செவ்வாய், 26 ஜூன், 2012

துரோகிகளின் பாடல்




Share/Save/Bookmark

வாக்குமூலம்


இன்றைக்கு எப்படிஎன்டாலும் அவனோடை கதைக்கோணும் .
அவன் என்னை தன்னுடன் கதைக்குமாறு என் நண்பன் ஊடாக 
தெரியப்படுத்தியிருந்தான்.அவன் யார் என்று ஓரளவு புரிந்தாலும் 
அவனது முகம் ஞாபகத்திற்கு வரவில்லை.அவன் ஒரு இளம் 
போராளி 2007அல்லது 2008இல் இடுப்பில் காயப்பட்டு இடுப்பிற்கு கீழ் 
இயங்காது.அவன் இப்போது வவுனியா ஆஸ்பத்திரியில 
இருக்கிறான் .
தம்பி எப்படியிருக்கிறீங்கள்?
அண்ணா நீங்களா?சந்தோசம் அண்ணை.நீங்கள் எப்படியும் 
கதைப்பீங்கள் என்று எதிர்பார்த்தனான் .  
அண்ணை படுக்கைப்புண் வந்து இப்ப அது பெருத்து 
வலது இடுப்பெலும்பு முழுசாய் உக்கிற்றுது.சரியான 
வலி அண்ணை .ஒரு ஊசிக்கும் கேக்குதில்லை.இரண்டு 
சிறுநீரகமும் பழுதாய்போச்சு .நாளைக்கே கதைக்கேலாமல் 
போகலாம் என்று சொல்லீனம். எப்படியிருக்கிறீங்கள்? 
இருக்கிறம் தம்பி நாளைக்கு சாகப்போறவனிட்ட என்னத்தை 
சொல்லுறது?வீட்டுக்காரர் எப்படி ? கதையை மாற்றுவதட்காய்
கேட்டேன்.  
  எனக்கு ஒரு அண்ணன் தான் அவன் வேலை செய்யுறான்.
அப்பாக்கு தொய்வு வருத்தம் தானே .அம்மா இடைக்கிடை 
வருவா விபூதியோட .அதுகளுக்கு என்னால கஷ்டம்.
அங்க இருந்திருந்தால் எனக்கு பிரச்சனை இல்லை .இன்னும் 
கொஞ்சக்காலம் இருந்திருப்பன்.அப்படி வேற ஆக்களால 
பார்க்க ஏலாது .நான் கரும்புலி மேஜர் சிறிஅண்ணை மாதிரி 
சாதிச்சிருப்பன்.இப்ப வீணாய் சாகப்போறன்.
தொடர்ந்து கதைத்தான் .நான் கதைக்க வார்த்தைகளை 
தேடிக்கொண்டிருந்தேன்.
அண்ணை எங்களுக்கு இயக்கத்தைத்தவிர யாரைத்தெரியும்?
எங்கட ஆட்கள் எல்லாம் கஷ்டப்படுறாங்கள்.முந்தி எங்களுக்கு 
பந்தம்பிடிச்ச கொஞ்சம் இப்ப அவனுக்கு பந்தம் பிடிக்குது. 
எங்கட சிலதும் ஆமியோடையும் ஒட்டுக்குழுவோடையும் 
திரியுது.கடைசி நேரத்தில கொஞ்சம் பங்கருக்குள்ள தானே 
ஒளிச்சிருந்ததுகள் அதுகள் தான்.விடாமல் கதைத்துக்கொண்டிருந்தான்.
இடைக்கிடை அண்ணை உங்களுக்கு ஏதும் வேலை இருந்தால் 
நிற்பாட்டுங்கோ என்றும் சொன்னான். பாவம் அவன் இப்ப 
அவனோட கதைக்காட்டி எப்ப அவனோட கதைக்கிறது.
அண்ணை முந்தி நாங்கள் இருந்தமாதிரி ஒருநாளாவது 
வாழோணும் என்று ஆசையாய் இருக்கு.நான் மேல 
போனால் உங்கட பெடியலிட்ட சொல்லுவன் அண்ணை 
உங்களுடன் கதைச்சன் எண்டு. என்னைப்பற்றி நான் 
உங்களுக்கு தெரியப்படுத்திட்டன் அண்ணை .எனக்கு 
மாவீரர் கல்லறையும் இல்லை இறுதி மரியாதையும் 
இல்லை பிரச்சனையில்லை அண்ணை.இடைக்கிடை 
இப்ப உடம்பெல்லாம் வலிக்குது என்று சொல்லிக்கொண்டிருந்தான்.
கதைத்துக்கொண்டிருக்கும் போதே அவனது தொலைபேசி 
நின்றுவிட்டது .பின் அவனுடன் தொடர்புஏற்படுத்த முயன்றேன்.
வெற்றியளிக்கவில்லை.அடுத்தஇரண்டாம்நாள்அவன் இறந்துவிட்டதை
நண்பன்தெரியப்படுத்தினான்.அவனது தகனம் வவுனியாவில் 
நடந்ததாகவும் தான் உட்பட ஆறு பேர் பங்குபெற்றியதாய் 
அறியப்படுத்தினான். 
என் உளவளசிகிச்சையாளர் என்னை எழுத 
தூண்டுகிறார்.அதனால் எழுதவேண்டியிருக்கிறது.

