பம்.அண்ணைக்கும் தெரியும் .நான் அண்ணைக்கு அருகாமையில் இருந்தேன் .இதை ஒருக்கா சாப்பிடுங்கோ என்று வேறுவிதமாய் செய்த கொத்துரொட்டியையும் தனது கையால் எனக்கு பரிமாறினார்.அதுதான் அவருடன் ஒன்றாய் உணவருந்திய கடைசி நிமிடங்கள்.

 பின் புதுக்குடியிருப்பில் பொட்டம்மானுடன் தலைவரை சந்தித்தேன்.அதுதான் எனது தலைவருடனான  இறுதி உரையாடல். ஒரு மணித்தியாலத்திற்கு குறைவான நேர சந்திப்பு. கூடுதலாக மக்கள் பிரச்சனையைப்பற்றித்தான் கதைத்தார். நான் எங்களால் பயிற்றுவிக்கப்பட்டவர்களில் அரைவாசிக்கும் மேற்ற்பட்டவர்களை பொது மருத்துவமனைகளுடன் இணைத்துள்ளோம் என்பதை தெரிவித்தேன். தொற்று நோய்கள்வராமல் இயன்றவரை தடுப்போம் என்பதையும் தெரிவித்தேன். அம்பாறையில் அப்போது கடமையில் இருந்த மருத்துவர் வளர்பிறை என்னிடம்தான் மேலதிக மருத்துவ ஆலோசனைகளை பெறுவார். அவருக்குள்ள சில பிரச்சனைகளையும் நான் அண்ணையிடம் தெரிவித்தேன். அண்ணை சில உதவிகளை செய்ய பொட்டம்மானுக்கு கூறினார். இது இறுதியுரையாடலாய்   போனது துரதிஷ்டம்தான்.  


Share/Save/Bookmark

திங்கள், 30 மே, 2016

31/05/1981

31/05/1981 , ஈழத்தமிழர் வாழ்வில் மறக்கமுடியாநாள். "யாழ் நூலகம்"  தென் ஆசியாவில் தொன்மையான ,சிறப்புமிக்க  நூலகம் , சிறிலங்கா அரசால் திட்டமிட்டு அமைச்சர் ஒருவரின் தலைமையில் எரிக்கப்பட்ட நாள். 97000 ற்கும் அதிக நூல்களுடன் பல அரிச்சுவடிகளும் சாம்பலாயிற்று. வன பிதா தாவீது அவர்கள் செய்தி அறிந்து இடது நெஞ்சை பிடித்தபடி இறந்துபோனார்.

காமினி திசாநாயக்காவின் தலைமையில்த்தான் நூலகம் எரிக்கப்பட்டதாய் சொல்லப்பட்டது. சிறில் மத்தியு தலைமையில் காடையர்களால் மற்றவைகள் ( யோகேஸ்வரன் வீடு,ஈழநாடு பத்திரிகை 

காரியாலயம்,கூட்டணி காரியாலயம்,-----)  அழிப்பட்டதாய் சொல்லப்பட்டது.இராணுவம் ,போலிஸ்,சிங்கள காடையர்களுக்கு இந்த அமைச்சர்கள் தலைமை தாங்கினார்கள். அதே நேரம் அமைச்சர் லலித் அத்துலத் முதலியும் யாழ்ப்பானத்தில்த்தான் இருந்தார் . இந்த வன்செயல்கள் 2-3 நாட்கள் தொடர்ந்தன.    

1977 இல் தமிழர்கள் தனிநாட்டுக்கோரிக்கைக்கு முழு ஆதரவு  தந்தமையும் ஏற்றுக்கொள்ளமுடியா நூலக எரிப்பும்  பல இளைஞர்களின் பாதைகளை தீர்மானித்தது.Share/Save/Bookmark

ஞாயிறு, 29 மே, 2016

என் இனம் அழிக்கப்படும் கொடூரம்


உலகக்கண் முன்  
என் இனம் அழிக்கப்படும் கொடூரம்
இனி எந்த இனத்திற்கும்  நேர்ந்துவிடக்கூடாது

உலகமே!
நீயும்
ஏன் என் இனத்தை அழிக்கிறாய்?
உன் பிரதிநிதி யேசுவா? புருட்டசா?
நம்பியவரை நட்டாற்றில் விடுகிறாய்
வஞ்சகமாய் நஞ்சாய் கலக்கிறாய்
வாய்விட்டு அழுவதை வேடிக்கை பார்க்கிறாய்
வேஷங்களுடன் அத்தர் அடித்து வருவாய்
எங்களுக்கு
"உலகம் "நம்பிக்கையின் அச்சில் சுற்றவில்லை
கயிறாய் கழுத்தை சுற்றியிருக்கிறது
தேவையானபோது இறுகுகிறது

இனத்தின் கோடரிக்காம்புகள்
உணர்வதில்லை
தமக்கும் சேர்த்துத்தான் குழி தோண்டப்படுவதை

இன விசுவாசிகள்
தங்களுக்குள் அடிபட்டு
மாரித்தவக்கைகளாய் கிடக்கிறார்கள்

அப்பாவி மக்கள்
புலனாய்வு வலைக்குள் மீன்குஞ்சுகளாய்
அங்கும் இங்கும் ஓடிவிளையாடுகிறார்கள்    

தற்கால கவலையெல்லாம்
இன்னும் எத்தனைகாலம்
என் இனம் தாக்குப்பிடிக்கும்?
ஈழத்தில் மட்டுமல்ல புலத்திலும்தான்  
        


Share/Save/Bookmark

சனி, 28 மே, 2016

விடுதலைப்போராட்ட வரலாறு அதன் பங்காளிகளால் வழங்கப்படவேண்டும்.

 1991 ஆம் ஆண்டு ஆனையிறவு போருக்குப்பின் இயக்கமருத்துவர்களுக்கான ஒன்றுகூடல் ஒன்று தலைவருடன் நல்லூரில் அமைந்திருந்த சாளி முகாமில் நடைபெற்றது. அப்போது தமிழீழ மருத்துவ கல்லூரி ஒன்று ஆரம்பிக்கவேண்டும் என்ற முடிபு தலைவரால் எடுக்கப்பட்டது. நாங்கள் 30 பேருடன் ஆரம்பிப்போம் என்றபோது தலைவர் அவர்கள் 70-100 பேரை உள்ளீர்க்கவேண்டும் என்றதுடன் அதற்கான செயற்பாடுகளில் இறங்கி வழமைபோல் வெற்றிபெற்றார்.30 பெயரளவில் மருத்துவராக வெளிவருகையில் உண்மையில் தலைவரின் தீர்க்கதரிசனத்தை நான் உணர்ந்தேன். வரலாற்றில் தமிழன் தன்னை தானே ஆண்டது சில நூற்றாண்டுகளுக்கு பின்பானது. இனி எப்போதோ?தெரியவில்லை.புலிகளின் போராட்ட வரலாறு முதன்மையானது.அர்ப்பணிப்புகளால் புடம்போடப்பட்டது. காலத்தால் அழிக்கப்படமுடியாதது. இதற்குள் தமீழீழ மருத்துவக்கல்லூரியின் பங்களிப்பு ஒப்பற்றது.  அதன் போராட்டத்தோடு கலந்த வரலாறு முழுமையாக பதியப்படவேண்டும்.எங்கள் எதிர்கால சந்ததிகளுக்கு எமது விடுதலைப்போராட்ட வரலாறு அதன் பங்காளிகளால் வழங்கப்படவேண்டும்.             


Share/Save/Bookmark

உயிரிழந்த அப்பாவி மக்களுக்கு (எல்லா இன) அஞ்சலி

இயக்கத்தின் கட்டாய ஆட்சேர்ப்பு   2000 ஆம் ஆண்டுற்குப்பின்  முதலில் தென் தமிழீழத்திலும் பின் வன்னிக்கும் (2006) அமுலாயிற்று. உண்மையிலேயே தலைமையில் இருந்து எந்தப்போராளியும் விரும்பாத ஒன்று. ஆளணியின் பெரும் அளவிலான பற்றாக்குறை  இந்நிலைக்கு இயக்கத்தை தள்ளிவிட்டது. உண்மையிலேயே அந்நேரத்திலேயே எம்போராட்டம் தோற்றுவிட்டது. எமது போராட்டம் நியாயமானது, அர்ப்பணிப்புகள் நிறைந்தது . உண்மையானது. அது முழுமையாக எங்கள் மக்களுக்கானது. எங்கள் போராட்டத்தில் எங்களால் உயிரிழந்த அப்பாவி மக்களுக்கு (எல்லா இன) அஞ்சலி செய்து மன்னித்துவிட உளமாற இறைஞ்சுகிறேன்.       Share/Save/Bookmark

வியாழன், 26 மே, 2016

கிளிநொச்சியில் மீள்குடியேற்றம் ( 2001)

