சனி, 28 ஏப்ரல், 2012

எங்கள் ஒப்பற்ற தலைவன்

தலைவர் பிரபாகரன் நடைமுறை சாத்தியமான ஒரு உண்மை மனிதன் .அவரைப்பற்றி எழுத எனக்கு எந்த தகுதியும் இல்லைத்தான் இருந்தும் 
அவரை வேண்டுமென்றே பிழையாக எழுதுபவர்க்காய் இதை பகிர 
வேண்டியிருக்கிறது.
 தலைவர் இன மத மொழி சாதி பேதம் அற்றவர் .(அவர் நம்பியிருந்த பொறுப்பாளர்களை 
எடுத்துக்கொள்ளுங்கள் .அரசியல் துறைப்பொறுப்பாளரின்    
துணைவியார் சிங்கள இனத்தை சேர்ந்தவர்.அரசியல் 
ஆலோசகரின் துணைவி அவுஸ்த்ரேலியா நாட்டைச்சேர்ந்தவர் 
சர்வதேச பொறுப்பாளரின் துணைவி தாய்லாந்து நாட்டைச்சேர்ந்தவர்) .
அவர் நட்பிற்கு வரைவிலக்கணம்.விடுதலையில் விடாக்கொண்டர்.
மாவீரரை சதா நினைத்து வாழ்ந்தவர்.காலம் காலமாய் போராட்டத்தை 
விடும்படியும் பெரும்தொகை பணம் தருவதாயும் விடுதலை விலை 
பேசப்பட என்றும் விடுதலையை விற்காதவர்.மது,மாது ,சுகபோகவாழ்வு எந்த 
பலவீனங்களும் அற்றவர்.எப்போதும் மாற்றாய் இரண்டோ/ மூன்றோ 
உடைகளே அவரிடம் இருக்கும்.அவருக்கென்று யாரும் கொடுக்கும் 
பொருட்களை " இது இவனுக்கு நல்லா இருக்கும்இது  அவனுக்கு நல்லா இருக்கும் " என்று பகிர்ந்து 
கொடுத்து விடுவார்.எந்த கணமும் சாக தயாராய் இருந்த தலைவன் . 
தங்குமிடத்தில் யாராவது ஒரு போராளி
நோய்வாய்ப்பட்டாலும் அதை அறிந்து அடிக்கடி 
அவனைப்பற்றி கேட்டபடியே இருப்பார்.தான் சாப்பிட முதல் 
அவன் சாப்பிட்டானா?என்ன சாப்பிட்டான்?எவ்வளவு 
வேலைக்குள்ளும் இது குறையாது.அநேக கரும்புலிகள் 
கூட இவன் அருகில் இருந்துதான் சென்றிருக்கிறார்கள்.
எப்போதும் துப்பரவு,ஒழுங்கிற்கு முக்கியத்துவம் 
கொடுப்பவர்.இவரது கண் உருட்டலில் ,கண் சிவத்தலில் ,
புன்னகையில் ,முகமாற்றத்தில் இவர் உள் நினைப்பதை 
ஓரளவு புரிந்துகொள்ளலாம்.எப்போதும் ஏழைகளிலும் ,
அநாதைகளிலும் அதிக கரிசனை கொண்டவர்.    
இது சமாதானக்காலம் . சரணடைந்திருந்த /பிடிபட்ட
சிறிலங்கா இராணுவத்தினரை பார்க்க அவரது உறவினர்கள் 
வந்து போய்க்கொண்டிருந்தார்கள் . அவர்களை பார்க்க வந்த 
ஒரு சிறுமி தலைவரிடம் கொடுக்குமாறு கடிதத்துண்டு 
கொடுத்துவிட்டிருந்தாள்.அக்கடிதம் சிங்களத்தில் 
எழுதப்பட்டிருந்தது.என்ன எழுதிக்கிடக்குது?தலைவர் 
கேட்டார்.
அந்த சிறுமி எழுதி இருந்தாள்.தனது தந்தையை விடும்படியும் 
தான் அவரை சண்டைக்கு விட மாட்டேன் என்றும்.தலைவரின் 
கண்கள் ஒருமுறை சுழன்றது .இப்ப அந்த பஸ் வெளிக்கிட்டிருக்குமா?
இல்லை.வவுனியா பாதை எத்தனை மணிக்கு மூடுறது?
தன்னோடு நிற்கும் போராளி ஒருவரை அழைத்து ,நீர் போய்
அந்த பிள்ளையின் கையில அந்த தகப்பனை ஒப்படையும்.
போராளியின் மோட்டார் சைக்கிள் புறப்பட்டது.எனக்கு 
ஆச்சரியமாக இருந்தது .அந்த இராணுவ வீரன் எப்படிப்பட்டவன் 