-நிரோன்-   
  



Share/Save/Bookmark

ஞாயிறு, 24 ஜூன், 2012

சுஜோவின் ஹைக்கூ/விடுகதைக்கவிதைகள்


1,பசுமையான வயல்கள்
நெல்நாற்றுக்குப்பதில் களைகள்
வன்னி 

2, தாயில்லாமல் நானில்லை :ஆசியா
நாயில்லாமல் நானில்லை :ஐரோப்பா 
சா இல்லாமல் நாளில்லை :ஈழம் 

3, ஈழத்தில் யாவும் செம விலை 
ஒன்று மட்டும் இலவசம் 
மரணம்  


4,ஈழத்தில் - அகாலமாய் 
தாயும் செத்திற்று சேயும் செத்திற்று
நாயும்செத்திற்று - " சமத்துவம்" 

5, அறளைபெயர்ந்து சிங்க கொடி பிடிக்கவில்லையாம் 
தான் ஆடாமல் பிடித்ததாம் 
சம்மந்தம்(ன்) சம்மந்தம் இல்லாமல்  

6, சிறிலங்காவில 
எல்லா அபிவிருத்தியிலையும் 
பசிலுக்கு பங்காம் - வெறும் பத்து வீதம் 

7, சுக துக்கங்களை காவும் 
காலத்தின் அடையாளம் 
கடிதம் 

8, சுதந்திரம் அற்ற மண்ணில் 
அபிவிருத்தி 
வேட்டியில்லாமல் சூடும் முடி 

9,
அரசனோ/ஆண்டியோ 
நேசிக்கும் ஒற்றை உயிர் 
அம்மா 

10,
 வாழ்வின் அச்சாணி 
வெற்றிக்குப் போடும் உரம் 
நம்பிக்கை 


11,
வீட்டை ஆளுவார் நாயில்லை 
கண்டிப்போடு வாழ்வார் சட்டம்பியல்ல 
படித்த /படிக்காத மேதை " தந்தை" 

12,
தன் முகம் கூட பார்க்க உதவும் 
அடி உதை அண்ணன் தம்பி யாரும் 
இவனைப்போல் உதவுவதில்லை"மூக்குக்கண்ணாடி" 


13,
இரவையும் இரவையும் இணைக்கும் 
ஒளிர்புள்ளி 
சூரியன் 

14,
இனத்தையும் விடுதலையையும் 
இணைக்கும் ஒளிர்புள்ளி 
தலைவன் 

15,
சாப்பாடு கொடுத்தவர் 
சாப்பாட்டுக்கோப்பையில்
மலம் கழிப்பவன் : துரோகி 

16,
தன்னலம் துறந்து 
பிறர்க்காய் வாழ்பவன் 
போராளி 

17,
ஐ நா உண்டு ,ICRC உண்டு 
உலகை நம்பி சரணடைந்தது மனம் 
"விட்டில் பூச்சிகள் "