இரண்டாயிரம் ஆண்டளவில் சுமார் ஐந்து ஆண்டுகளுக்குப்பின் மக்கள் மீண்டும் கிளிநொச்சியில் மீள்குடியேற்றம். கிளிநொச்சி நகரத்திட்டமிடலில் இறுதி முடிவெடுக்கும் குழுவில் நானும் ஒருவன். சிலவிடயங்கள் எனது முடிவில் /பிடிவாதத்தில் நடந்தாலும் (உ+ம்:கிளி மருத்துவமனை), சிலவிடயங்கள் என் முடிவையும் தாண்டி நடந்தது. குழுவாய் சில வேலைகளை செய்யமுடியாது என்ற எண்ணம் எனக்குள் புகுந்தது.தமிழ்ச்செல்வன் அதைப்புரிந்து கொண்டார். பின் வேலைகள் ஒதுக்கப்படும்போது தனியாகவே எடுத்தேன்.
அறிவியல் நகரில் இயக்கத்திற்கு/எங்களுக்கு நிறைய கனவு இருந்தது. கிளிநொச்சி நகரில் இடத்திற்கு  இடம் ஒரேமாதிரி கடைகள் அமைக்கப்படவேண்டும் என நான் விரும்பினேன் .  Share/Save/Bookmark

திங்கள், 16 மே, 2016

இழப்பதற்கு எதுவுமில்லை என்ன பயம் உனக்கு?

கற்பனைக்கு எட்டா மாளிகை
இனி கட்டமுடியா மாளிகை
கல்லாயிற்று நேசித்தமண்ணோடு
17/05/2009

சதா
விடுதலைக்காய்
துடித்த இதயங்களை
இழந்த கொடுமையை

ஓருயிர் காக்கவே
எம் உயிர் வைப்பவர் நாம்
இத்தனை உயிர்களுக்கு பின்பும்

கொழுந்து விட்டு எரிகின்றன
அந்த குளிர்மையான நினைவுகள் - இன்று
மிருக பற்களுக்கு நடுவில்
வாழ்வதற்காய் துடிக்கும் இதயம்  

கண்கள் திறந்தபடி இரு(ற) ந்தவன் 
பார்த்துக்கொண்டே இருப்பான்
உடல்களை எரித்தாலும் ஆன்மா சாகாது
இலட்சியத்திற்குள் வாழும்  

 இருள் கூடக்கூட
பொட்டு வெளிச்சமும்
பிரகாசமாகும்
இழப்பதற்கு எதுவுமில்லை
என்ன பயம் உனக்கு?
  
Share/Save/Bookmark

திங்கள், 9 மே, 2016

நல்லிணக்கம் சாத்தியமா?

58,77,81,83--என
இனக்கலவரம் என்ற பெயரில்
நடந்த கொலை கொள்ளைகளுக்கு
யாருக்காவது தண்டனை வழங்கப்பட்டதா?
கொக்கட்டிச்சோலை படுகொலை உள்ளீடாய் நடத்தப்பட்ட
நூற்றுக்கும்  மேற்பட்ட திட்டமிட்ட படுகொலைகளுக்கும்
யாருக்காவது சிறை/தண்டனை/புனர்வாழ்வு?
இராணுவம்,கடல்,விமானப்படை போன்ற
பாதுகாப்புப்படைகளில்த்தான்
பெரும் குற்றவாளிகள்
சொகுசாக இருக்கிறார்கள்
சரணடைந்து காணாமல் போன
இளம்பரிதியின் இளைய மகளுக்கு
மூன்று வயது
நல்லிணக்கம் சாத்தியமா?  

முள்ளிவாய்க்காலில்  இனப்படுகொலை முற்று பெறவில்லை.இன்றும் கறையான் வடிவில் இனஅழிப்பு நன்கு திட்டமிட்டு நடக்கிறது. நடந்தது இனஅழிப்பு என்று ஒரு நாடும் வெளிப்படையாய் சொல்லவில்லை ஏனெனில் இனஅழிப்பு எனில் பாதிக்கப்பட்ட இனத்திற்கு சுதந்திரம் வழங்கவேண்டும். பலநாடுகள் தங்கள் நலனுக்காய் ஒரு பண்பாட்டு இனம் அழிந்துபோவதை மறைமுகமாயோ/நேரடியாயோ ஆதரிக்கின்றன.

போராடினாலும்
இல்லாவிட்டாலும்
இனம் அழியும்
போராடி வென்றால் மாத்திரமே
இனம் காக்கக்படும் 


Share/Save/Bookmark