என்று அவர் கேட்கவே இல்லை.நாங்கள் கதைத்துக்கொண்டிருக்கும் 
போதே சில மணித்தியாலங்களில் அந்த போராளி திரும்பி 
வந்தான்.சிறுமியின் நன்றிக்கடிதத்துடனும்,ஒப்படைத்தபோது 
எடுக்கப்பட்ட புகைப்படத்துடனும். 
2008 காலப்பகுதியில் ஒரு நாள் தலைவரின் தந்தையார்
என்னிடம் வந்திருந்தார்.ஒரு அதிசயம் நடந்ததை சொன்னார்.
தலைவர் அவர்கள் ஒரு நாள் வீட்டுக்கு போயிருக்கிறார்.
வீட்டில் சொல்லி இருக்கிறார்கள் இன்று தகப்பனாரின் 
பிறந்த நாளென்று.தலைவர் கேக் இருக்கா என்று 
வீட்டில் கேட்க எல்லா இடமும் தேடி ஒரு சிறுதுண்டு 
கேக் கிடைத்திருக்கிறது.தலைவர் அதை தூக்கிக்கொண்டு 
தகப்பன் தங்கியிருந்த அறைக்கு சென்றிருக்கிறார்.ஐயா 
இன்றைக்கு உங்கட பிறந்த நாளாம்.கேக்கை ஊட்டிவிட்டிருக்கிறார்.
தகப்பன் சொன்னார் வாழ்க்கையில இதுதான் முதல் தடவை என்று. 
தலைவரின் வீட்டுப்பெயர் துரை.
தகப்பன் சொல்லுவார் எழுபதுகளில ஒரு நாள் 
தான் துரையிட்ட சொன்னன் நீ வீட்டை வராத 
ஏனென்றால் உன்னைத்தேடி போலிஸ் வருகிது
உன்னால மற்ற ஆக்களுக்கு பிரச்சனை .தலைவர் 
அதற்கு பிறகு ஒரு நாளும் அந்த வீட்டுக்கு வரயில்லை .
பெற்றவளுக்கு சரியான கவலை.
தகப்பனார் மிகவும் நேர்மையானவர் கடவுள் பக்தி 
நிரம்பியவர் .  
தலைவர் சொல்லுவார் எங்களுடைய தேசத்தை
மீட்கோணும் ஆனால் எந்த காரணம் கொண்டும் 
சிங்கள மக்களுக்குரிய ஒரு இஞ்சிக் காணியைக்கூட  
நாங்கள் பிடிக்கக்கூடாது.முஸ்லீம் மக்கள் பிரிந்து 
வாழ விரும்பினால் அவர்களுக்கு ஒரு பகுதியை 
பிரிச்சுக்கொடுக்கோணும்.எல்லோரும் 
சுதந்திரமாய் வாழவேனும் என்பதில் உறுதியாய் 
இருந்தார்.மலையகமக்கள் மீது எப்போதும் 
அனுதாபமாய் இருந்தார்.அவர்கள் விரும்பின் 
வன்னியில் குடியேற வசதி செய்துகொடுக்க வேண்டும் 
என்ற எண்ணத்தில் இருந்தார்.     
மரக்கட்டிலில் பாய் விரித்து தலையணை அற்று
ஒரு நாளில் மூன்று மணி நேரம் உறங்கி எழுந்து 
விடுதலை என்ற குறிக்கோளிலேயே கண்ணாய்  
இருந்தார் எங்கள் தலைவர்.
இறுதியில் போர் உச்சமான நிலையில்
ஆளணி போதாமை பெரும் பிரச்சினையாயிற்று.
காயமடையும் மக்களுக்கான மருத்துவ சிகிச்சையை 
விடுதலைப்புலிகளின் மருத்துவப்பிரிவே தொண்ணூறு 
விகிதத்திற்கும் அதிகமாய் செய்தது.எந்த வேளையிலும் 
மக்களின் நலன் கருதி அந்த போராளிகளை களமுனைக்கு 
எடுக்கவில்லை.தன்னிடமிருந்த போராளிகளைக்கொண்டு 
ஆயிரம் சிறுகிணறுகளையும் ,மலசல கூடங்களையும் 
மாத்தளன் முள்ளிவாய்க்கால் பிரதேசங்களில் செய்து 
கொடுத்தார்.இறுதி நாட்களில் போராளிகளின் உணவை 
பிரித்து மக்களுக்கு கொடுக்க உத்தரவிட்டார்.
தம் மக்களில் அளவுகடந்த  அக்கறையை/பாசத்தை  
வைத்திருந்த மனித புனிதன் ஒரு தலை சிறந்த வீரன் .