18,
ஈழத்தில்தமிழர்கள் "உதைபந்து"
முஸ்லீம்கள் கறையான்கள்
சிங்களர் முதலை/திமிங்கிலம்    
19,
வெளியில் காவியுடை 
உள்ளே காக்கியுடை
கபடக் கலாநிதிகள் "பிக்குகள்" 
20,­
அம்மா 
குழைத்துத்தரும் சோறு உருண்டை 
பூரணை 

21,
எப்போதும் சுற்றித்திரியும் பூமியல்ல 
சுவர் இருக்கும் உணர்விருக்கும் 
ஆனால் சுற்றித்திரியும் "மனம்" 

22,
மனிதர்களை கட்டிப்போட்டிருக்கும் .
கயிறு இல்லை ,அதற்கு உருவமுமில்லை 
அதுவாழ்வின் பெறுமதி "பாசம்"

23,

விபூதி போல மூன்றுகுறி 
உள்ளமோ இனிக்கும் 
"ஹைக்கூ" கவிதை  

24,
கடவுளை கல்லில் /கல்லாய் 
உருவாக்கினான்மனிதன் 
மனிதனின்கடவுள் மனம் 
25,

மதங்கொண்ட யானை போல் 
மதம் - போதனைகள் 
நூலறுந்த பட்டமாய் 

26,

மேசையும் கதிரையும்தான் வேணுமாம் 
பால் கோப்பிதான் விருப்பமாம் 
கலப்புத்திருமணம் வேணாமாம்  

27,
எந்த பாகுபாடும் ,எதிர்பார்ப்பும் அற்று 
எப்போதும் கூட இருக்கும் 
ஒலியின் மூலம்"காற்று "அர்ப்பணிப்பு "மாவீரம்"  

28,
கண்கள் தூண்டில்கள் 
சிக்குகின்றன மீன்கள் 
காதல்

29,
ஒப்பந்தம் இடப்படுகிறது 
ஆட்சி மாறுகிறது 
பதிவுத்திருமணம் 

30,
அலைக்கழிகின்றன குதிரைகள் 
கடிவாளம் இடப்படுகிறது 
திருமணம் 

32,
இடி மின்னல் முழக்கம் நெருப்பு 
மழை நீராய் ஓடிற்று குருதி 
முள்ளிவாய்க்கால் 

33,
கரைவலையில் துடிக்க துடிக்க 
மீன்பிடிப்பதுபோல் - எம் பிள்ளைகளை 
பிடித்தது "சுனாமி"

34,
இதயவெளியை
உழுது தொலைக்கிறாள் காதலி 
"பரீட்சை"  

35,
சுதந்திரம் கேட்டனர் ஈழத்தமிழர் 
சுதந்திர நாடுகள் கொடுத்தன 
"தர்ம அடி "

36,
பூமித்தாயிட்கு தலை சாய்க்கிறது 
நெற்கதிர் - தாய்மண்ணுக்கு 
அர்ப்பணமாகின்றன வித்துடல்கள்  

37,
நீ அடிக்கப்போனால் விடமாட்டார்கள் 
உன்னை யாரும் அடிக்கவந்தால் 
மறிக்கமாட்டார்கள் - ஐ நா சபை  

38,
குழந்தைஈனும் 
பரிசோதனைக்குழாய் உடன் 
போட்டிபோடுகிறது "குப்பைத்தொட்டி"

39,
சமாதானம்பேசிசாகடிப்பார்கள் 
நடுநிலை நாடுகள் -இப்போது புருட்டஸ் 
தனி மனிதனல்ல,நாடுகளின் கூட்டு 

40,

பூமிக்கு மலேரியா நடுக்கம் 
பூகம்பம் . வானத்தின் கொலரா 
வெள்ளம் 

41,
பேச்சுவார்த்தை முறிந்தது 
ரணகளமாயிற்று வாழ்வு  
கலைந்தது குளவிக்கூடு 

42,
மழைத்துளியும் கண்ணீர்த்துளியும் 
கவிதையும் ஓலமும் 
அகதி மனதில் ஈழம் 

43,
தற்கொலை தற்கொலை செய்யும் 
உறுதிவேண்டும் - கைகள் அற்றும் 
காலால் எழுதும் போராளி 

44,
மகிழுந்தை மாடு இழுக்கிறது 
செத்த பூனையை எலி உண்கிறது  
சூரியகிரகணம் 

45,
மனிதனை இயக்கும்,தட்டி எழுப்பும் 
மூன்று கால் இயங்கு சக்கரம் 
கடிகாரம் 

46,
பாத்திர அடியில் துளையிட்டு 
நீரால் பாத்திரம் நிரப்ப பாசாங்கு 
இனப்பிரச்சனைத்தீர்வு   

47,
உடைந்த கண்ணாடியில் 
முகம் பார்த்தல் 
வறுமை 

48,
அட்சய பாத்திரம் 
ஓட்டையாயிற்று
சிசுக்கொலை  

49,
குழப்ப விரும்பா 
குளவிக்கூடு 
மாமி மருமகள் உறவு   

50,
இரவு வேலைக்காரன் 
பகலில் கவனிப்பாரில்லை   
தெருவிளக்கு 


51,
குருவிகள் தான் பொரித்தகுஞ்சுகளுடன் 
எரிந்து பொசுங்கின 
"முள்ளிவாய்க்கால்" 


Share/Save/Bookmark

ஞாயிறு, 17 ஜூன், 2012

மகிந்த கில்லாடி


பூனைக்கு விளையாட்டு 
சுண்டெலிக்கு உயிர் போகிறது 

மகிந்த சொல்கிறார் 
சமாதான பட்டம் 
உயர உயர பறப்பதாய்
மக்கள் சொல்கிறார்கள் 
ஆயுள் 
குறைந்து குறைந்து போவதாய்

மகிந்த கில்லாடி 
அவருக்கு தெரியும்
உலகையும் ஏமாற்றி 
உயிருடன் 
கொல்வது எப்படி என்று
அதற்குத்தான்
சமாதான வேஷம் 




Share/Save/Bookmark

சனி, 16 ஜூன், 2012

பிடில் வாசிக்கும் உலகம்


தமிழருடன் புத்தபகவான் 
சிங்களவருடன் பிக்குகள் 
குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க 
முஸ்லீம்கள் 

அழகிய நாடு 
பிணக்குவியல்களால்
அமிழ்கிறது 
ஜனாதிபதி 
பிணாதிபதியானார்     
காவியுடையில்   
சாக்கடைத் துர்நாற்றம் 
அர்ச்சனைத்தட்டில் 
துப்பாக்கிச் சன்னங்கள் 
பிடில் வாசிக்கும் உலகம்  




Share/Save/Bookmark

வியாழன், 14 ஜூன், 2012

வீரம் இயல்பாய்ஊறும் மண்


அரச பயங்கரவாதம் 
வீரர்கள் துயிலும் இல்லங்களை 
கோழையாய் அகன்றது 
இந்த நிலத்தில் 
வீரம் இயல்பாய்ஊறும்
என்று அறியாமல்     




Share/Save/Bookmark

உண்மையில் எமது போராட்டம் தமிழ் முஸ்லீம் மக்களுக்கானது.

