ஞாயிறு, 24 ஜூன், 2012

சுஜோவின் ஹைக்கூ/விடுகதைக்கவிதைகள்


1,பசுமையான வயல்கள்
நெல்நாற்றுக்குப்பதில் களைகள்
வன்னி 

2, தாயில்லாமல் நானில்லை :ஆசியா
நாயில்லாமல் நானில்லை :ஐரோப்பா 
சா இல்லாமல் நாளில்லை :ஈழம் 

3, ஈழத்தில் யாவும் செம விலை 
ஒன்று மட்டும் இலவசம் 
மரணம்  


4,ஈழத்தில் - அகாலமாய் 
தாயும் செத்திற்று சேயும் செத்திற்று
நாயும்செத்திற்று - " சமத்துவம்" 

5, அறளைபெயர்ந்து சிங்க கொடி பிடிக்கவில்லையாம் 
தான் ஆடாமல் பிடித்ததாம் 
சம்மந்தம்(ன்) சம்மந்தம் இல்லாமல்  

6, சிறிலங்காவில 
எல்லா அபிவிருத்தியிலையும் 
பசிலுக்கு பங்காம் - வெறும் பத்து வீதம் 

7, சுக துக்கங்களை காவும் 
காலத்தின் அடையாளம் 
கடிதம் 

8, சுதந்திரம் அற்ற மண்ணில் 
அபிவிருத்தி 
வேட்டியில்லாமல் சூடும் முடி 

9,
அரசனோ/ஆண்டியோ 
நேசிக்கும் ஒற்றை உயிர் 
அம்மா 

10,
 வாழ்வின் அச்சாணி 
வெற்றிக்குப் போடும் உரம் 
நம்பிக்கை 


11,
வீட்டை ஆளுவார் நாயில்லை 
கண்டிப்போடு வாழ்வார் சட்டம்பியல்ல 
படித்த /படிக்காத மேதை " தந்தை" 

12,
தன் முகம் கூட பார்க்க உதவும் 
அடி உதை அண்ணன் தம்பி யாரும் 
இவனைப்போல் உதவுவதில்லை"மூக்குக்கண்ணாடி" 


13,
இரவையும் இரவையும் இணைக்கும் 
ஒளிர்புள்ளி 
சூரியன் 

14,
இனத்தையும் விடுதலையையும் 
இணைக்கும் ஒளிர்புள்ளி 
தலைவன் 

15,
சாப்பாடு கொடுத்தவர் 
சாப்பாட்டுக்கோப்பையில்
மலம் கழிப்பவன் : துரோகி 

16,
தன்னலம் துறந்து 
பிறர்க்காய் வாழ்பவன் 
போராளி 

17,
ஐ நா உண்டு ,ICRC உண்டு 
உலகை நம்பி சரணடைந்தது மனம் 
"விட்டில் பூச்சிகள் "

18,
ஈழத்தில்தமிழர்கள் "உதைபந்து"
முஸ்லீம்கள் கறையான்கள்
சிங்களர் முதலை/திமிங்கிலம்    
19,
வெளியில் காவியுடை 
உள்ளே காக்கியுடை
கபடக் கலாநிதிகள் "பிக்குகள்" 
20,­
அம்மா 
குழைத்துத்தரும் சோறு உருண்டை 
பூரணை 

21,
எப்போதும் சுற்றித்திரியும் பூமியல்ல 
சுவர் இருக்கும் உணர்விருக்கும் 
ஆனால் சுற்றித்திரியும் "மனம்" 

22,
மனிதர்களை கட்டிப்போட்டிருக்கும் .
கயிறு இல்லை ,அதற்கு உருவமுமில்லை 
அதுவாழ்வின் பெறுமதி "பாசம்"

23,

விபூதி போல மூன்றுகுறி 
உள்ளமோ இனிக்கும் 
"ஹைக்கூ" கவிதை  

24,
கடவுளை கல்லில் /கல்லாய் 
உருவாக்கினான்மனிதன் 
மனிதனின்கடவுள் மனம் 
25,

மதங்கொண்ட யானை போல் 
மதம் - போதனைகள் 
நூலறுந்த பட்டமாய் 

26,

மேசையும் கதிரையும்தான் வேணுமாம் 
பால் கோப்பிதான் விருப்பமாம் 
கலப்புத்திருமணம் வேணாமாம்  