                                                                -நிரோன்-Share/Save/Bookmark

வியாழன், 26 ஏப்ரல், 2012

வன்னிமகள் பாடுகிறாள்
Share/Save/Bookmark

புதன், 11 ஏப்ரல், 2012

ஞாபகம் வருதே

Share/Save/Bookmark

திங்கள், 9 ஏப்ரல், 2012

ஈழம் அழும் ஈன ஒலி கேட்கவில்லையா?

Share/Save/Bookmark

அன்புதர எம் அண்ணன் இல்லை
Share/Save/Bookmark

அன்புதர அண்ணன் இல்லை
Share/Save/Bookmark

ஈழப்பாடல்-03
Share/Save/Bookmark

ஈழப்பாடல் - 03

ஈழப்பாடல் - 03

இயற்றியவர் - சுருதி
பாடியவர்கள் - செல்வி,நிரோன் 


Share/Save/Bookmark

சனி, 7 ஏப்ரல், 2012

முஸ்லீம் மக்கள்

தமிழ்பேசும் முஸ்லீம் இளைஞர்கள் விடுதலைப்போராட்டத்தின் 
( 80 களில்) ஆரம்ப காலங்களில் போராளிகளாக விடுதலைக்கு 
உழைத்தார்கள் . சிலர் மாவீரர்களாய் எங்களுள் வாழ்கிறார்கள்.
அன்று யாழ் நகரில் வாழ்ந்த பலருக்கு கப்டன் பாரத்தை தெரிந்திருக்கும்.
அவன் யாழ் கோட்டையில் ஆக்கிரமித்திருந்த இராணுவத்துடனான 
மோதலில் வீரச்சாவு அடைந்திருந்தான்.
தமிழ் முஸ்லீம் உறவு முறிய யார் காரணம்?
1, தமிழ் பேசும் முஸ்லீம் இளைஞர்கள் பலர் ஸ்ரீலங்கா புலனாய்வுத்துறையில் 
இணைந்து கொண்டார்கள்.குறிப்பாக கொழும்பில் விடுதலைப் 
புலிகளை  அழிப்பதில் இவர்கள்கணிச பங்கு வகித்தார்கள்.
இதை முஸ்லீம் தலைவர்கள் எதிர்க்கவில்லை.
இந்த சிங்கள புலனாய்வுவலை யாழில் காலங்களாய் வசித்து 
வந்த முஸ்லிம் மக்களுக்குள் முஸ்லீம்புலனாய்வாளர்களை  
திணித்து முஸ்லீம் மக்களின் அமைதியை புடுங்கிற்று.அதிக 
முஸ்லீம் இளைஞர்களில் சிங்கள இராணுவத்துடனான தொடர்பு 
உறுதிப்படுத்தப்பட்டது .பலரை விசாரணைக்கும் தண்டனைக்கும் 
உட்படுத்த வேண்டியிருக்கும் .அதை தலைவர் விரும்பவில்லை.
அந்த சகோதர இனத்திற்கு வழங்கிய கௌரவ மாகவே அந்த இனத்திற்கு 
பாதிப்பில்லாமல் அனுப்பிவைக்க பணிக்கப்பட்டது.
2, மட்டக்களப்பில் முஸ்லீம்கள் சிங்கள இராணுவ பின்னணியில்,
அரசுடன் ஒட்டியிருந்த முஸ்லீம் அமைச்சர்கள் பின்னணியில் பல தாக்குதல்களை 
தமிழர் மீது மேற்கொண்டனர்.ஜிகாத் என்ற அமைப்பின் 
பேரிலும் பல தாக்குதல் சம்பவங்கள் உள்ளன.மட்டக்களப்பு 
தமிழ் மக்களுடன் கதைத்தால் தமிழ் மக்களின் மன பாதிப்பு 
அறியமுடியும். 
3, முஸ்லீம் தலைவர்கள் நேரிடையாய் தமிழருக்கு எதிராய் 
செயற்படுகிறார்கள்.அந்த உள் நோக்கத்துடன் சமீபத்தில் கூட ஜெனிவா வந்து 
சகோதர மிதியலை செய்தார்கள்.  
                                  எமது தலைவர் அவர்கள் முஸ்லீம் 
மக்களுக்கும் சரியான தீர்வு வழங்கப்படவேண்டும்.எங்களுக்கு 
ஏற்பட்ட நிலை அவர்களுக்கு வரக்கூடாது என்றும்,முஸ்லீம் 
மக்கள் யாழில் இருந்து அனுப்பிவைக்க பட்டமைக்கு வருத்தமுடன் 
எமக்கு வேறு வழி இருக்கவில்லை என்று சொன்னார்.Share/Save/Bookmark

புதன், 4 ஏப்ரல், 2012

உயிர்கள் பெறுமதியானவை

விடுதலைப்புலிகளின் தலைமை தனது இனத்தின் விடுதலை 
என்ற குறிக்கோளின் அச்சில் எப்போதும் சுழன்று கொண்டிருந்தது.
எந்த நாடுகளின் பின்னணியிலும் அது தங்கி இருக்கவில்லை.ஆனால் பல 
இயக்கங்கள் உருவாக வேறு நாடுகள் தமது நலனுக்காய் பின்னணியில் இருந்தன.இது எமது பலத்தை சிதறப்பண்ணியது.உண்மையிலேயே 
சகோதர மோதல்களை அருகு நாடே ஆரம்பித்து வைத்தது.பிரித்தாளும் 
தந்திரத்தை எமக்குள் பாய்ச்சி எம் விடுதலையை தடுத்தது.இன்று 
சகோதரயுத்தம் என்று நீலிக்கண்ணீர் வடிக்கிறது.விடுதலைப்புலிகளுக்கு 
விடுதலையை முன்னெடுக்க வேறு மார்க்கங்கள் வழங்கப்பட்டிருக்கவில்லை.
எமது போராட்ட பாதையின் நியாயங்களை ஏற்றுக்கொண்ட வேறு 
இயக்க போராளிகள் பலர் விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் 
இணைந்து போராடி வீரமரணம் அடைந்திருக்கிறார்கள்.பலர் போராளியாய் 
இல்லாவிட்டாலும் முள்ளிவாய்க்கால் வரை நின்று விடுதலைக்கு 
வேண்டிய பணி செய்திருக்கிறார்கள்.எந்த சந்தர்ப்பத்திலும் விடுதலைப்
போராட்டத்தை காட்டிக்கொடுக்காத , விடுதலைக்காக தமது காலத்தை அர்ப்பணித்த அனைவரும் அவர் எந்த போராட்ட இயக்கத்தில் இருந்தாலும் 
அவர்கள் போராளிகளே.விடுதலைக்காய் புறப்பட்டு விடுதலையை 
காட்டிக்கொடுக்காமல் மரணித்த அனைவரும் புனிதர்களே.

Share/Save/Bookmark

திங்கள், 2 ஏப்ரல், 2012

நன்கு பழகிய மனிதரில் எண்பது வீதம் மனிதர் இறந்துவிட்டனர்.

அவனது சின்ன வயது வாழ்க்கை என்ன அழகானது.பிற்காலம் இவ்வளவு
கடினமாய் இருக்கும் என்று அப்போது அவன் துளியும் எண்ணியதில்லை.
பாடசாலை வாழ்க்கையுடன் இனவிடுதலையின் அவசியமும்
பொறுப்பும் நெருப்பாய் பற்றிக்கொண்டது.மூதாதையர்கள்
விடுதலையை பெற்றுத்தந்திருந்தால் அவனினதும் அவன்
போன்றவரின் வாழ்வும் இனிமையாய் தொடர்ந்திருக்கும்.
இயக்க வாழ்வு மிகக்கடினமானது.ஆரம்ப காலங்களில் ஒவ்வொரு
நாளும் பல மைல் சைக்கிள் அடித்து கடமை செய்ய வேண்டி
இருந்தது.பின் இரவு பகல் நித்திரை துறந்து உழைக்க வேண்டி இருந்தது.
களமுனை அருகில் கடமையில் மயிரிழையில் பல தடவை
உயிர் தப்பினான்.கடின இராணுவ பயிற்சிகளை மீண்டும்
மீண்டும் எடுக்கவேண்டியிருந்தது.இயக்க வாழ்க்கையில்
அநேக காலங்கள் பொறுப்புகளை எடுத்து அதை சீராய்
முடிக்கவேண்டியிருந்தது.பொறுப்பு உடனான கடமை என்பது மிகவும் மன அழுத்தத்திட்குரியது.மாத்தையா,கருணா எதிர் 
நடவடிக்கைகளுக்கும் அவனுக்குரிய கடமை கொடுக்கப்பட்டிருந்தது.
தமீழத்தின் எல்லா பகுதிகளுக்கும் அவன் சென்றுவந்திருந்தான்.
நெடுந்தீவு தொடக்கம் அம்பாறை வரை அவன் தனது கடமையை 
சிறிதளவாவது செய்திருந்தான்.இன்று அவனது சுவாசப்பையில் 
புழுதி மண் சுவாசம் மூலம் வந்து படிந்து கிடக்கிறது.சுவாசம் 
கடினமாய் இருந்தாலும் உடலில் தான் நேசித்த மண் சேர்ந்திருப்பது 
சிறு சந்தோசத்தை கொடுக்கிறது.கண் மங்குகிறது.முன்பு நித்திரை கொள்ள நேரம் இருக்கவில்லை இப்போது நேரம் இருந்தும் நித்திரை வருகுதில்லை.நாரி நோவால் சில மணிநேரம் இருக்கவும் முடியவில்லை. மனம் இன்னும் இருவது வயது கூடியதாய் சலித்துவிட்டது.இயக்கத்தை தவிர ஏதும் தெரியாது 
வாழ்ந்ததால் அவனது உறவினர்கள் இப்போதும் கதைப்பதில்லை.
போராட்டத்திற்கு என்றும் ஒரு சிறு தீங்கும் செய்யவில்லை என்ற 
உணர்வு அவனிடம் மிஞ்சிக்கிடக்கிறது.நன்கு பழகிய மனிதரில் எண்பது 
வீதம் மனிதர் இறந்துவிட்டனர்.நாட்கள் சுமையாக எஞ்சிய நாட்களை 
கடந்து முடிக்கவேண்டி இருக்கிறது.


Share/Save/Bookmark