முஸ்லீம் மக்கள் விடுதலைப்போராட்டத்திட்கு குறிப்பிடக்கூடிய 
பங்களிப்பை செய்யவில்லைத்தான் அதேநேரம் போராட்ட 
பின்விளைவால்பேச்சுவார்த்தை வரும்போது அப்பேச்சுவார்த்தையில் 
தமக்கும் அதிகாரம் தரவேண்டும் ,தமிழர்களுக்கு தீர்வு கொடுத்தால் 
தமக்கும் ஒரு தீர்வு தரவேண்டும் என கேட்பதையும் நிறுத்தாமல் 
தமிழர்களுக்கு தீர்வு போகக்கூடாது என்பதில் கவனமாக 
இருக்கிறார்கள்.தமிழர்களின் போராட்டத்தை அழிக்க
புலனாய்வாளர்களாக அரசுக்கு பெரிய அளவில் கைகொடுத்தார்கள். .ஜிகாத்,ஊர்காவல் படை வேசத்தில் பல தமிழர்களை
கொண்றதுடன் தமிழர்களின் சொத்துக்களையும் 
அபகரித்தார்கள்.தெற்கில் நடந்த தமிழருக்கு எதிரான 
இணக்கலவரங்களில்க்கூட தமிழரின் சொத்துக்களை 
சூறையாடும் தொழிலை கச்சிதமாய் செய்தார்கள். 
தமிழர் நிலங்களை சிங்களவர் ஆக்கிரமித்தது போல் இவர்களும் 
செய்தார்கள் .இப்போதும் இலச்சத்திட்கு மேல்தமிழர்களைக் கொண்ற
போர்க்குற்றவாளிகளை காக்கவே முஸ்லீம் தலைமைகள் 
துட்டு வாங்கி குரல் கொடுக்கின்றன.இருந்தாலும் தமிழர்களுக்கென்று ஒரு தீர்வு வரும்போது 
இவர்களுக்கும் ஒரு தனிஅலகுகொடுக்கப்படவேண்டும் என 
விடுதலைப்புலிகளின் தலைமை விரும்பிற்று.
தமிழர்களில் கணிசமான மக்கள் தளத்திலும் சரி புலத்திலும் சரி 
போராட்டத்திற்கு குறிப்பிடக்கூடிய பங்கு வகிக்கவில்லை 
அவர்கள் தம் குடும்பத்துடன் சுருங்கி சுயநலனில் வாழ்ந்தார்கள் 
ஆனால் அவர்கள் விடுதலைக்கு எதிரானவர்கள் அல்ல.ஆனால் 
போராளிகள் எல்லோருக்குமாகத்தான் போராடினார்கள் .விடுதலை 
எல்லோருக்குமானது.இப்போதும் குறிப்பிடக்கூடிய மக்கள்தான் 
விடுதலைக்கு குரல் கொடுக்கிறார்கள்.உழைக்கிறார்கள்.இது 
எல்லா விடுதலைக்கு போராடிய நாட்டிலும் நடப்பதுதான்.
எங்கள் மண்ணில் சற்று அதிகம்.
உண்மையில் எமது போராட்டம் தமிழ் முஸ்லீம் மக்களுக்கானது.  


Share/Save/Bookmark

திங்கள், 11 ஜூன், 2012

எனது பாடல்



Share/Save/Bookmark

ஞாயிறு, 10 ஜூன், 2012

நண்பர்கள்

குமாரும் ராஜாவும் நல்ல நண்பர்கள் .சிறுவயது முதலே 
ஒன்றாய் படித்தும்,ஒன்றாய் விளையாடியும் வந்தார்கள் .
குமார் வகுப்பில் எப்போதும் முதல்தான்.
ராஜா கடைசிப்பிள்ளைக்கு போட்டிபோடுவான்.
இருவரும் அவர்களது கிளித்தட்டு அணியில் 
ஒன்றாக விளையாடுவார்கள் .ஒரு தடவை யாழ் 
மாவட்டத்தில் நடந்த திறந்த கிளித்தட்டுப்போட்டியில் 
அரையிறுதிவரை வந்திருந்தார்கள். அரையிறுதியில்  
உடுவில் ஐக்கிய விளையாட்டுக்கழகத்திடம் தோற்றுப்போனார்கள். 
உடுவில்ஐக்கிய விளையாட்டுக்கழகமே சாம்பியனாகவும் 
வந்தது.அவர்கள் அப்போது மிகச்சிறந்த அணியாக இருந்தார்கள்.
குமார் பொறியியல்பீடத்திற்கு தெரிவாகி பொறியியலாளராகி 
அரசசேவைக்குள் உள் நுழைந்தான்.ராஜா பாராளமன்ற உறுப்பினருக்கு 
பதினையாயிரம் ரூபா பணம் கொடுத்து எழுதுவினைஞர் சேவைக்குள் 
உள் நுழைந்தான்.ராஜா இப்போது அமைச்சரின்செயலாளராய் 
இருக்கின்றான்.அந்த அமைச்சுக்கு கீழ்தான் குமாரும் வேலை செய்கிறான்.
சில அனுமதிகளுக்கு ராஜாவிடம்தான் செல்ல வேண்டும்.அவர்கள் 
நண்பர்கள் என்பதால் பிரச்சனை இல்லை.ஆனால் ராஜா தனக்கு 
அமைச்சரால் பிரச்சனை என்று சொல்லிக்கொள்கிறான்.அமைச்சர் 
அரசியலுக்கு வருமுன் பேக்கரி நடத்திவந்திருந்தார்.இப்போது 
அவருக்கு நிறைய சொத்துகள் .அமைச்சர் பெரிய வாகனதிருத்துமிடமும் 
வைத்திருக்கிறார்.அமைச்சின் அனைத்து வாகனமும் அங்குதான் 
சேர்வீஸ்,திருத்தத்திற்குப் போகும் பெரும் கொள்ளை.ராஜா 
அமைச்சர் சொல்வதை எல்லாம் செய்யோணும்.குமாரும்,
ராஜாவும் இந்த வருடம் ஓய்வு பெறுகிறார்கள்.இருவருக்கும் 
ஓய்வு பெறுவதில் துளியும் கவலையில்லை.
-நிரோன்-