27,
எந்த பாகுபாடும் ,எதிர்பார்ப்பும் அற்று 
எப்போதும் கூட இருக்கும் 
ஒலியின் மூலம்"காற்று "அர்ப்பணிப்பு "மாவீரம்"  

28,
கண்கள் தூண்டில்கள் 
சிக்குகின்றன மீன்கள் 
காதல்

29,
ஒப்பந்தம் இடப்படுகிறது 
ஆட்சி மாறுகிறது 
பதிவுத்திருமணம் 

30,
அலைக்கழிகின்றன குதிரைகள் 
கடிவாளம் இடப்படுகிறது 
திருமணம் 

32,
இடி மின்னல் முழக்கம் நெருப்பு 
மழை நீராய் ஓடிற்று குருதி 
முள்ளிவாய்க்கால் 

33,
கரைவலையில் துடிக்க துடிக்க 
மீன்பிடிப்பதுபோல் - எம் பிள்ளைகளை 
பிடித்தது "சுனாமி"

34,
இதயவெளியை
உழுது தொலைக்கிறாள் காதலி 
"பரீட்சை"  

35,
சுதந்திரம் கேட்டனர் ஈழத்தமிழர் 
சுதந்திர நாடுகள் கொடுத்தன 
"தர்ம அடி "

36,
பூமித்தாயிட்கு தலை சாய்க்கிறது 
நெற்கதிர் - தாய்மண்ணுக்கு 
அர்ப்பணமாகின்றன வித்துடல்கள்  

37,
நீ அடிக்கப்போனால் விடமாட்டார்கள் 
உன்னை யாரும் அடிக்கவந்தால் 
மறிக்கமாட்டார்கள் - ஐ நா சபை  

38,
குழந்தைஈனும் 
பரிசோதனைக்குழாய் உடன் 
போட்டிபோடுகிறது "குப்பைத்தொட்டி"

39,
சமாதானம்பேசிசாகடிப்பார்கள் 
நடுநிலை நாடுகள் -இப்போது புருட்டஸ் 
தனி மனிதனல்ல,நாடுகளின் கூட்டு 

40,

பூமிக்கு மலேரியா நடுக்கம் 
பூகம்பம் . வானத்தின் கொலரா 
வெள்ளம் 

41,
பேச்சுவார்த்தை முறிந்தது 
ரணகளமாயிற்று வாழ்வு  
கலைந்தது குளவிக்கூடு 

42,
மழைத்துளியும் கண்ணீர்த்துளியும் 
கவிதையும் ஓலமும் 
அகதி மனதில் ஈழம் 

43,
தற்கொலை தற்கொலை செய்யும் 
உறுதிவேண்டும் - கைகள் அற்றும் 
காலால் எழுதும் போராளி 

44,
மகிழுந்தை மாடு இழுக்கிறது 
செத்த பூனையை எலி உண்கிறது  
சூரியகிரகணம் 

45,
மனிதனை இயக்கும்,தட்டி எழுப்பும் 
மூன்று கால் இயங்கு சக்கரம் 
கடிகாரம் 

46,
பாத்திர அடியில் துளையிட்டு 
நீரால் பாத்திரம் நிரப்ப பாசாங்கு 
இனப்பிரச்சனைத்தீர்வு   

47,
உடைந்த கண்ணாடியில் 
முகம் பார்த்தல் 
வறுமை 

48,
அட்சய பாத்திரம் 
ஓட்டையாயிற்று
சிசுக்கொலை  

49,
குழப்ப விரும்பா 
குளவிக்கூடு 
மாமி மருமகள் உறவு   

50,
இரவு வேலைக்காரன் 
பகலில் கவனிப்பாரில்லை   
தெருவிளக்கு 


51,
குருவிகள் தான் பொரித்தகுஞ்சுகளுடன் 
எரிந்து பொசுங்கின 
"முள்ளிவாய்க்கால்" 


Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக