திங்கள், 15 அக்டோபர், 2012

மனிதன்

மனிதன் வாழும் காலத்தில்
அது இல்லை இது இல்லை
தேடி அலைகிறான்
சாகும் காலத்தில்
ஒ!இவ்வளவையும்
விட்டு போகிறேனே !
தேம்பி அழுகிறான் Share/Save/Bookmark

சனி, 13 அக்டோபர், 2012

உருவகக்கதை

அது ஒரு பெரிய குடும்பம்.அந்த குடும்ப நீட்சியில் பேரன் பேத்தி பூட்டன் பூட்டி தாய் தகப்பன் எல்லாருமே
உண்டு.அந்த பூர்வீகக் குடும்பத்தின் பாதுகாப்பு கேள்விக்குறியான போது
குடும்பத்தை காக்க ஒருவனே அர்ப்பணிப்பாய் உழைத்தான்.அவனுக்கு
குடும்பத்தின் தாய் முழு ஆதரவு கொடுத்தாள்.  இன்னும் சிலரும் சேர்ந்து
உழைத்தனர்.இன்னும் சிலர் எதிரியோடு இணைந்து செயட்ப்பட்டனர்.
அந்த ஒருவன் இறுதிவரை உழைத்தான்.குடும்பத்தின் பெருமையை
உலகெங்கும் பரப்பிவிட்டு ,உலக வஞ்சனைக்கு எதிரான சமரில்
நிரந்தரமாய் கண்மூடினான்.Share/Save/Bookmark

வியாழன், 4 அக்டோபர், 2012

போலிச் சிங்கத்தின் பிடரி மயிர் சிலிர்த்தது எப்படி?
இறைக்க இறைக்க 
கிணற்றில் மட்டுமல்ல 
கண்களிலும் நீர் வற்றிப்போயிற்று
துயரப்பெருங்கடலில் 
அலைகளாய் 
உடல்களற்ற தலைகள் எழுந்தன 
உறைந்த குருதியை 
மாலையாக்கிய போலிச் சிங்கத்தின் 
பிடரி மயிர் சிலிர்த்தது எப்படி?
நவீன உலகம் 
புலியை கொல்ல காட்டை எரித்தது 
அதனால்  அனைத்தும் எரிந்தது 
 போலிச் சிங்கத்தின் 
பிடரி மயிரும் சிலிர்த்தது

உலகமயமாக்களில் கரைந்து,
காணாமல் போயிற்று 
எம் வாழும் சுதந்திரம் 
Share/Save/Bookmark