Share/Save/Bookmark

சனி, 9 ஜூன், 2012

கல்லுப்பாதையில் ஒரு வண்டிலில் பயணம்


இந்தப்பயணம் 
ஒரு வாழ்வின் 
தவிர்க்கமுடியா பயணம் 
கல்லுப்பாதையில்
ஒரு வண்டிலில் பயணம் 


Share/Save/Bookmark

வெள்ளி, 8 ஜூன், 2012

என்னவள் கமரா விழிகள் சங்கமித்த புள்ளிகள்







Share/Save/Bookmark

செவ்வாய், 5 ஜூன், 2012

ஒரு அநாதையின் விமான பயணம்

அவனுக்கு ஐம்பது வயதிற்கு கிட்ட இருக்கும்.
அவன் அவனது முன்னைய நிறையிலிருந்து ஒரு 
இருபது கிலோவாவது குறைந்திருப்பான்.அவன் இப்போது 
கட்டுநாயக்காவில் விமானத்தில் ஏறிவிட்டான்.அவனுக்கும் 
தான் கொலை வளையத்தில் இருந்து தப்பியதான உணர்வு 
வருகிறது.விமானம் புறப்பட அவனது கண்களும் குளமாயிற்று.
அவன் முன்பொரு தடவையும் விமானத்தில் வெளிநாடு 
போயிருக்கிறான்.அப்போது அவன் இயக்கம் அதிக 
கற்பனைகளோடு போனான்.நல்ல எல்லா விடயங்களையும் 
நாட்டிற்கு கொண்டுபோக வேண்டும் என்ற அவாவே அவனிடம் 
இருந்தது.அந்த நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு சென்று 
இருக்கும் படி தலைமை கேட்டது.அவனோ சாட்டுச்சொல்லி 
மூன்று மாதத்தில் தாய் மண்ணுக்குஓடிவந்தான்.மீண்டும் மீண்டும் 
வெளிநாடு செல்ல தலைமை கேட்டுக்கொண்டே இருந்தது.
அவனுக்கு தாய் மண்ணை பிரிய துளியும் மனமில்லை.இன்று 
தாய் மண் சொந்தமில்லை.வெளிக்கிடத்தான் வேண்டும்.
அவனால் என்ன செய்யமுடியும். 
அவனது இளமைக்காலம் முழுவதும் இயக்கப்பணி
செய்தான்.பயிற்சிக்காலத்தில் கூட அவனுக்கு என்று 
ஒரு பொறுப்பான பணி இருக்கும்.இயக்க வாழ்வில் 
அவனது அநேக இரவுகள் விழித்தே இருக்கும்.
எவ்வளவு சந்தோசமான வாழ்வாகினும் மனதினுள் சுமை 
ஒன்று அழுத்திக்கொண்டே இருக்கும்.ஆனால் அவன் 
புத்துணர்ச்சியோடு இயங்கிக்கொண்டே இருப்பான்.
நோய் நொடி என்றாலும் அவனுக்கு ஓய்வு இல்லை.    
இன்று அவனை கவலைகள் ஒன்றன் பின்
ஒன்றாக அழுத்திக்கொண்டிருக்கிறது.அவனோடு 
ஒன்றாக வாழ்ந்து பிரிந்துபோன அத்தனை உயிர்களும் 
இன்றுஅவனுக்கு சுமையாகப்போயிற்று.மிகுதி காலத்தை 
என்ன செய்யப்போகிறான்.
இரண்டு மாதத்திற்கு முன்பு ஒரு நாள் முள்ளிவாய்க்காலில் அவன்
கண்ணீர் விடவேண்டிவந்தது.அன்று அவனுக்கு ஒரு சிறு 
பிஸ்கட் பெட்டி நண்பன் மூலமாய்க்கிடைத்திருந்தது.
காயமேற்ற வந்த கப்பலில் வந்தவர்களால் அது கொடுக்கப்பட்டிருந்தது.
அவன் தனது வேலை முடித்து அருகில் இருந்த தரப்பாளுக்கு
அருகில் போய் அங்கு திரியும் சிறுவர்களைத்தேடினான். 
யாரையும் காணவில்லை.பங்கர்களுக்குள் இருக்கவேண்டும்.
ஒருவன் எத்துப்பட்டான்.அவனுக்கு பிஸ்கட் பெட்டியை 
உடைத்து ஒரு பிஸ்கட்டை கொடுத்தான்.பின் மளமளவென்று 
பிள்ளைகள் வந்தார்கள்.அவன் எதிர்பார்த்ததைவிட அதிக 
பிள்ளைகள் ஒவ்வொருவராய் கொடுக்க பெட்டி முடிந்தது.
அவனுக்கும் சந்தோசமாய் இருந்தது.சில நிமிடங்களில் 
ஒரு ஆறு வயது மதிக்கக்கூடிய சிறுமி அதைவிட சின்னப்பொடியனை
இழுத்துவந்தாள். மாமா எங்களுக்கு அவனுக்கு என்ன சொல்வது 
புரியவில்லை.அந்தப்பிள்ளைகளின் தாயும் தந்தையும் 
சில நாட்களுக்குமுன்தான் ஷெல் இற்கு பலியாகி இருந்தார்கள்.
தனது தம்பிக்காவது குடுங்கோ அவள் கெஞ்சினாள். அவனிடம் 
கொடுக்க எதுவும் இல்லை.அவர்களோடு அவனும் அழுதான்.      
இன்னும் சில மணிநேரத்தில் 
சிங்கப்பூரில் இறங்குவான்.சிங்கப்பூரில் யாரையும் 
அவனுக்குத்தெரியாது.இரண்டு ,மூன்று வெளிநாட்டுதொலைபேசி 
இலக்கத்தை தவிர அவனிடம் ஒன்றும் இல்லை.
தாயின் ஞாபகம் வருகிறது.அவன் வீட்டிற்கு மூத்த பிள்ளை .
அவன் வீட்டிற்கு எந்த உதவியும் செய்திருக்கவில்லை.
இருந்தாலும் தாய் அவனைப்புரிந்து கொள்வாள்.ஐம்பது 
வயதில் அவன் வெளி நாடு போய் அவனால் என்ன முடியும்?
இருபத்தைந்து வருடமாய் அவர்களதுவயல் விதைக்காமல் இருக்கிறது. 
தாய் பாவம் அநேகரின் தாய்களைப்போல .
சிங்கப்பூர் விமானநிலையத்தில் இறங்கி ஒவ்வொரு தடையையும்
தாண்டி வெளியில் வந்து ஒரு இருக்கையில் குந்தினான்.இந்த 
இருக்கையில் அவன் எவ்வளவு நேரமும் இருக்கலாம்எங்க 
போறதென்று முடிவெடுக்கும்வரை.விமானங்கள் வந்து இறங்கும் 
போதும் ஏறும் போதும் நெஞ்சு படபடத்து ஊரின் ஞாபகம் உயிரை 
எடுத்தது..

-நிரோன்-



Share/Save/Bookmark
Bookmark and Share